9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 4 TH WEEK

   9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு (திருப்புதல்)

நாள்        : 27-11-2023 முதல் 01-12-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  நான்காம் வாரம்                                          

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  அரையாண்டுப்பொதுத்தேர்வு திருப்புதல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வினாத்தாட்கள் 

ஆசிரியர் செயல்பாடு              :

பின்வரும் வினாக்களுக்கான விடைகளை எழுதச்செய்து பயிற்சி அளித்தல்

(மாணவரின் திறனுக்கேற்ப வினாவிடைகளை எழுதச்செய்து பயிற்சி அளிக்கலாம்)

குறுவினாக்கள்:  

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது? 

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக. 

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது? 

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக . 

5. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை? 

6. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக. 

7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக. 

8. “கூவல்” என்று அழைக்கப்ப டுவது எது? 

9. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக. 

10. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக. 

11. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது? 

12. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

சிறுவினாக்கள்:

13. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? 

14. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

15. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது? 

16. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

மாணவர் செயல்பாடு:

    Ø வினாக்களுக்கான விடைகளை எழுதி, ஆசிரியரிடம் திருத்தம் பெற்று, தவறான விடைகளை மீண்டும் பயிற்சி செய்தல்
 வலுவூட்டல்:

     மாணவர்கள் எழுதும் தவறான விடைகளை மீண்டும் மீள்பார்வை செய்து வலுவூட்டல்

மதிப்பீடு:

  மேற்சொன்ன வினாக்கள் மூலம் மாணவர்களை மதிப்பிடுதல்
குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

தொடர்பணி

தவறாக எழுதப்பட்ட விடைகளை வீட்டில் படித்துவரச் செய்தல்

கடந்தவார பாடக்குறிப்புகள்👇👇



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை