8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 5
திருக்கேதாரம் (பக்க எண்: 95 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காட்டிலிருந்து வந்த_____ கரும்பைத்தின்றன.
அ) முகில்கள் ஆ) முழவுகள் இ) வேழங்கள் ஈ) வேய்கள்
2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கனகச் + சுனை ஆ) கனக + சுனை இ) கனகம் + சுன ஈ)கனம் + சுனை
3. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) முழவுதிர ஆ) முழவுதிரை இ) முழவதிர ஈ) முழவுஅதிர
குறுவினா
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
விடை: புல்லாங்குழல் , முழவு
சிறுவினா
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனைசெய்கிறார்?
விடை:
v பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
v கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ணநீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளைவாரி இறைக்கும்.
v நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளைவாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.
சிந்தனைவினா
விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.
விடை: மக்களை மகிழ்விக்கவும், பக்திப்பரவசம் பெருகவும், களிப்பினால் அனைவரும் கவலையை மறக்கவும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், விழாக்களைப்பற்றி அறிவிக்கவும் இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும்.
பாடறிந்து ஒழுகல் (பக்க எண்: 97 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை.
அ) பிரிந்தவர்க்கு ஆ) அலந்தவர்க்கு இ) சிறந்தவர்க்கு ஈ) உயர்ந்தவருக்கு
2. நம்மை_____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை ஆ) அகழ்வாரை இ) புகழ்வாரை ஈ) மகிழ்வாரை
3. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
அ) சிறை ஆ) அறை இ) கறை ஈ) நிறை
4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பாட் + அறிந்து ஆ) பா+ அறிந்து இ) பாடு + அறிந்து ஈ) பாட்டு + அறிந்து
5. முறை+ எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) முறையப்படுவது ஆ) முறையெனப்படுவது இ) முறைஎனப்படுவது ஈ) முறைப்படுவது
குறுவினா
1. பண்பு, அன்பு ஆகியவைபற்றிக் கலித்தொகைகூறுவன யாவை?
விடை :
v பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
v அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்
2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகைகூறும் விளக்கம் யாது?
விடை:
v நீதிமுறைஎனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனைவழங்குதல்.
v பொறுமை எனப்படுவது தம்மைஇகழ்வாரையும் பொறுத்தல்.
சிறுவினா
நமக்கு இருக்கவேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
விடை:
ü இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
ü பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
ü பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
ü அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
ü அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
ü செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
ü நிறைஎனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
ü நீதிமுறைஎனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனைவழங்குதல்.
ü பொறுமைஎனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.
நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்
சிந்தனைவினா
வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
விடை: பொறுமை , அடக்கம், பணிவு, ஒழுக்கம், முயற்சி
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் (பக்க எண்: 97 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை______.
அ) கல்வெட்டுகள் ஆ) செப்பேடுகள் இ) பனையோலைகள் ஈ) மண்பாண்டங்கள்
2. பானை______ ஒரு சிறந்தகலையாகும்.
அ) செய்தல் ஆ) வனைதல் இ) முடைதல் ஈ) சுடுதல்
3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) மட்டு + மல்ல ஆ) மட்டம் + அல்ல இ) மட்டு + அல்ல ஈ) மட்டும் + அல்ல
4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) கயிற்றுக்கட்டில் ஆ) கயிர்க்கட்டில் இ) கயிறுக்கட்டில் ஈ) கயிற்றுகட்டில்
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. முழுவதும் – மழையில் எனது உடல் முழுவதும் நனைந்தது
2. மட்டுமல்லாமல் – ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் தொழிற்கல்வியும் கற்க வேண்டும்.
3. அழகுக்காக – மனிதர்கள் அழகுக்காக அணிகலன்களை அணிவர்.
4. முன்பெல்லாம் – முன்பெல்லாம் கல்வி மகிழ்ச்சியானதாக இருந்தது.
குறுவினா
1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
விடை: அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம்.
2. மண்பாண்டம் , சுடுமண்சிற்பம் - ஒப்பிடுக.
விடை:
ü களிமண்னால் குடம். தோண்டி உழக்கு போன்ற பாத்திரம் போன்று உபயோகப்படும் பொருட்கள் மண்பாண்டம் எனப்படும்.
ü களிமண்ணால் செய்யப்படும் பொம்மைகள்: வீட்டு அலங்காரப் பொருட்கள் சுடுமண் சிற்பங்கள் எனப்படும்.
ü இவை இரண்டும் களிமண்ணால் செய்யப்பட்டு, காய்ந்ததும் சூளையில் சுட்டு எடுக்கப்படும்.
3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
விடை: விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் ஆகும்
சிறுவினா
1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
விடை:
v முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.
v சூடான நிலையில் நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையில் செலுத்தி வளைக்கவேண்டும்.
v வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும். இவ்வாறே பிரம்பால் பொருட்களைச் செய்ய இயலும்
2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
விடை:
ü மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்களைச் செய்யலாம்.
ü மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.
ü பிறந்த குழந்தைக்குத் தொட்டில் முதல், இறந்தவரை சுமந்து செல்லும் பாடை பயன்படுத்தப்படுகிறது.
நெடுவினா
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
விடை:
v அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும்.கலையைக் கைவினைக்கலை என்று அழைப்பர்.
v தமிழகத்தில் பழங்காலந் தொட்டே இக்கலை வளர்ந்திருக்கிறது. கைவினைக்கலைக்கு சான்றாக இருப்பது, மண்பாண்டங்கள் ஆகும்.
v சிந்துசமவெளி, ஆதிச்சநல்லூர் செம்பியன் கண்டியூர்; கீழடி போன்ற பகுதிகளில் செய்த அகழ்வாய்வில் மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
v களிமண்ணால் உருவாக்கப்படும் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் போன்றவை முதன்முதலில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் ஆகும்.
v மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள், கோரைகளால் செய்யப்படும் பொருட்கள், பிரம்பால் செய்யப்படும் பொருட்கள், பனையோலையால் செய்யப்படும் பொருட்கள் இவையனைத்தும் கைவினைப் பொருட்கள் ஆகும்.இதனால் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் நிகழாது.
v மரப்பொம்மைகள்,சந்தனமாலைகள்சங்கு,இதுமட்டுமல்லாது. கிளிஞ்சல்களால் செய்யப்படும் காகிதப்பொம்மைகள், பொருட்கள் அத்தனையும் கைவினைப் பொருட்கள் ஆகும்,
v அரசு கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. கைவினைக் கலைஞர்களுக்கான சிறுதொழில் கடன் வசதியும் அளித்து வருகிறது.
v அரசு அழகும், நலமும் வாய்ந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை வாங்குவோம்! கைவினைக் கலைக்கு உயிர் தருவோம்!
சிந்தனைவினா
கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.
விடை:
v கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக பூமியில் விளையும் இயற்கைப் பொருள்கள் எப்பொழுதும் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காதவை.
v களிமண் இயற்கையாக நிலத்தில், ஏரி கரைகளில், குளக்கரையில், நன்செய் நிலப்பகுதியில் இயற்கையாக கிடைக்கும் பொருள் இப்பொருளால் உருவாக்கப்படும் கைவினைப்பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு யாதொரு பாதிப்பும் இல்லை.
v பனையோலை, தென்னை கீற்று, மரக்கட்டை, இலவம்பஞ்சு, தேங்காய் சிரட்டை, தேங்காய் நார் இவற்றால் உருவாக்கப்படும் கைவினைப்பொருட்களால் சூழலுக்கு யாதொரு பாதிப்பும் இல்லை.
v இவை அனைத்தும் நிலத்தில் போட்டாலும் எளிதில் மக்கக் கூடியவை மண்ணை வளப்படுத்துவன பொருட்களைச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத கைவினைப்விரும்புவோம்!
தமிழர் இசைக்கருவிகள் (பக்க எண்: 109 மதிப்பீடு)
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக
முன்னுரை:
மக்களின் மனதிற்கு எழுச்சியைத் தருபவை இசைக்கருவிகள், கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.
காற்றுக் கருவிகள்:
காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.
சூழல் :
குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில் மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும் பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர்.
கொம்பு:
கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர், அதுவே, பின்னாளில் 'கொம்பு' என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன. வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில் இசைக்கப்படுகின்றது.
சங்கு:
சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும் வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, "வலம்புரிச் சங்கு என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் 'பளரிலம்' என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கிளை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.
முடிவுரை:
அழித்து வரும் இவ்வகைக் காற்று இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக்கற்று, அதனைப்பயன்படுத்த வேண்டும்.
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் (பக்க எண்: 114
மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சொற்களுக்கு இடையேவேற்றுமை உருபு மறைந்து வருவது _____.
அ) வேற்றுமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) அன்மொழித்தொகை
2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை.
அ) வினை ஆ) பண்பு இ) அன்மொழி ஈ) உம்மை
3. ‘கண்ணா வா!’- என்பது _____த்தொடர்.
அ) எழுவாய் ஆ) விளி இ) வினைமுற்று ஈ) வேற்றுமை
பொருத்துக.
1. பெயரெச்சத்தொடர் - கார்குழலி படித்தாள்.
2. வினையெச்சத்தொடர் - புலவரேவருக.
3. வினைமுற்றுத்தொடர் - பாடி முடித்தான்.
4. எழுவாய்த்தொடர் - எழுதிய பாடல்.
5. விளித்தொடர் - வென்றான் சோழன்.
விடை: 1 - ஈ , 2 - இ , 3 - உ , 4 - அ , 5 - ஆ
சிறுவினா
1. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவையாவை?
விடை:
இத்தொகைநிலைத்தொடர்
1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகைஎன ஆறுவகைப்படும்.
2. இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.
விடை: உம்மைத்தொகை - சொற்களின் இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.
3. அன்மொழித்தொகையைஎடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை:
சான்று : பொற்றொடி வந்தாள். (தொடி-வளையல்)
இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத்தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்தபெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது. இதில் ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமைஉருபும் ‘ஆகிய’ என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண்என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைஎனப்படும்.
இவ்வாறு வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மைஆகிய தொகைநிலைத் தொடர்களுள்,
அவைஅல்லாதவேறு பிறசொற்களும் மறைந்து வருவது
அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை)
எனப்படும்.
மொழியை ஆள்வோம் (பக்க எண்: 115)
கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.
1. இடி உடன் மழைவந்தது.
2. மலர்விழி தேர்வின் பொருட்டு ஆயத்தமானாள்.
3. அருவி மலையில் இருந்து வீழ்ந்தது.
4. தமிழைக் காட்டிலும் சுவையான மொழியுண்டோ!
5. யாழ், தமிழர் உடைய இசைக்கருவிகளுள் ஒன்று
பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி.
விடை: உடுக்கை, உறுமி , கணப்பறை , தவண்டை, தவில், நாகசுரம், படகம், மகுடி
பின்வரும் இணைச்சொற்களை வகைப்படுத்துக.
உற்றார் உறவினர், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேல், ஆடல்பாடல், வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.
நேரிணை |
எதிரிணை |
செறியிணை |
உற்றார் உறவினர் |
விருப்பு வெறுப்பு |
கன்னங்கரேல் |
வாடிவதங்கி |
காலை மாலை |
நட்டநடுவில் |
பட்டிதொட்டி |
ஆடல்பாடல் |
|
|
மேடுபள்ளம் |
|
|
உள்ளும்புறமும் |
|
சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.
( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )
1. சான்றோர் எனப்படுபவர் கல்விகேள்வி களில் சிறந்தவர் ஆவர்.
2. ஆற்று வெள்ளம் மேடுபள்ளம் பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் போற்றிப்புகழப்பட வேண்டியவர்கள்.
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ஈடுஇணை இல்லை
5. திருவிழாவில் யானை ஆடிஅசைந்து வந்தது.
கடிதம் எழுதுக.
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
அனுப்புநர்
சே.வெண்மதி,
த/பெ சேரன்,
562 திருவள்ளுவர் தெரு,
வளர்புரம் அஞ்சல்,
அரக்கோணம் வட்டம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003.
பெறுநர்
உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003.
ஐயா,
பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.
வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் பணிவுடைய,
சே.வெண்மதி.
இடம்:அரக்கோணம்,
நாள்: 12-03-2022.
உறைமேல் முகவரி:
உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003.
திருக்குறள் (பக்க எண்: 119 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அரசரை அவரது _____ காப்பாற்றும்.
அ) செங்கோல் ஆ) வெண்கொற்றக்குடை இ) குற்றமற்றஆட்சி ஈ) படைவலிமை
2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின் ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்
3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கண்+ ஓடாது ஆ) கண்+ ணோடாது இ) க + ஓடாது ஈ) கண்ணோ+ ஆடாது
4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கச+ டற ஆ) கசட + அற இ) கசடு + உற ஈ) கசடு + அற
5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) என்றாய்ந்து ஆ) என்றுஆய்ந்து இ) என்றய்ந்து ஈ) என்ஆய்ந்து
குறுவினா
1. நன்மையைத்தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
விடை: இச்செயலைஇந்தவகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.
2. சிறந்தஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
விடை : எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
3. அரசன் தண்டிக்கும் முறையாது?
விடை : ஒருவர் செய்தகுற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.
4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
விடை : கேட்பவரைத்தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.
பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத்தேர்ந்தெடுக்க.
பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத்தலைவராக யாரைத்தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமைஆசிரியர் ‘செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக்குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத்துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரேஇதற்குத்தகுதியானவர். எனவேஎன்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் ‘சிறந்ததேர்வு’ என்று மகிழ்ந்தனர்.
விடை:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இயல்-5 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇