10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL-2

10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல்-2


ஒருமதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 1 முதல் 11)

1)உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

      உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்

)உருவகம்,எதுகை  )மோனை,எதுகை  )முரண்,இயைபு  )உவமை,எதுகை

2) செய்தி1-ஒவ்வோர் ஆண்டும் ஜூன்15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    செய்தி 2-காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் 2.ஆமிடம் பெற்றுள்ளது.

    செய்தி பாடு இமிழ் பனிக்கடல் பருகி  என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி 3-காற்றின் ஆற்றலைப்பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்தனர் தமிழர்.

)செய்தி 1 மட்டும் சரி   )செய்தி 1,2 ஆகியன சரி

)செய்தி 3 மட்டும் சரி   )செய்தி 1,3 ஆகியன சரி.

3) பாடு இமிழ் பனிக்கடல் பருகி  என்னும் முல்லைப்பாட்டுஅடி உணர்த்தும் அறிவியல் செய்தி

)கடல்நீர் ஆவியாகி மேகமாதல்   )கடல்நீர் குளிர்ச்சி அடைதல்

)கடல்நீர் ஒலித்தல்     )கொந்தளித்தல்.

4) பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?

)பண்புத்தொகை   )உவமைத்தொகை  )அன்மொழித்தொகை  )உம்மைத்தொகை

5) பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

     )கொண்டல்- 1.மேற்கு

     )கோடை -    2.தெற்கு

     )வாடை   -    3.கிழக்கு

     )தென்றல்  -   4.வடக்கு

) 1,2,3,4    ) 3,1,4,2    ) 4,3,2,1     ) 3,4,1,2

6) திருமூலர் இயற்றிய நூல்………

) தொல்காப்பியம்  ) நன்னூல்   ) திருமந்திரம்  ) புறநானூறு

7) பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

) பிளேட்டோ   ) ஹிப்பாலஸ்  ) அரிஸ்டாடில்   ) சாக்ரடீஸ்

8) வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்……..

) பாரதிதாசன்   )பாரதியார்    ) கவிமணி   ) வாணிதாசன்

9)பிராண ரஸம்என்பதன் பொருள்……

) உயிர்வளி   ) பழச்சாறு    ) உயிர்வலி   ) துன்பம்

10)விரிச்சி என்ற சொல்லின் பொருள்

) விரித்தல்   ) மலர்  ) நற்சொல்   ) தொழுதல்

11) தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.

) ஐந்து   ) ஏழு   ) ஒன்பது   ) ஆறு

12) தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்த தொகை

அ) வினைத்தொகை  ஆ) உருபும் பயனும் உடன் தொக்க தொகை 

இ) பண்புத்தொகை  ஈ) உம்மைத்தொகை

13) மலர்க்கை – தொகையின் வகை யாது?

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை  ஈ) உம்மைத்தொகை

14) காலம் கரந்த பெயரெச்சம் என்பது

அ) வினைத்தொகை  ஆ) உருபும் பயனும் உடன் தொக்க தொகை இ) பண்புத்தொகை  ஈ) உம்மைத்தொகை

15) எழுகதிர், முத்துப்பல் இவற்றில் வந்த தொகைகள் முறையே

அ) வினைத்தொகை, பண்புத்தொகை  ஆ)  உவமைத்தொகை, வினைத்தொகை

இ) உம்மைத்தொகை , வினைத்தொகை  ஈ) வினைத்தொகை , உவமைத்தொகை

16) தமிழ்த்தொண்டு எனும் தொடர்------

அ) வினைத்தொகை  ஆ) உருபும் பயனும் உடன் தொக்க தொகை 

இ) பண்புத்தொகை  ஈ) உம்மைத்தொகை

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

17. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.

அ) காற்றின் பாடல்   ஆ) மொட்டின் வருகை  இ) மிதக்கும் வாசம்  ஈ) உயிர்ப்பின் ஏக்கம்

18. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

அ) காற்றின் பாடல்   ஆ) மொட்டின் வருகை  இ) மிதக்கும் வாசம்  ஈ) உயிர்ப்பின் ஏக்கம்

19. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்: பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

அ) காற்றின் பாடல்   ஆ) மொட்டின் வருகை  இ) மிதக்கும் வாசம்  ஈ) உயிர்ப்பின் ஏக்கம்  

20. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்: மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்: கசகசத்த உயிரினங்கள்.

அ) காற்றின் பாடல்   ஆ) மொட்டின் வருகை  இ) மிதக்கும் வாசம்  ஈ) உயிர்ப்பின் ஏக்கம்

21. நின்றுவிட்ட மழை தரும் குளிர்: சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

அ) காற்றின் பாடல்   ஆ) மொட்டின் வருகை  இ) நீரின் சிலிர்ப்பு  ஈ) வனத்தின் நடனம்

22. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், குறைக்காற்றின் ஆலோலம்.

அ) காற்றின் பாடல்   ஆ) மொட்டின் வருகை  இ) நீரின் சிலிர்ப்பு  ஈ) வனத்தின் நடனம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

"எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு

நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்."

1. பாடலை இயற்றியவர் -

அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வைரமுத்து ஈ) சுரதா

2. லயத்துடன் பொருளைத் தேர்க.

அ) சீராக ஆ) வேகமாக இ) அழுத்தமாக ஈ) மெதுவாக

3. மோனைச் சொற்களைத் தேர்க.

அ) நெருப்பு - தருமாறு ஆ) அவித்துவிடாதே - மடித்துவிடாதே 

இ) உனக்கு - உன்னை ஈ) சக்தி – குறைந்து

4. இயைபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.                                                                

அ) நெருப்பு - நீடித்து ஆ) அதனை - அவித்து 

இ) பாட்டுகள் - பாடுகிறோம்  ஈ) பாடுகிறோம் - கூறுகிறோம்

"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு"

1. பாடல் இடம்பெற்ற நூல்-----

அ) சிலப்பதிகாரம் ஆ) திருவிளையாடற் புராணம்  இ) முல்லைப்பாட்டு ஈ) குறிஞ்சிப்பாட்டு

2. பாடலை இயற்றியவர் -

அ) காரியாசான் ஆ) நல்லந்துவனார்  இ) நக்கீரனார்  ஈ) நப்பூதனார்

3. நேமி- பொருளைத் தேர்ந்தெடுக்க.

அ) முத்து  ஆ) கடல் இ) சங்கு ஈ) சக்கரம்

4. பாடலில் உள்ள மோனைச் சொற்களைத் தேர்க.

அ) நனந்தலை - உலகம்  ஆ) நீர் – நிமிர்ந்த  இ) வலம்புரி - தடக்கை  ஈ) வலம்புரி -பொறித்த

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 16 முதல் 28)

1) 'நமக்கு உயிர் காற்று

    காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

    வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

விடை:  காற்று உயிருக்கு நாற்று , தூய காற்று அனைவரின் உரிமை

2. வசன கவிதை – குறிப்பு வரைக

விடை:  செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை.

3) தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

விடை: தண்ணீரைக் குடி: நீ தண்ணீரைக் குடி.
     
      தயிரை உடைய குடம்தயிரை உடைய குடம் பார்

 4)பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் ஊஊரும் ஆறுதல் சொற்களை எழுதுக

விடை: தம்பி அழாதே, அப்பா இப்போது வந்துவிடுவார்,  தின்பண்டம் வருவார்

5. மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

விடை: பொருள்: திருமால்  இலக்கணக்குறிப்பு: செய்யுளிசை அளபெடை

6.சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்

பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

புதுமை

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

விண்மீன்

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

காடு

7) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-

                       

சொற்கள்

தொகை

தொடர்

இன்சொல்

பண்புத்தொகை

முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான்

எழுகதிர்

வினைத்தொகை

எழுகதிர் கிழக்கில் எழும்

கீரிபாம்பு

உம்மைத்தொகை

நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம்

பூங்குழல் வந்தாள்

அன்மொழித் தொகை

பூங்குழல் வீட்டிற்கு வந்தாள்

மலைவாழ்வார்

வேற்றுமைத் தொகை

மலைவாழ்வார் காடுகளை பாதுகாக்கின்றனர்.

முத்துப்பல்

உவமைத் தொகை

எழிலி முத்துப்பற்களால் சிரித்தாள்

8) அகராதியில் காண்க

1.     அகன்சுடர் – சூரியன்

2.    ஆர்கலி – கடல்

3.    கட்புள் – விழித்திருக்கும் பறவை ,  காகம்

4.    கொடுவாய் – வளைந்த வாய் , மீன்வகை

5.    திருவில் – வானவில்

9) கலைச்சொல் அறிக

1.     Storm - புயல்

2.    Land Breeze - நிலக்காற்று

3.    Tornado – சூறாவளி

4.    Sea Breeze - கடற்காற்று

5.    Tempest – பெருங்காற்று

6.    Whirlwind – சுழல்காற்று

10) வண்ணமிட்ட (அ) அடிக்கோடொட்ட தொகைச்சொற்களை வகைப்படுத்துக.

1. அன்புச்செல்வன், திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.

   அன்புச்செல்வன் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை; தொடுதிரை - வினைத்தொகை

2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.

    மோர்ப்பானை -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை;

    மோர் கொடுக்கவும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை.

3. வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

    வெண்டைக்காய், மோர்க்குழம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்.

4. தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடு கின்றன.

   தங்கமீன்கள் -உவமைத்தொகை.

   தண்ணீர்த்தொட்டி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை.

மூன்று மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 29 முதல் 37)

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன் னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை  எழுதுக.

விடை:

1.     உயிராய் நான் ; மழையாய் நான்

2.     நானின்றி பூமியே சுழலாது  

3.    பூமித்தாயின் குருதி நான்.

2. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க .

விடை:

சோலைக்காற்று :         இயற்கையில் பிறக்கிறேன்

மின்விசிறிக்காற்று :     செயற்கையில் பிறக்கிறேன்

சோலைக்காற்று :         காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள்

மின்விசிறிக்காற்று :     இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள்

3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த்

தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள் .

இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

விடை:

ü  மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ü  பூங்கொடி- அன்மொழித்தொகை

ü  ஆடுமாடு உம்மைத்தொகை

ü  குடிநீர் – வினைத்தொகை

ü  மணி பார்த்தாள் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

4. மழைநின்ற வுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: இலைக ளில்  சொட்டும் நீர் - உடலில் ஓடும் மெ ல்லிய குளிர் - தே ங்கிய குட்டை யில்

'சளப் தளப் ' என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

விடை

ü  நீரின்றி வறண்ட பகுதியில் திடீரென்று கோடை மழை கொட்டியதுஉள்ளத்தில்  புத்துணர்ச்சியுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன்.

ü  சாலையோர மரங்களில் மகிழ்ச்சி வெள்ளம்:ஆனந்தக்கண்ணீராக இலைகளில் இருந்து சொட்டிய நீர்.

ü  குளிர் காற்றின் வருடல்: உடலில் ஓடும் மெல்லிய குளிர்.

4.காற்று பேசியதைப்போல் நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக

ü  உங்களுக்கு உணவையும் நீரையும் தருகிறேன்

ü  நீங்கள் செய்யும் சில தவறுகளால் நான் மசடைகிறேன்

ü  செயற்கை உரம், வேதிக்கழிவு ஆகியவற்றால் நான் பாதிக்கப்படுகிறேன்

ü  என்னை மாசடையாமல் காப்பது உங்கள் பொறுப்பு.

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 38 முதல் 42)

1.முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

விடை:

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

2. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

         வளரும் விழி வண்ணமே - வந்து

   விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

         விளைந்த கலை அன்னமே

  நதியில் விளை யாடி கொடியில் தலைசீவி

           நடந்த இளந் தென்றலே - வளர்

   பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு

            பொலிந்த தமிழ் மன்றமே

         -கவிஞர் கண்ணதாசனின் இப்பா டலில் தவழும் காற்றை யும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க .

விடை:

திரண்ட கருத்து:  கண்ணதாசன் காற்றை மலர்,காலை,தென்றல்,மன்றம் என்றெல்லாம் பாடுகிறார்

மையக்கருத்து:   காற்று

அணிநயம்:         உவமையணி

எதுகை நயம்:     தியில்,பொதிகை

மோனை நயம்:   பொதிகை,பொலிந்த

இயைபு நயம்:     வண்ணமே,அன்னமே,மன்றமே

2)காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!



3)மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க. இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      சேலம்-2.

4) தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-

தலைப்பு: காலை

            The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

விடை:

            பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.     

 

5) நிற்க அதற்குத் தக

வானொலி அறிவிப்பு....

            ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில்      மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

    மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

1.       தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

 

 

எட்டு மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 43 முதல் 45)

1) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

புயல்

தொங்கானின் நிலை

கரை காணுதல்

சீட்டு வழங்குதல்

முடிவுரை

 

முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

    அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள்எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:                                                                                                                                    

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

PDF வடிவில் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்



You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை