காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் 2024-2025
10.ஆம் வகுப்பு தமிழ் நேரம்: 3 மணி நேரம் 100 மதிப்பெண்கள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15 1) ’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்’என்னும் செப்பேடு உணர்த்தும் செய்தி
அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
ஆ) காப்பிய காலத்தில்
மொழிபெயர்ப்பு இருந்தது
இ) பக்தி
இலக்கியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஈ) சங்கம் மருவிய
காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
2) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ)இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3) ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்
அ) வாட்சன் ஆ) வார்னே இ) பெப்பர் ஈ) சோபியா
4) திருமூலர் இயற்றிய நூல்………
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) திருமந்திரம்
ஈ) புறநானூறு
5) மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக்கப்பல்களும் ,ஐம்பெருங்காப்பியங்களும் ஆ) பெரும்வணிகமும்,பெருங்கலன்களும்
இ) ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக்கப்பல்களும்,அணிகலன்களும்
6) ’உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யார்,யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம்,நோயாளி ஈ) நோயாளி,மருத்துவரிடம் 7) தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது -இத்தொடருக்கான வினா எது? அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
8) ’இங்கு நகரப்பேருந்து
நிற்குமா?’ இன்று வழிப்போக்கர்
கேட்பது-----வினா.
‘அதோ அங்கு நிற்கும்’ என்று மற்றொருவர்
கூறியது--------விடை.
அ) ஐய வினா, வினா எதிர் வினாதல் ஆ)
அறியா வினா, மறை விடை
இ) அறியா வினா, சுட்டு விடை ஈ) கொளல்
வினா, இனமொழி விடை
9) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்தக் காரணம்
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய் இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
10) கீரிபாம்பு
என்ற சொல்லில் இடம்பெற்ற தொகை
அ)
வினைத்தொகை ஆ) உவமைத்தொகை இ)உம்மைத்தொகை ஈ) பண்புத்தொகை
11) குளிர்
காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ)
முல்லை, குறிஞ்சி,
மருத நிலங்கள் ஆ)
குறிஞ்சி, பாலை,
நெய்தல் நிலங்கள்
இ)
குறிஞ்சி, மருதம்
நெய்தல் நிலங்கள் ஈ)
மருதம், நெய்தல்,
பாலை நிலங்கள்
பாடலைப்படித்து வினாக்களுக்கு
விடையளிக்க:
நனந்தலைஉலகம்
வளைஇ நேமியொடு
வலம்புரி
பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்
செல, நிமிர்ந்த
மாஅல் போல,
பாடுஇமிழ்
பனிக்கடல் பருகி, வலன்ஏர்பு,
கோடு
கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல்
பொழிந்த சிறுபுன்மாலை,
12) இப்பாடல் இடம்பெற்ற நூல்
அ) முல்லைப்பாட்டு ஆ) நற்றிணை இ) குறுந்தொகை ஈ) மலைபடுகடாம்
13) நனந்தலை
உலகம்-என்ற
தொடரின் பொருள்
அ) நனைந்த
உலகம் ஆ) அகன்ற
உலகம் இ)தலையாய
உலகம் ஈ) சிறிய
உலகம்
14) பாடலில் இடம்பெற்றுள்ள அளபெடைச்சொல்
அ) தடக்கை ஆ) வளைஇ இ) பெரும்பெயல் ஈ)
கொடுஞ்செலவு
15) இப்பாடலை இயற்றியவர் யார்?
அ) நப்பூதனார்
ஆ) குலசேகராழ்வார்
இ) பாண்டியன்
ஈ) பாரதியார்
பகுதி-2 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா) 4X2=8
16) வசன கவிதை என்பது யாது?
17) 'தானியம் ஏதும் இல்லாத நிலையில்
விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக்
குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச்
செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள்
கருத்தைக்குறிப்பிடுக.
18) மருத்துவத்தில்
மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
19) விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை
எழுதுக.
20) வறுமையின் காரணமாக உதவி கேட்டுவருபவரின் தன்மானத்தை
எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன ?
21) ’குற்றம்’ எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல்
எழுதுக.
பிரிவு-2
ஐந்து வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க: 5X2=10
22) வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
23) கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத
கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.முல்லைப்பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர்
கடலுக்குச் சென்றனர்.
24)
பொறித்த - பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
25)
அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச்சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக
மாற்றுக)
26) இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம்
இருக்கிறது? இதோ ... இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம்
இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை
எடுத்தெழுதுக.
27)
மரபு வழுவமைதியைச்
சான்றுடன் விளக்குக.
28)
கலைச்சொற்களைத் தமிழாக்கம்
செய்க : அ. Emblem
ஆ. Intellectual
பகுதி-3 (மதிப்பெண்:18) பிரிவு-1
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: 29) புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
-இது
போல் இளம்பயிர்வகை மூன்றினைத் தொடரில் அமைத்து எழுதுக.
30) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது
குறித்த
சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
31)
பத்தியைப் படித்துப் பதில் தருக:-
ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி
செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது
எழுதப்பட்டதைமொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே
மொழிபெயர்ப்பது விளக்குவது ( I n t e r p r e t i n g ) எ
ன்றே சொல்லப்படுகிறது . ஐ.நா .அவையில்
ஒருவர் பேசுவதைமொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி
வேறு இடத்தில் இருப்பார் . ஒருவர் பேசுவதைக் காதணி கேட்பியில் (Headphone) கேட்டபடிசில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார் . அவையில்
உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணி கேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரதுமொழியில்
புரிந்துகொள்வார் .
1. மொழிபெயர்ப்பு என்பது யாது?
2.
மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில்
எவ்வாறு குறிப்பிடுவர்?
3.
இப்பத்திக்குப் பொருந்திய
தலைப்பொன்று தருக..
பிரிவு-2 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய
வினா)
32)
தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
33) சிறந்த
அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத் திருக்குறள்வழி
விளக்குக.
34)
அ)
அருளைப் பெருக்கி….
எனத்தொடங்கும் பாடலை
அடிமாறாமல் எழுதுக. (அல்லது)
ஆ)
விருந்தினனாக எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-3 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)
அலகிட்டு வாய்பாடு
எழுதுக:
செய்க
பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற்
கூரிய தில்
36) 'அறிந்தது,
அறியாதது, புரிந்தது,
புரியாதது, தெரிந்தது,
தெரியாதது, பிறந்தது,
பிறவாதது'
இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை.
எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் சாய்வெழுத்துகளில்
உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி
எழுதுக.
37)
சொற்பொருள் பின்வருநிலையணியைச்
சான்றுடன் விளக்குக.
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38)
அ)
மனோன்மணியம் சுந்தரனாரின்
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்,,பெருஞ்சித்திரனாரின்
தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக. (அல்லது)
ஆ)
இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
39)அ)
மாநில அளவில் நடைபெற்ற
“மரம் இயற்கையின் வரம்”என்ற
தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசுபெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. (அல்லது)
ஆ)
மருந்தகம் ஒன்றில் வாங்கிய மருந்து
பயன்பாட்டு நாள் முடிவடைந்ததாகவும் விலை
கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.
40)
அ)
பள்ளியிலும்,வீட்டிலும்
உனது செயல்கள் எவ்வாறு இருக்கும் என வேறுபடுத்திக் காட்டுக. (அல்லது)
ஆ)மொழி
பெயர்க்க:
Kalaignar Karunanidhi is known for his
contributions to Tamil literature. His contributions cover a wide range: poems,
letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays,
dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural,
Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart
from literature, Karunanidhi has also contributed to the Tamil language through
art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about
Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an
architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari,
Karunanidhi constructed a 133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.
41) விழுப்புரம்
மாவட்டம், பெரியார்
நகர், கபிலன்
தெரு, 32
ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில்
நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி,
கொடுக்கப்பட்ட
நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42)காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43)
அ)
தமிழின் சொல்வளம்
பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை
எழுதுக. (அல்லது)
ஆ)
போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக்கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக்
கொண்டு கட்டுரை வரைக
44)
அ. அன்னமய்யா என்னும்
பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க. (அல்லது)
ஆ)
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள
வருணனைகளும் அடுக்குத்தொடர்களும்
ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
45)
அ)
உங்கள் பகுதியில்
நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
(அல்லது)
ஆ)
குமரிக் கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப்
புகழ்தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி,கலம்பகம்
கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,கோவை யாத்து,அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர்
சபுலவர்கள். இக்கருத்தைக் கருவாக் கொண்டு
‘சான்றோர் வளர்த்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.