7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 16-10-2023 முதல் 20-10-2023
மாதம் : அக்டோபர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.இலக்கியவகைச் சொறகள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø மொழியில் பயன்படுத்தப்படும் இலக்கியவகைச் சொற்களைக் கண்டறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø சொல் எத்தனை வகைப்படும்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
இலக்கியவகையில் சொற்களை இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல் என நான்குவகையாகப் பிரிக்கலாம்.
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக் கொண்டு அதிலுள்ள நால்வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட் டியல் உருவாக்குக.
12.கற்றல் விளைவு
Ø 717 -வெவ்வேறு சூழல்களில் மற்றவர்களால் கூறப்பட்ட சொற்களை( முறை சார்ந்த அல்லது தனி முறையிலான
கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளின்போது வயதில் பெரியவர்கள் பயன்படுத்திய சொற்கள், தச்சர், குயவர்
துணிதுவைப்பவர், முடிதிருத்துவோர் போன்ற தொழிலாளிகளுடன் பெரியவர்கள் உரையாடும்போது கேட்ட
சொற்கள்) வேறு சூழல்களில் நாம் விரும்பியவாறு எழுதுதலில் பயன்படுத்துதல்