9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17-07-2023 முதல் 21-07-2023)
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தண்ணீர் (விரிவானம்)
2.துணை வினைகள் (இலக்கணம்)
1.கற்றல் நோக்கங்கள் :
@ துணைவினைகளை முறையாகப் பயன்படுத்துதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற சிற்றூர்கள் நீர்ப்பற்றாக்குறையால் அவதிப்படுவதை நீங்கள் அறிவீர்களா?எனக்கேட்டு மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
Ø கடுமையான குடிநீர்த்தட்டுப்பாடு
@ மக்களின் அவல நிலை
@ தொடர்வண்டியில் ஏறி தண்ணீர் பிடித்தல்
@தண்ணீர் பிடிப்பதற்குள் தொடர்வண்டி கிளம்புதல்
@ தாயின் தவிப்பு
@ தனிவினை,கூட்டு வினை
@ முதல் வினை,துணை வினை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø தண்ணீர் சிறுகதையை மெய்ப்பாடுகளுடன் சுவைபடக் கூறுதல்.
Ø துணை வினைகளை உரிய சான்றுகளுடன் தெளிவாக விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
தண்ணீர்
7.மாணவர் செயல்பாடு:
Ø நீரின்மையால் மக்கள் படும் அவலங்களைப் புரிந்து கொள்ளுதல்
Ø அன்றாடப் பேச்சு வழக்கில் துணைவினைகள் பயன்படும் இடங்களைப்பற்றி அறிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
Ø தண்ணீர் சிறுகதையை இயற்றியவர் யார்?
Ø துணைவினை என்றால் என்ன?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@