இன்று மார்ச்
21-ந் தேதி
உலக காடுகள்
தினம்
பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
காடு
என்பது பல்வேறு
உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற
ஓர் சுழல்
மண்டலமாகும்.பல
அரிய வகை
மரங்களையும்,ஏராளமான
விலங்குகளையும் கொண்ட
இயற்கை வரம்தான்
காடு. பூமியின்
மொத்த பரப்பளவில் 30 சதவீதம்
காடுகளாலேயே அமைந்ததாகும்.காடுகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு
முக்கியக் காரணியாக
விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான
மழையையும், சுத்தமான
காற்றையும் வழங்குவதில் காடுகளின்
பங்கு மிக
மிக முக்கியமானது. உலகெங்கும்
சூழ்ந்துள்ள காடுகள்
அதனதன் தட்பவெட்ப
நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை
காடுகள், சதுப்பு
நில காடுகள்,
இலையுதிர் காடுகள்,
வெப்ப மண்டல
காடுகள் என
பல வகையில்
அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா
காடுகளும் ஒருசேர்ந்த ஓர்
முக்கிய பணியையே
செவ்வனே செய்கிறது.
அது புவிமண்டலத்தில் உள்ள
கரியமில வாயுவை
சுவாசித்து பூமிக்கு
தேவையான ஆக்சிஜனை
வெளியிடுவதுதான்.
ஒரு மரமானது
தன் சராசரி
ஐம்பது வருட
வாழ்நாளில் ஆறாயிரம்
பவுண்ட் ஆக்சிஜனை
வெளியிடுகிறதாம். இது
ஒரு வருடம்
முழுக்க நான்கு
பேர் சுவாசிக்கக்கூடிய ஆக்சிஜனின்
மொத்த அளவாகும்.
மனிதன் மற்றும்
அனைத்து உயிரினங்களும் இயற்கை
வழியில் சுவாசிக்க
மரங்களே காரணம்.
மேலும் பல்வேறு
சீதோஷ்ண நிலையில்
வாழக்கூடிய வனவிலங்குகளுக்கு இயற்கை
சரணாலயமாக விளங்குவது காடுகள்தான்.
இதில் வெப்பமண்டல காடுகள்
மட்டும் மனிதன்
மட்டுமின்றி கிட்டத்தட்ட பூமியின்
50 சதவீதம் உயிரினங்களுக்கு உறைவிடமாக
உள்ளது. அதுமட்டுமின்றி வெப்பத்தையும்
குளிரையும் கட்டுப்படுத்தி சீரான
காலநிலையை உண்டாக்குதல். பருவமழையின்
அளவை அதிகரித்தல், மண்
வளம் காத்தல்,
மண் அரிப்பு,
நிலச்சரிவு, வெள்ள
ஆபத்துகளை தடுத்தல்
என காடுகளின்
பயன்கள் மிகவும்
ஏராளம்.. இது
போன்ற அற்புத
பயன்கள் கொண்ட
காடுகள் மனிதனின்
வாழ்வியல் நோக்கிற்காக வேகமாக
அழிக்கப்பட்டு வருகிறது
என்பது உலகை
அச்சுறுத்தக்கூடிய பெரும்
உண்மையாகும். ஒவ்வொரு
ஆண்டும் பூமி
18.7 மில்லியன் ஏக்கர்
காடுகளை இழந்து
வருவதாக ஆய்வுகள்
கூறுகிறது. ஏற்கனவே
உலகின் வெப்பமண்டல காடுகள்
பாதியாக குறைந்துவிட்டதாக சர்வதேச
கணக்கெடுப்புகள் அதிர்ச்சி
தகவல் தருகின்றன.
இந்நிலை தொடர்ந்தால் இன்னும்
நூறாண்டுகளில் மழைத்
தரக்கூடிய காடுகள்
முற்றிலும் அழிந்து
விடும் நிலை
ஏற்படலாம் என்றும்
உலக அளவில்
காடழிப்பு குறித்து
மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று
கூறுகிறது. இதன்
காரணமாக அடுத்த
கால் நூற்றாண்டில் பூமியில்
இருந்து சுமார்
28 வகை உயிரினங்கள் இருந்த
சுவடே தெரியாமல்
அழிந்து போகலாம்
என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய வனமகன் – ஜாதவ் பயேங்
தனி மனிதாக ஒரு
காட்டை உருவாக்கப் போகிறேன் என்று இவர் கூறியபோது இவரை எள்ளி நகையாடி
இருக்கிறார்கள். ஆனால், இப்போது கல்வி நிலையங்கள், சூழலியல் அமைப்புகள், அரசு
இயந்திரம் என சமூகத்தின் பல அமைப்புகள் இவரை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
பாம்புகள் மரணம், உலக அழிவு மற்றும் சில மூங்கில் மரங்கள்
1978ஆம் ஆண்டு பெய்த பெருமழையும் அதனை தொடர்ந்து நிலவிய வறட்சியும்தான் இவர் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது.பட மூலாதாரம்,YOUTUBE
அது குறித்து
விவரிக்கும் ஜாதவ், " ஏறத்தாழ 12 நாள்கள் தொடர்ந்து மழை பெய்துகொண்டே
இருந்தது. நாங்கள் அனைவரும் `உலகம் அழியப்போகிறது' என நினைத்தோம். ஆனால், சில
நாட்களிலேயே மழை நின்றுவிட்டது. அந்த மழைக்குப் பிறகு, எங்கள் ஊரை கடும் வறட்சி
தாக்கியது. வீட்டு விலங்குகள் ஒவ்வொன்றாக மடியத் தொடங்கின. பிறகு, வெப்பம்
தாங்காமல் பாம்புகள் செத்து மடிந்தன. வீதியெங்கும், செத்துப்போன பாம்புகளின்
சடலங்கள். இந்தக் காட்சி மனதை உலுக்கியது. பின் பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில்
அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊருக்குள் அடிக்கடி வெள்ளம்
புகுந்தது. எதிர்காலம் குறித்த கேள்விகள் மனதில் எழுந்தன." என்கிறார்.
இந்த கேள்விகளுக்கு
விடைகாண பழங்குடிகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். அவர்கள் இவருக்கு
சூழலியல் குறித்த ஒரு புரிதை உண்டாக்கி இருக்கிறார்கள்.
"அவர்கள்`மனிதனின்
நுகர்வு, கட்டற்ற பேராசைதான் இந்த அழிவுக்குக் காரணம். மனிதன் தன் தேவைக்காக
இயற்கையின் சமன்பாட்டை முற்றாக குலைத்துவிட்டான். `இறைவன் நம்மிடம் இந்தப்
பூமியைக் கொடுத்தபோது, எல்லாம் சரிவிகிதத்தில் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டமான ஒரு
நாளில், மனிதன் `தான் மட்டும்தான் இருக்க வேண்டும்' என நினைத்தான். அது இயற்கைக்கு
எதிரானது. இது, மனிதனுக்குப் புரியவில்லை. பாவம், அவனும் இல்லாமல் போகப்போகிறான்.
அதன் தொடக்கம்தான் இது' என்றார்கள். அவர்களே இதற்குத் தீர்வையும் சொன்னார்கள்,
`இறைவன் எந்த விகிதத்தில் இதை நம்மிடம் கொடுத்தானோ, அதை மீட்டு உருவாக்கு'
என்றார்கள். 25 மூங்கில் மரங்களையும் கொடுத்தார்கள். அவைதான் என் பயணத்துக்கான
விதைகள். அவையே இன்று ஒரு கானகமாக விரிந்து நிற்கின்றன.'' என்று மூன்று
தசாப்தங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை நினைவு கூர்ந்தார் ஜாதவ்.
மனிதனும் அரசும்
இவர் உருவாக்கிய
காட்டிற்கு முதன்மையான எதிரியாக சகமனிதனே இருந்திரிக்கிறான்.
அவர் கூறுகிறார்,
"30 ஆண்டுகளில் நான் வைத்த மரங்கள் வளர்ந்து அந்த பகுதியே அடர்காடாக மாறியது.
ஆனால், தொடக்கத்தில் இருந்து இப்போது வரை என்னுடைய முயற்சிகளுக்கு முதன்மையான
எதிரியாக இருப்பது மனிதன்தான் என்கிறார். தொடக்கத்தில் நான் வைத்த செடிகளை
அழித்தார்கள். காடு உருவாகினால் வன விலங்குகள் வரும் என அச்சம் தெரிவித்தார்கள்.
பல போராட்டங்களுக்கு பின்பே என் முயற்சியில் வெற்றி பெற்றேன்," என்கிறார்
சரி இயற்கையைகாக்க
அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, "ஒன்றும் செய்யாமல் இருந்தாலே
போது," என்கிறார்.
அவர், "அரசு
எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அழிவைத்தான் விதைக்கிறது. பிரம்மபுத்திராவை
பாருங்கள், அதன் சீர்கேட்டுக்கு யார் காரணம்? அரசுதானே அதனால்தான் சொல்கிறேன், அது
ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்." என்கிறார்.
"உண்மையில்
அரசு ஏதாவது செய்ய விரும்பினால், நம் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
நம் உள்ளூர் காடுகள், விலங்குகள், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு
குறித்து விரிவான செய்திகளுடன் பாட புத்தகத்தை மாற்ற வேண்டும்," என்று ஜாதவ்
பயேங் வலியுறுத்துகிறார்.
பல விருதுகளைப் பெற்ற ஆவணப்படம்
இவர் குறித்த
விஷயங்கள் வெகுஜன மக்களுக்கு தெரிய தொடங்கியது, இவர் குறித்த ஆவணப்படம் வெளியே
வந்த பின்புதான். இந்தியாவை சேர்ந்த ஆர்த்தி ஸ்ரீவத்சவா ஓர் ஆவணப்படமும், கனடா
நாட்டை சேர்ந்த வில்லியம் டொக்லஸ் மெக்மாஸ்டரரால் ஓர் ஆவணப்படமும் இயக்கினார்கள்.
இந்த ஆவணப்படங்கள் ஜாதவ் குறித்த முழுமையான சித்திரத்தை வழங்கின. கேன்ஸ்
உள்ளிட்டபல விருதுகளையும் பெற்றன.