மாதிரி பொதுத்தேர்வு-10.ஆம் வகுப்பு-தமிழ்
அன்பார்ந்த தமிழ் ஆசிரிய பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பான வணக்கங்கள்.
அடுத்த வாரம் ஆறாம் தேதி தொடங்க உள்ள அரசுப் பொது தேர்வுக்கு மாணவர்கள் பரபரப்பாகத் தயாராகி வருகின்றனர். அவர்களைப் பொதுத்தேர்வுக்குச் சிறப்பாகத் தயார்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே 2 திருப்புதல் தேர்வுகளை நடத்தியது. மூன்றாம் திருப்புதல் தேர்வை பள்ளி அளவிலேயே வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் ஆண்டு முழுவதும் கற்றதை இந்த ஒரு வாரத்திற்குள்ளாகத் திருப்புதல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த மூன்று திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு மதிப்பெண் கொள்குறி வகையில் 100 முக்கிய வினா விடைகள் அடங்கிய தொகுப்பானது இங்கே வினாடி வினா வடிவில் தரப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வுக்குத் தயாராகும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகச் சிறந்த உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். இதில் பங்கேற்று 80 % மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அவரவர் மின்னஞ்சலுக்கு இலவச மின்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
மாதிரி பொதுத் தேர்வில் பங்கேற்றால், மாணவர்கள் ஏற்கனவே கற்றதை மீள்பார்வை செய்ய இந்த தேர்வு மிகவும் உதவிகரமாக இருக்கும். பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் மற்ற ஊடகங்களில் இந்த இணைப்பைப் பகிர்வது மூலம் மாணவர்கள் இணையவழி பொதுத் தேர்வில் பங்கேற்கச் செய்யலாம்.
வினாக்கள் தொகுப்பு:
திரு.இராமகிருஷ்ணன்(தமிழ்விதை வலைதளம்),
அ.உ.நி.பள்ளி,
கோரணம்பட்டி,
சேலம் மாவட்டம்.
இணையவழிப் பொதுத்தேர்வில் பங்கேற்க