WORLD BOOK DAY-SPECIAL QUIZ WITH E-CERTIFICATE

   உலக புத்தக தினம்-சிறப்பு வினாடி வினா

   உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் ஏப்ரல் 23 இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர், இன்றைய நாளை உலக புத்தக தினமாக  கொண்டாட நெகிழ்ச்சியான வரலாற்று காரணம்  உண்டு.

"வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை." என்றார் ஹென்றி வார்ட் பீச்சர், புத்தகங்கள் வீட்டை மட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கையையும் அழகாக்கும், வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரின் வாழ்க்கையையும் அழகாக்கும். புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், இந்த உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக இன்று ஒரு புத்தகமாவது வாங்குங்கள்.  அதை படிக்க ஆரம்பியுங்கள். 

உலக புத்தக தினம்
அறிவுசார் சொத்துகளான புத்தகங்களை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஆண்டு தோறும் உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களை நினைவு படுத்தும் ஏப்ரல் 23
உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமாக, உலகின் தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்ததும் ஏப்ரல் 23, அதைப்போல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23. அது போலவே, ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23ம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப் படுகிறது.

1616, ஏப்ரல் 23ம் நாள் உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ (William Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega ) போன்றோர் இறந்தனர்.
மாரிஸ் டிரியூன் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற எழுத்தாளர்களும் இந்த உலகத்தில் பிறந்தது ஏப்ரல் 23 தான்.

      ஆக உலகின் பல பகுதிகளில் ஏப்ரல் 23 இல் புகழ்பெற்ற இலக்கிய வாதிகளின், பிறப்பும், மறைவும் வந்துள்ளது. அதிலும் மிகவும் பிரபலமான வில்லியம் ஷேக்ஸ்பியர், சிறந்த சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் இவருடைய பிறப்பும் , இறப்பும் ஏப்ரல் 23 தான். என்ன ஒற்றுமை என வியக்க வைக்கிறதா ? அதனால் தான் இவர்களை மரியாதை செய்யும் வகையில், ஏப்ரல் 23ஐ ஒரு வரலாற்று சிறப்பு மிக்க குறியீடாக கொண்டு உலகப் புத்தக் தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாச்சார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
வினாடி வினாவில் பங்கேற்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை