10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 3 RD WEEK

            10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 25-11-2024 முதல் 29-11-2024        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.தேம்பாவணி

                                            2. ஒருவன் இருக்கிறான்

1.கற்றல் நோக்கங்கள்   :

  @ நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல்

Ø      @ மனித மாண்புகளையும் விழுமியங்களை யும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல் .

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  யாருக்கெல்லாம் அம்மாவைப்பிடிக்கும் ?

      Ø உங்கள் நண்பரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன .

@  துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணையொன்று இருப்பதை அறியும்போது நமக்குக் குற்றவுணர்ச்சி தோன்றும் வாய்ப்பிருக்கிறது. எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும

5.ஆசிரியர் செயல்பாடு              :

     @  தேம்பாவணி பாடலில் வரும் விழுமியங்களை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்க்கு உணர்த்துதல், பகுபத உறுப்பிலக்கணம், இலக்கணக்குறிப்பு போன்றவற்றை விளக்குதல்.

§  ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதையை, உரிய மெய்ப்பாடுகளுடன் விளக்கிக் கூறுதல்

6.கருத்துரு வரைபடம்:

தேம்பாவணி


ஒருவன் இருக்கிறான்


7.மாணவர் செயல்பாடு:

    Ø செய்யுட்பகுதியை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துப் பொருளறிதல்
   Ø  செய்யுளில் காணும் அருஞ்சொற்களை அடையாளம் காணுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. தேம்பாவணியை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   1.தேம்பாவணி - பெயர்க்காரணம் தருக
   2.ஒருவன் இருக்கிறான் கதையில் வெளிப்படும் நட்பு எத்தகையது?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  6. உங்கள் வாழ்வில் சந்தித்த நபர்களுள் உங்களைக் கவர்ந்தவர் பற்றி விளக்குக.
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       @ 1047 - மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட பிற்காலக் காப்பிய இலக்கியத்தை படித்தல்.

Ø          @ 1048 - நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தல், அது போல எழுதுதல்





 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை