குறைக்கப்பட்ட பாடப்பகுதி-பத்தாம் வகுப்பு தமிழ்-பாடலைப்படித்து விடையளித்தல்-Reduced syllbus-10 std Tamil-Poetry questions

அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவச்செல்வங்களுக்கும்,
             
               அன்பார்ந்த வணக்கம்.பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில், ஒருமதிப்பெண்
வினா வரிசையில்,பாடலைப்படித்து விடையளித்தல் என்னும் பாடப்பகுதி இடம்பெற்றுள்ளது.15 ஒரு மதிப்பெண் வினாக்களில் 12,13,14,15 ஆகிய எண் வரிசையில் இவ்வினாக்கள் இடம்பெறும்.9 இயல்களில் இடம்பெற்ற கவிதைப் பேழை பகுதிகளுள் சில பாடல் பகுதிகள் தரப்பட்டு அவற்றைச் சார்ந்தே வினாக்கள் கேட்கப்படும்.அதிலும் விடைகளுக்கான தேர்வுகளும் தரப்படும். எனவே மாணவர்கள் எளிமையாக மதிப்பெண் பெறும் பகுதியாக இப்பகுதி கருதப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு அந்த 4 மதிப்பெண்கள் முழுமையாக கிடைக்கும் நோக்கில் முக்கியமான பாடல் பகுதிகளும்,அவற்றிலிருந்து கேட்கப்படும் முக்கியமான வினாவிடைகளும்,நமது தமிழ்ப்பொழில் வலை தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
              கொரோனா பெருந்தொற்றின் காரணமாக,மூடப்பட்டிருந்த பள்ளிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்டதால்,பாடப்பகுதிகள் குறைக்கப் பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன,அதற்கேற்ப மேற்குறிப்பிட்ட வினாப்பகுதியும் சுருக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது.இணைப்பைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கானது👇👇👇

              DOWNLOAD-பதிவிறக்க

முழுபாடப்பகுதிக்கானது 👇👇👇
         

         DOWNLOAD-பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை