7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 4 TH WEEK

7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 27-11-2023 முதல் 01-12-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. பேசும் ஓவியங்கள்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø ஓவியக் கலையின் மேன்மையையும் , அது மனித வாழ்வோடு இணைந்துள்ள நுடபத்தையும் அறிந்து போற்றுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø ஓவியம் வரைவது யாருக்கெல்லாம் பிடிக்கும்? என்ற வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து ஓவியங்களை அறிமுகம் செய்தல்

4.படித்தல்  :             

  • உரைநடைப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

பேசும் ஓவியங்கள்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
@  குகை ஓவியம், கோட்டோவியம், சுவர் ஓவியம், துணி ஓவியம், கலம்கசாரி ஓவியஙகள், ஓலைச்சுவடி ஓவியம்

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _______

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பல்வேறு வகையான ஓவியங்கள் சார்ந்த படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்கச் செய்தல்

12.கற்றல் விளைவு:

   Ø 714 - படிக்கும் போது வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் பாடப் பொருள்களைப் புரிந்து கொள்வதுடன் அகராதிகள் பார்வை நூல்கள் வரைபடங்கள் இணைத்தளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணை கொண்டு பொருண்மையைத் தெளிவாக அறிதல்



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை