7 TH STD TAMIL THIRD TERM QUESTION ANSWER UNIT-3

 


7.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

மூன்றாம் பருவம் இயல் - 3

மலைப்பொழிவு (பக்க எண்: 24 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது _________.

) பணம்  ) பொறுமை  ) புகழ்  ) வீடு

2. சாந்தகுணம்உடையவர்கள் _____________ முழுவதையும்பெறுவர்.

) புத்தகம்  ) செல்வம்  ) உலகம் ) துன்பம்

3. ’மலையளவுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

) மலை+ யளவு ) மலை+ அளவு  ) மலையின் + அளவு ஈ) மலையில் + அளவு

4. ’தன்னாடுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

) தன் + னாடு ஆ) தன்மை+ னாடு   ) தன் + நாடு  ) தன்மை+ நாடு

5. இவை+ இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

) இவையில்லாது) இவைஇல்லாது இ) இவயில்லாது ஈ) இவஇல்லாது

பொருத்துக.

1. சாந்தம்சிறப்பு

2. மகத்துவம்உலகம்

3. தாரணிகருணை

4. இரக்கம்அமைதி

விடை : 1 – ஈ , 2 – 1 , 3 – ஆ , 4 - இ

குறுவினா

1. இந்த உலகம் யாருக்கு உரியது?

விடை : அமைதியான பண்பு கொண்டவர்களுக்கு உலகம் யாருக்கு உரியது

2. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

விடை : உலகம் நிலைதடுமாறக் காரணம் சாதிகளும், கருத்துவேறுபாடுகளும் ஆகும்.

3. வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

விடை : வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்.

சிறுவினா

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?

விடை :

ü  சாந்தம் என்ற அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. அவர்களே தலைவர்கள் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.

ü  வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சிசெய்யும் பெருமை உடையது என்றார்.

ü  சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறுகின்றது.

ü  அறத்தை நம்பினால் சண்டை இல்லாமல் உலகம் அமைதியாகிவிடும்

சிந்தனைவினா

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

விடை :

ü  எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

ü  எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், சாதி, இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும்.

ü   பொறாமை, வன்முறை, அறியாமை ஆகியன அழிந்து மனிதநேயம் மலர வேண்டும்.அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.

தன்னை அறிதல் (மதிப்பீடு பக்க எண்:50)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூடுகட்டத் தெரியாத பறவை

அ) காக்கை  இ) சிட்டுக்குருவி  ஆ) குயில்  ஈ) தூக்கணாங்குருவி

2. 'தானொரு' என்றும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது '

அ)தா + ஒரு   ஆ) தான் + னொரு    இ) தான் + ஒரு   ஈ) தானே + ஒரு

குறுவினா

1. காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச்சொன்னது?

விடை : காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

2.குயில் குஞ்சு தன்னை எப்போது 'குயில்' என உணர்ந்தது?

விடை : ஒரு விடியலில் குயில் குஞ்சு "கூ" என்று கூவியது. அன்று தான் ஒரு 'குயில்' என உணர்ந்தது.

சிறுவினா

குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.

விடை :

v  காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

v  அதனால் தாய் காக்கையைவிட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. 'கா' என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை. அதற்குக் கூடுகட்டத் தெரியாது,

v  அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை.குளிர், மழை,வெயில் ஆகியவற்றைக் கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது. வாழ்கையை வாழப் பழகிவிட்டது.

v  ஒரு விடியலில் குயில் குஞ்சு "கூ" என்று கூவியது. அன்று தான் ஒரு 'குயில்' என உணர்ந்தது.

சிந்தனை வினா

உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?

விடை :

v  அனைவரிடமும் அன்பாகப் பழகுவது.

v  உண்மை பேசுவது.

v  தன்னம்பிக்கையுடன் இருப்பது.          

v  மனம் தளராமை       

ஆகியவை என்னிடம் உள்ள தனித்தன்மைகள் ஆகும்.

கண்ணியமிகு தலைவர் (மதிப்பீடு பக்க எண்:54)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

) தண்மை ) எளிமை) ஆடம்பரம்  ஈ) பெருமை

2. 'காயிதேமில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்குச் _______ என்பது பொருள்.

) சுற்றுலாவழிகாட்டி ) சமுதாய வழிகாட்டி   ) சிந்தனையாளர்  ) சட்டவல்லுநர்

3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் _______ இயக்கத்தில் கலந்துகொண்டார்.

) வெள்ளையனேவெளியேறு ஆ) உப்புக் காய்ச்சும்  ) சுதேசி  ) ஒத்துழையாமை

4. காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்_______.

) சட்டமன்றம் ) நாடாளுமன்றம்) ஊராட்சி மன்றம்  ) நகர்மன்றம்

5. ’திரொலித்ததுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

) எதிர்+ ரொலித்தது ஆ) எதில் + ஒலித்தது  ) எதிர்+ ஒலித்தது) எதி + ரொலித்தது

6. முதுமை+மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

) முதுமொழி) முதுமைமொழி இ) முதியமொழி ஈ) முதல்மொழி

குறுவினா

1. விடுதலைப் போராட்டத்தில் காயிதேமில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.

விடை:

ü  நாடுமுழுவதும் விடுதலைப்போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ü  காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.

ü  கல்வியைவிட நாட்டு விடுதலை மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

2.காயிதேமில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும்எளிமையைக் கடைப்பிடித்தார்என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வைஎழுதுக.

விடை:

    காயிதேமில்லத் அவர்கள் தன் மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர்.பெண்வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார்.

சிறுவினா

ஆட்சி மொழி பற்றிய காயிதேமில்லத்தின் கருத்தைவிளக்குக.

விடை:

     ஆட்சிமொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதேமில்லத். "பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன், மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ்மொழி தான் மிகப்பழமையான மொழி அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வ குறிப்பிட்டார்.

சிந்தனைவினா

நீங்கள் ஒரு தலைவராகஇருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?

விடை:

§  தமிழை உலகமொழி ஆக்குவேன்.

§  ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வருவேன்.

§  சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை நீக்குவேன்.

§  இந்திய நதிகளை இணைப்பேன்.

பயணம் (மதிப்பீடு பக்க எண்:60)

'பயணம்' கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை:

    பிறருக்கு உதவி செய்து மகிழ்ந்த ஒருவரின் கதைதான் 'பயணம்'. இக்கதையைப் 'பிரயாணம்' என்னும் நூலில் பாவண்ணன் படைத்துள்ளார்.

மிதிவண்டி ஆசை

      20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது, அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது மாதச் சம்பளத்தில் மிதி வண்டி ஒன்றை வாங்குகின்றார். மிதிவண்டியில் செல்லுவது தான் அவருக்குப் பொழுதுபோக்கு. தெரிந்த இடம் தெரியாத இடம் என எல்லாவற்றுக்கும் மிதிவண்டிதான். கிருஷ்ணராஜ சாகர் அணை, மகாபலிபுரம் ஆகிய இடங்களுக்கு எல்லாம் மிதிவண்டியிலே தான் பயணம்.

மிதிவண்டியில் பயனாம்

     ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை.இரண்டு நாட்கள் மிதிவண்டி பயணத்தில் ஹாசனை அடைந்தார். ஒரே நாளில் வெப்பம், மழை, குளிர் மாறி மாறி வந்தது.மழைத் தூரலில் அடுத்த ஊர் வரை சென்றார். பெரிய இறக்கத்தில் இறங்கும் போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது. காற்றடிக்கும் கருவியும் இல்லை.நீண்ட தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை.

குடிசை வீட்டுச் சிறுவன்

    ஒரு குடிசை வீடு தெரிந்தது. அதில் ஒரு சிறுவனும் அவனது அம்மாவும் இருந்தனர். பெங்களூரில் இருந்து மிதிவண்டியில் வந்ததைச் சொன்னதும் அந்தச் சிறுவனால் நம்ப முடியவில்லை. மனம் இருந்தால் எங்கு வேண்டும் என்றாலும் மிதிவண்டியில் செல்லாம் என்றார். மிதிவண்டி ஆர்வத்தைச் சிறுவன் சொன்னான், அவனது மாமா வீட்டில் மிதிவண்டி உள்ளது. அவர் இல்லாத போது குரங்கு பெடல் போட்டு ஓட்டுவேன் என்றான். காலைப்பொழுதுவிடிந்ததும் பக்கத்து ஊரில் உள்ளசந்திரேகௌடாஎன்பவர்மிதிவண்டியைச் சரி செய்து தருகின்றார். சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிறார்.

பயணம் தொடர்கின்றது…

   அம்மாவின்அனுமதி பெற்று, அரிசிக்கெர என்ற இடத்தில் தன் மாமா வீட்டில் விடச்சொல்லி சிறுவன் கேட்டான். சிறுவனுடன் பயணம் தொடர்ந்தது. அவரிடம் இருந்து மிதிவண்டியை வாங்கி சிறிது தூரம் ஓட்டினான். மாமா வீடு நெருங்கும் சிறிது தூரத்திற்கு முன்னதில் இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான். சிறுவனின் மிதிவண்டி ஆர்வத்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஒட்டிக்கொண்டு இருக்கும் போது, அவனிடம் சொல்லாமல் பேருந்தில் ஏறி செல்கின்றார்

முடிவுரை

   ஆசைப்பட்டு வாங்கிய மிதிவண்டியைத் தியாகம் செய்து, சிறுவனின் மனம் மகிழச் செய்த அவரின் கருணை உள்ளம் பாராட்டுக்குரியது. "கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லம்"

ஆகுபெயர் (மதிப்பீடு பக்க எண்:63)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ______.

) பொருளாகு பெயர்) சினையாகு பெயர்  இ) பண்பாகுபெயர் ஈ) இடவாகு பெயர்

2. இந்தவேலையை முடிக்க ஒரு கைகுறைகிறது என்பது ______.

) முதலாகு பெயர் ) சினையாகு பெயர்  இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகுபெயர்

3. மழை சடசடவெனப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ______.

) அடுக்குத்தொடர் ) இரட்டைக்கிளவி   இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகுபெயர்

4. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ______ முறைவரை அடுக்கி வரும்.

) இரண்டு ) மூன்று) நான்கு ஈ) ஐந்து

குறுவினா

1. ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?

விடை: ஒன்றன் பெயர்அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

  சான்று:  வீட்டுக்கு வெள்ளைஅடித்தான்.   

      இத்தொடரில் வெள்ளைஎன்பது வெண்மைநிறத்தைக் குறிக்காமல் வெண்மைநிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது.

2. இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.

விடை: இரட்டையாகஇணைந்து வந்து, பிரித்தால்  தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.

சான்று:  தங்கை விறுவிறுவென நடந்து சென்றாள் .

     விறுவிறு எனும் சொல் இரட்டையாக வந்து பொருள்  தரவில்லை.

சிறுவினா

1. பொருளாகு பெயரையும் சினையாகு பெயரையும் வேறுபடுத்துக.

விடை:

பொருளாகுபெயர்

சினையாகுபெயர்

 

பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது

 

சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது

சான்று: மல்லிகை சூடினாள்

தலைக்கு ஒரு பழம் கொடு

2. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்- ஒப்பிடுக.

விடை:

அடுக்குத்தொடர்

இரட்டைக்கிளவி

பிரித்தால் பொருள் தரும்

பிரித்தால் பொருள் தராது

ஒரே சொல் 4 முறை வரை அடுக்கி வரும்

ஒரே சொல் 2 முறை வரை மட்டுமே வரும்

சொற்கள் தனித்தனியே நிற்கும்

சொற்கள் இணைந்தே இருக்கும்

விரைவு,வெகுளி,அச்சம் முதலிய பொருள்களில் வரும்.

குறிப்புப்பொருளில் மட்டுமே வரும்

 

மொழியை ஆள்வோம் (பக்க எண்:64)

சரியான இணைப்புச் சொல்லால்நிரப்புக.

            (எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோ, இல்லையென்றால், மேலும்)

     (.கா.) காயிதேமில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம்செய்வதைவிரும்பாதவர்.

ஏனெனில் அவர்எளிமையைவிரும்பியவர்.

1. நாம்இனிய சொற்களைப் பேசவேண்டும். இல்லையென்றால் துன்பப்படநேரிடும்.

2. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. ஆகையால்  காக்கையின் கூட்டில் முட்டையிடும்.

3. அதிக அளவில் மரங்களைவளர்ப்போம். ஏனெனில்  மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.

4. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். எனவே  பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.

5. தமிழகத்தில் மழைபெய்துவருகிறது. மேலும்  இரண்டு நாட்கள்  மழைநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

கடிதம் எழுதுக

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக

உறவினருக்குக் கடிதம்

 

12 தென்றல் நகர்,

திருத்தணி-1

26-12-2023

அன்புள்ள அத்தைக்கு,                

    உங்கள் அன்பு அண்ணன் மகள் எழுதும் கடிதம், நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் வ நலமாக இருக்கின்றோம். அதபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய) ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம் முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது.ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும், ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல், காப்புக்கட்டல், பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள் அன்புடன் முடிக்கின்றேன்.உடன் பதில் எழுதுங்கள்.

 

                                                                                                                                                      இப்படிக்கு,

அன்பு அண்ணன் மகள்

                                                                                                                                  வா.நிறைமதி

உறைமேல் முகவரி:

      ச.தமிழாசி.

      12,திரு.வி.க நகர்,

      மதுரை-2.

மொழியோடு விளையாடு (பக்க எண்:65)

குறிப்புகளைப் பயன்படுத்தி இடமிருந்து வலமாகக் கட்டங்களைநிரப்புக.

 

1. நூலகத்தில் இருப்பவை  நூல்கள்  நிறைந்துள்ளஇடம் நூலகம்

2. உலகப்பொதுமறை  திருக்குறள்.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

3. முனைப்பாடியார் இயற்றியது அறநெறிச்சாரம்  நீதிநெறி விளக்கம்பாடியவர் குமரகுருபரர்

4. குற்றாலமலைவளத்தைக் கூறும்நூல் குற்றாலக்குறவஞ்சி  சுரதாஎன்பதன் விரிவாக்கம் சுப்புரத்தினதாசன்

5. குற்றாலக் குறவஞ்சி பாடியவர் திரிகூடராசப்பக் கவிராயர்

கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக்கிளவி அமையுமாறு தொடர் உருவாக்குக.

1.     மழை சடசடவெனப் பெய்தது.

2.    பறவைகள் படபடவெனப் பறந்தன.

3.    புகைவண்டி விறுவிறுவெனச் சென்றது.

4.    மரக்கிளை சடசடவென முறிந்தது.

கீழ்க்காணும் அறிவிப்பைப்படித்து அதன்பின்கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.

தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும்

வினாக்கள்

1. தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

விடை:

ü  வீடு மற்றும் பொது இடங்களில் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ü  தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.சமையல் செய்யும் போது இறுக்கமான உடைகளை அணிய வேண்டும்.

ü  பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும்.பணியாளார்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.

2. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?

விடை:

ü  தீயணைப்புத் துறைக்குத் தகவல் சொல்ல வேண்டும்.

ü  தீ விபத்து ஏற்பட்ட பகுதியில்  மின் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும்.

ü   தீ அணைப்பான்கள் கொண்டு  தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும்.

ü  ஆடையில் தீப்பிடித்தால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.

3. பொது இடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.

விடை: தீ விபத்து ஏற்பட்டால் அவசர கால வழியில் செல்ல வேண்டும். அருகில் உள்ள கட்டிடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்.

4. தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை யாவை?

விடை: மின் தூக்கியைப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய்த் தீயில் நீரை ஊற்றக் கூடாது. தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை ஆகியவற்றைத் தடவக் கூடாது.

5. உடலில் தீப்பற்றினால் செய்ய வேண்டிய முதலுதவி யாது?

விடை: உடலில் தீப்பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.

 வினாவிடைகளை PDF வடிவில் பதிவிறக்க👇👇

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை