எழுத்துகள் பெறும் மாத்திரை

மாத்திரை

எழுத்துகள் ஒலிக்கப்படும் கால அளவுக்கு மாத்திரை என்று பெயர்.  நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம்,  அல்லது கை நொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை ஆகும்.
 

குறில் எழுத்துகள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும் நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
 

உயிர்மெய் எழுத்துகள் அவற்றில் சேர்ந்து இருக்கும் உயிர் எழுத்தின் மாத்திரை அளவே ஒலிக்கப்படும்.  உயிர்மெய்க் குறில் ஒரு மாத்திரை.  உயிர்மெய் நெடில் இரண்டு மாத்திரை.
 

(உயிர்க் குறில், உயிர் மெய்க் குறில்) - 1 மாத்திரை
(உயிர் நெடில், உயிர்மெய் நெடில்) - 2 மாத்திர
மெய் - 1/2 மாத்திரை
ஆய்தம் - 1/2 மாத்திரை
உயிரளபெடை - (1/2 + 2) மாத்திரை
ஒற்றளபெடை - (1/2 + 2) மாத்திரை
குற்றியலுகரம் - 1/2 மாத்திரை
குற்றியலிகரம் - 1/2 மாத்திரை
ஐகாரக்குறுக்கம் மொழி முதலில் - 1/2 மாத்திரை
மொழி, இடை, கடை - 1 மாத்திரை
ஔகாரக் குறுக்கம் மொழி முதல் மட்டும் - 1
மகரக் குறுக்கம் - 1/4 மாத்திரை
ஆய்தக் குறுக்கம் - 1/4 மாத்திரை

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை