6 TH STD TAMIL-4 TH WEEK MODEL LESSON PLAN(22-11-21 TO 26-11-21)

6 TH STD TAMIL-

4 TH WEEK MODEL LESSON PLAN

(22-11-21  TO 26-11-21) 


நாள்                         :           22-11-2021   முதல்  27-11-2021                                      

வாரம்                     :         நவம்பர் -  நான்காம் வாரம்

வகுப்பு                  :            ஆறாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 1 முதல் 3


நோக்கம்  :

Ø  பாடலை நிறைவு செய்தல்

Ø எதிர்ச்சொல் எழுதுதல்

Ø உரைநடைப் பகுதியில் இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல்

கற்றல் விளைவுகள்:

Ø கற்பனையின் அடிப்படையில் கதைகள், கவிதைகள், கடிதங்கள் எழுத அனுமதித்தல், அவற்றை ஊக்குவித்தல்.

Ø ஒருவர் மொழியின் நுட்பமான கூறுகளை மனத்தில் கொண்டு தங்களுக்கான சொந்த மொழியைக் கட்டமைத்தல்.

Ø மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்துக் கொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø இனிய ஓசையை தரும் சொற்களைக் கொண்டு பாடலை நிறைவு செய்தல்.

Ø பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து பாடலை நிறைவு செய்தல்.

Ø சொற்களை முறைப்படுத்தி பாடலை நிறைவு செய்தல்

Ø சொற்களுக்கு நேர் எதிரான சொற்களை தேர்ந்தெடுத்தல்.

Ø பத்தியில் காணும் எதிர்ச்சொற்களை இனம் காணல்.

Ø செய்யுளில் காணப்படும் சொற்கள் எதிர்ச்சொற்கள் எழுதுதல்.

Ø எழுவாய்,பயனிலை,செயபடு பொருள் அறிதல்

Ø தொடரில் எழுவாய்,செயபடுபொருள்,பயனிலை பற்றி அறிதல்

Ø எழுவாய் – பெயர்ச்சொல்

Ø பயனிலை – வினைச்சொல்

Ø செயபடு பொருள் – தொடரில் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்

Ø சொற்களின் பொருள் அறிய அகராதியை பயன்படுத்துதல்.

Ø அகராதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனக் கூறல்.

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்

தொடர்பணி:

Ø மாணவர்களின் கற்பனைக்கு ஏற்ற கதை / கட்டுரை /பாடல் எழுதி வருமாறுக் கூறல்

Ø  எதிர் எதிர் பொருள் தரும் பொருட்களை சேகரித்து வருமாறுக் கூறல்

Ø  எழுவாய்,செயபடுபொருள்,பயனிலை வைத்து தொடர் அமைத்து எழுதுக.

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை