அரையாண்டுத்தேர்வு 2024
ஈரோடு மாவட்டம்
வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
வினாத்தாள்👇👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
ஈ. சிற்றூர் |
1 |
|
ஈ. இலா |
1 |
|
ஆ. தளரப்பிணைத்தால் |
1 |
|
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
|
ஆ. மலேசியா |
1 |
|
அ.
அகவற்பா |
1 |
|
அ. கருணையன் , எலிசபெத்துக்காக |
1 |
|
இ. நற்றிணை |
1 |
|
ஈ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
|
இ. உருவகம் |
1 |
|
ஈ. கலைஞர்
மு.கருணாநிதி |
1 |
|
இ. முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் |
1 |
|
ஆ. குமரகுருபரர் |
1 |
|
ஈ. செங்கீரை |
1 |
|
அ. எண்ணும்மை |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது? ஆ.
இஸ்மத் சன்னியாசி என்னும் பாரசீகச்சொல்லுக்குப் பொருள் யாது? |
2 |
17 |
யாப்புக்
கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும், உரைநடையும் கலந்து
எழுதப்பெறுவது |
2 |
18 |
தினைச்சோற்றைப்
பெறுவீர்கள் |
2 |
19 |
நூல் வாங்குவதற்குப் போதிய
பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி. |
2 |
20 |
அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும்
நீதின்மன்றம் |
2 |
21 |
குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச்
சுற்றும் உலகு |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ. பண்டம்
குப்பையிலே ஆ. மருந்து மூன்று நாளுக்கு |
2 |
23 |
அ. சிறு பூனையும் சீறும் ஆ. விதியால் வீதிக்கு வந்தான் |
2 |
24 |
அ. திருச்சி ஆ. கோவை இ. புதுவை
ஈ. குடந்தை |
2 |
25 |
அ. புயல் ஆ. மனிதநேயம் |
2 |
26 |
பொறித்த
- பொறி + த் + த் +அ பொறி – பகுதி த் - சந்தி த்- இறந்தகால இடைநிலை அ- பெயரெச்ச
விகுதி |
2 |
27 |
முதல்நிலைத்
தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் |
2 |
28 |
அ. குழந்தை
தாயைப்பார்க்காமல் மழைகாணாப் பயிர்போல வாடியது. ஆ. ஆசிரியர்
கற்பித்த பாடம் சிலைமேல் எழுத்து போல மனதில் பதிந்தது |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
அ)
நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ)
கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ)
பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ)
வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ)
பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
30 |
அ)
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
31 |
அ. தனித்து உண்ணாமை ஆ. நல்லோர் பிறருக்குக் கொடுத்தல் இ. தமிழர் விருந்தோம்பல் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
32 |
ü நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின்
நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. |
3 |
33 |
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத்
தேடும் வழி அறியேன் ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
34 |
அ. . வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. ஆ. தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும் |
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
ü வஞ்சித்திணை:
மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது. ü காஞ்சித்திணை:எதிர்த்துப்
போரிடுவது. |
3 |
||||||||||||||||||||||||
36 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது.
இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது
கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள்
வரவேண்டாம் எனக் கூறி, கையசைப்பதாகக்
தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
38 அ. |
மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின்
வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். ஆ) ü தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு
ஏற்ற காலம், செயலின்
தன்மை, செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல்
, நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும்
சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். |
5 |
||||||||||||
39 |
அ) ü
அனுப்புநர் முகவரி ,நாள் ü
விளித்தல் ü
கடிதத்தின் உடல் ü
இப்படிக்கு ü
உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ஆ) ü
அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின் உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||||
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||||
42
அ. |
(
மாதிரி விடை)
ஆ) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில்
மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன.
விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத
ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) விருந்தினரை
வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு
வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர்
குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண
அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன். வாழை
இலையில் விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது
தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும்
உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின்
விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து,
அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன்
பரிமாறினேன். வெற்றிலை
பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு
பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத்
தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை
ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம்
திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து வீட்டுத்
தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும் கொடுத்து அவரது
வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை
சென்று வழியனுப்பி வைத்தேன். ஆ) முன்னுரை: பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக்
கலைஞர்: தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார். பேச்சுக்
கலைஞர்: பல தமிழறிஞர்களின் பேச்சைக்
கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார். நாடகக்
கலைஞர்: கலைஞர் சீர்திருத்த நாடகங்களை
இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார்.
இந்நாடகத்தின் பாராட்டு விழாவில் “ கலைஞர்
” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது. திரைக்கலைஞர்: எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார். இயற்றமிழ்க் கலைஞர்: கலைஞர் பல சிறுகதைகள்,
புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார். முடிவுரை: தமிழின் மெருமிதங்களையும்,
விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. |
8 |
44 |
அ. அ) முன்னுரை,
பொருளுரை(உட்தலைப்புகள்) , முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ஆ. வீரப்பனும்,
ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற
குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு
மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ. முன்னுரை: கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன்
எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.
அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: நுழைவாயிலின் வழியாக
நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள்
எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை
உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ஓரிடத்தில்
அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின்
எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது நிகழ்த்தப்பட்ட கலைகள்: அங்கே
மயில் ஆட்டம்,
ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. முடிவுரை: .கூட்ட நெரிசல் மிக
அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது.
ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச்
சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு
அமைந்தது. ஆ. தலைப்பு: இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) முன்னுரை: நமது
சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது.
மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா?
அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். விசும்பின் துளியும் பசும்புல்
தலையும்: ”விசும்பின்
துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது" என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது
இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது..
வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில்
பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப்
படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. காற்று மாசு: ”உங்கள்
சுவாசத்தை நிறுத்தும் முன் காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்” மக்கள் தொகைப் பெருக்கம்,
மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு,
வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள்,
பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும்
நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி,
காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம். பசுமையைக் காப்போம்: ”மரம் தான்
மரம் தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன்
மறந்தான்” சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று
இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி
பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது
ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில்
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும். மரமும் மழையும் வரமும்
உயிரும்: 'விண்ணின்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி' ஒவ்வொரு மரமும் பல்லாயிரம்
உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர்
அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர்
நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய
வழிமுறைகளாகும். முடிவுரை: இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம். |
|