10 TH STD -TAMIL -GRAMMAR AKAPORUL ILAKKANAM

அகப்பொருள் இலக்கணம் 

தமிழில் உள்ள மிகவும் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில், ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, களவியல் காரிகை, நம்பி அகப்பொருள் விளக்கம், மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள் ஆகும். மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது.

பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்.

10.ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற அகப்பொருள் இலக்கணம் என்ற பாடப்பகுதியை முழுமையாகவும்,எளிதாகவும் விளக்கும் காணொளியும், அதைச்சார்ந்த வினாடி வினாவும் இங்கே தரப்பட்டுள்ளது.

  தேர்வில் பங்கேற்று 60% மதிப்பெண் பெறுவோருக்கு இலவச மின்சான்றிதழ் அனுப்பப்படும்.

காணொளியைக் காண👇👇


வினாடி வினாவில் பங்கேற்க👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை