CHENGALPAT DISTRICT FIRST REVISION EXAM TAMIL TENTATIVE ANSWER KEY(2023)

  10.ஆம் வகுப்பு-தமிழ்

முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள்

(செங்கல்பட்டு மாவட்டம்)

வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய👇👇

முதல் திருப்புதல் தேர்வு-2023 (செங்கல்பட்டு மாவட்டம்)

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

இ.எம்+தமிழ்+நா

1

2.    

ஈ.திருவெம்பாவை,திருப்பாவை

1

3.     

இ.எழிலி

1

4.     

ஆ.கலிங்கத்துப்பரணி

1

5.    

ஆ.நான்கு

1

6.    

இ.இரண்டு கோடி

1

7.     

ஆ.நூறு

1

8.    

ஆ.புறநானூறு

1

9.    

ஆ.எண்ணும்மை,வியங்கோள் வினைமுற்று

1

10.   

அ.தன்வரலாறு

1

11.    

ஈ. கிராம ஊழியன்

1

12.  

ஈ . கண்ணதாசன்

1

13.  

அ.மோனை

1

14.  

இ.பூமி

1

15.  

இ.நான்+ஓர்

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

கவிஞர்,இதழாசிரியர்,எழுத்தாளர்,பன்மொழியறிஞர்

2

17

வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2

18

காம்புகளின் கழுத்து முறியும் , தரையில் நழுவும்

2

19

அ.வளியை வாளியில் அள்ள முடியாது

ஆ.பள்ளி விட்டதும் வீட்டுக்குச் சென்றான்

2

20

சிலம்புகள் , நீர்(புனல்)

2

21

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

நாற்று,கன்று,குருத்து,பிள்ளை,குட்டி,மடலி,வடலி,பைங்கூழ்

2

23

பிரளயம்,கைவிலங்கு,ரிஷிமூலம்,பிரம்ம உபதேசம்

2

24

கிளர்+த்(ந்)+த்+அ  கிளர்-பகுதி,த்-சந்தி,ந்-விகாரம்,த்-இறந்தகால இடைநிலை ,அ- பெயரெச்ச விகுதி

2

25

வெட்சி-கரந்தை  ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை ,தும்பை - வாகை

2

26

சின்னம்,மனிதநேயம்

2

27

அழைப்பு மணி ஒலித்ததும்,கயல்விழி கதவைத் திறந்தார்

2

28

6- காலை,நண்பகல்,எற்பாடு,மாலை,யாமம்,வைகறை

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

30

    # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.

    # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.

    # அதுபோல,வித்துவக்கோட்டு அன்னையே,நீ எனக்கு  

       விளையாட்டாகத் துன்பங்கள்   செய்தாலும்,உனது அருளையே  

        எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

 

3

31

ü      உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

   அ)சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்  மனித வாழ்வுக்குத் தேவையான

      பண்பு நலன்களை  உருவாக்குகின்றன.

   ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என

      எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள்

      கூறுகின்றன.

    இ)நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை

       என்று  சங்க  இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும்

       பொருந்தக்கூடியது.

   ஈ)மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்

        இன்றைக்கும்  தேவையே.

3

33

இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்ட “சித்தாளு” கவிதையின் வரிகள் இவை

பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது

விளக்கம்: கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது.

3

34


அ.

     புண்ணியப்புலவீர்யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

    பண்ணிய குற்றம்எல்லாம் பொறுக்கஎனப்பரவித்தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும்மன்னநீ நுவன்ற சொல்லாம்

       தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத்தணிந்தது என்னா.

.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடைஅறியா

வளம்தலைமயங்கியநனந்தலைமறுகும்;

பால்வகைதெரிந்தபகுதிப் பண்டமொடு

    கூலம் குவித்தகூல வீதியும்; *

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

உவமை அணி – உவமை,உவமேயம்,உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது

3

36

ü    கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும்.

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

ü  கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும்.

ü  கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும்.

3

37

கருவிளம் கூவிளம் தேமா  புளிமாங்காய்

தேமா  புளிமா  மலர்

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

அ)

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது.

தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம்.

மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள்

தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும்.

5

39

ü  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர்.

ü  சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில் பயன்படுத்தியுள்ளார்.

ü  பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.

ü  குளத்தில் பூத்திருந்த மலர்களைப்பற்றிக் கூறும்போது சந்த சொற்களைச் சிறப்பாகக் கையாள்கிறார்.

இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம்

(அல்லது)

ஆ)

ü  வீட்டைத்தூய்மையாக வைத்திருத்தல்

ü  மழைநீரைச் சேமித்தல்

ü  பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல்

ü  வீதிகளைத் தூய்மைப்படுத்தல்

ü  மரங்களை வளர்த்தல்

ü  இயற்கை உரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

பணிவாய்ப்பு வேண்டி தன்விவரப் பட்டியலை நிரப்புதல்

 

 

1.     பெயர்                                                                          :      சி.கலைச்செல்வன்

2.    பாலினம்                                                                      :        ஆண்

3.    பிறந்த நாள் மற்றும் வயது                                                 :        ஆஆ – ஆஆ-ஆஆஆஆ

4.    தேசிய இனம்                                                                :        இந்தியன்

5.    பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                                          :      சிதம்பரநாதன்

6.    வீட்டு முகவரி                                                                :         12 பாரதியார் தெரு, சிலம்பு நகர்,

                                                                                                         கன்னியாகுமரி மாவட்டம்.

 

7.    தொலைபேசி / அலைபேசி எண்                                         :      9876543210

8.    பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்                                 :        498/500

9.    தாய்மொழி                                                                    :        தமிழ்

10.   பயின்ற மொழிகள்                                                           :      ஆங்கிலம்,மலையாளம்

11.    தட்டச்சு                                                                        :        தமிழ் ,ஆங்கிலம்

12.   கணினி                                                                       :        பட்டயம்

 

      மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில் தட்டச்சர் பணியினைத் தந்தால் என் பணியைச் சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

                                                                                                                           இப்படிக்கு,

                                                                                                 தங்கள் உண்மையுள்ள

                                                 சி.கலைச்செல்வன்   

5

42

அ)

1. அனுப்புநர்

2. பெறுநர்

3. ஐயா,பொருள்

4. கடிதத்தின் உடல்

5. இப்படிக்கு

6. இடம்,நாள்

7. உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

ஆ)

8. அனுப்புநர்

9. பெறுநர்

10. ஐயா,பொருள்

11. கடிதத்தின் உடல்

12. இப்படிக்கு

13. இடம்,நாள்

14. உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.                                                                                                      

5

 

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 அ)    கேட்கப்பட்ட ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு ,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

(அல்லது)

ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கடித அமைப்பு கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

44

அ) மற்றும் ஆ)

     கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கடித அமைப்பு கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

45

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும்.

நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டிற்காக தனியான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை குடியரசுநாள் விழாவாக ஜனவரி 26இல் கொண்டாடுகிறோம்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர்.இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         எண்ணற்றோர் சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன், தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி  ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

        நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

           மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.கல்வியறிவில் முக்கியத்துவத்தைப் பொது மக்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், காந்தி பிறந்த தினம்,ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், கொடி நாள், விடுதலை நாள், வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத் தாமே முன்னின்று நடத்திய முனைய வேண்டும்.

(அல்லது)

ஆ)     கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கடித அமைப்பு கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

8

  விடைக்குறிப்பை வடிவில் பதிவிறக்க👇

 

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை