9 TH STD TAMIL KATTURAI, KATIDHANGAL

9.ஆம் வகுப்பு - தமிழ் கட்டுரைகள்

இயல்-1 கடிதம் எழுதுதல்

உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின், “ கால்முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

12, தமிழ் வீதி,

மதுரை-2

                                                                                                                    28,செப்டம்பர் 2021.

ஆருயிர் நண்பா !                                      

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.

    உலகம் தோன்றியது எப்படி என்ற வினாவிற்கு, இன்றுவரை தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. உலகம் எப்படி தோன்றியது  என்ற கேள்விக்கு இந்நூலிலுள்ள கதைகள், வியப்பான விடைகளைத் தருகின்றன. பழங்குடியினர் முப்பதுபேர் சொன்ன கதைகளைக் கொண்டதாக இத்தொகுப்பு உருவக்கப்பட்டுள்ளது.

     வண்ணத்துப்பூச்சி ஏன் பூக்களைச் சுற்றுகிறது என்ற ஒரு கதை. வயதான பெண் ஒருத்தி தன்னுடைய பூந்தோட்டத்தில் பூத்திருந்த பூக்களை யாரோ பறித்துவிட்டதை எண்ணி, இரவு  முழுவதும் வருந்தினாள் மறுநாள் மறைந்து இருந்து பூக்களைப் பறித்தவர்களைப் பிடித்துவிட்டாள்.

      பூக்கள்மீது இருந்த ஆசையால் பறித்தோம் என்று ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூறுகின்றனர். கிழவி அவ்விருவரையும்  வண்ணத்துப் பூச்சிகளாக உருமாறச் செய்துவிடுகிறாள். அன்றிலிருந்து வண்ணத்துபூச்சிகள் பூக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன  என்று, கதை முடிகிறது.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்க்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

                                                                                                                                            அன்பு நண்பன்,                                                                                                                                                .எழிலன்.

உறைமேல் முகவரி:

கி.தமிழின்பன்,

2,வள்ளுவன் தெரு,

காஞ்சி-1

 

இயல்-2 வரவேற்புரை எழுதுதல்

அரசினர் உயர்நிலைப் பள்ளி,

தணிகைப் போளூர்.

28.9.2021 அன்று பள்ளியில் நடைபெற்ற சிறந்த பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்

   திருமிகு . ஆடலரசு அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு மடல்

   தமிழகம் பெற்ற தவப்புதல்வரே!

    வருக! வருக! வணக்கம்.

     மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் பாதுகப்புப் பற்றிய ஆய்வில் எம் பள்ளி முதலிடம் பெற்றதாகத் தாங்கள் அறிவித்து கண்டு, பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தங்களை வரவேற்கும் பேறு பெற்றமைக்குப் பெரிதும்  உவகை கொள்கிறோம்!

புதுமை வழிகண்ட புரட்சித் திலகமே!

பள்ளிகளின் சுற்றுபுறத்தைப் பேணிகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம்!

   எங்கள் வகுப்பறையைப் போலவே ஆய்வுக்கூடம், விளையாட்டிடம், கழிப்பறை ஆகிய அனைத்தையும் நீங்கள் கூறிய வழிமுறைகளை  நாளும் கடைப்பிடித்து வருகிறோம்.

நடுநிலை தவறா நாயகரே!

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பல ஆண்டுகளாக மாணவர்களுக்குப் போதிப்பதோடு, மரம் நட்டும் பராமரித்து வருகிறோம்.

நீங்கள் பள்ளிக்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டியதற்கு, நன்றியை நவில்கின்றோம்.

                                                        நன்றி, வணக்கம்

தணிகைப்போளூர்

28.9.2021.                                                                                           தங்கள் அன்புள்ள,

                                                                                                              விழாக்குழுவினர்.

இயல்-3 தொகுப்புரை எழுதுதல்

தொகுப்புரை எழுதுக:

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை எழுதுக.

     தணிகை போளூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 28-09-21 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர் இ.தமிழமுதன் சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும், மாணவர்களைச் சிந்திக்க வைக்க முடியும் என்றெல்லாம் கூறித் தாய்மொழியின் இன்றியமையாமையைக் கூறினார்.

      கல்வியின்நோக்கம் சிந்தனைத்திறமையையும், முழுமையான மனிதத் தன்மையையும்,உயிரினும் மேலான ஒழுக்கத்தையும் உருவாக்குவதே. மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

இயல்-5 கடிதம் எழுதுதல்

     உங்கள் பள்ளி  நூலகத்திற்குத் தமிழ்தமிழ்ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

                                                                                                                                 தணிகைப்போளூர்,                                                                                                                                              27.09.21.

அனுப்புநர்

         . இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        12ஆம் வகுப்புபிரிவு,

        அரசினர் மேனிலைப்பள்ளி,

        தணிகைப்போளூர்,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

                   வணக்கம். உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல்                  மொழியாகவும், முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது      தமிழ்மொழியே. கல்தோன்றி  மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்குப் பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                                      தங்கள்               

                                                                                                                 உண்மையுள்ள,

                                                                                                                                      .இளவேந்தன்.

                                                                                                            (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001

இயல்-7 வருணித்து எழுதுதல்

எனது பயணம்எனும் தலைப்பில் உங்களது பயணஅனுபவங்களை வருணித்து எழுதுக.

இயற்கையின் தாய்மடிஉதகை

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து,உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது.மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.

      மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம்.மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக அமைந்தது.

     3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.

இயல் -8 கடிதம் எழுதுதல்

1)முத்துக்குமார்  தம் மகனுக்கு  எழுதிய  கடிததைப்போல  நீங்கள்  யாருக்குக்  கடிதம்  எழுத  விரும்புகிறீர்கள்? அப்படியொரு கடிதம் எழுதுக.

                               படித்து  மகிழ்ந்த  நூல்பற்றி  நண்பருக்குக் கடிதம் .

                                                                                                                                                        சென்னை-600005                                                                                                                                                                            28.09.2021

அன்புள்ள நண்பா,

       உன் கடிதம் கிடைத்தது . வீட்டில் உள்ளவர்கள்  நலம் அறிந்து மகிழ்ந்தேன். உனக்கிருக்கும் பல்வேறு வேலைகளுக்கு இடையில், எனக்குக் கடிதம் எழுதியுள்ளதை எண்ணி வியக்கிறேன். உன் அறிவுரைப்படி பாடநூல்களைப் படிப்பதோடு நின்றுவிடாமல், நல்ல பிற புத்தகங்களையும் படிக்கிறேன்.

      அண்மையில் தீபம் நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய குறிஞ்சி மலர் பற்றி ஒருநாள் வகுப்பில் தமிழசிரியர் பேசிக்கொண்டிருந்தார். அவர் கல்லூரியில் படித்த காலத்தில், அது கல்கி வார இதழில் தொடர்கதையாக வந்ததாகக் கூறினார் . அவர் சொன்ன அந்த முறையே, என்னை அந்த நாவலைத் தேட வைத்தது. கோடை விடுமுறையின்போது , நூலகம் ஒன்றில் கண்டெடுத்துப் படித்தேன். மிகவும் சுவையான புதினம். இன்றைய தலைமுறை இளைஞர்கள், அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் அது .

          இதுபோன்ற நல்ல நாவல்கள் நம்மைக் காப்பாற்றி, நம் பண்பாட்டையும் நற்பழக்க வழக்கங்களையும், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் உணர்த்தி, நம் போன்ற இளைஞர்களைக் கரை சேர்க்கும் என எண்ணுகிறேன். சிறந்த நூல்களைத் தேடிப் படிக்கும் இயல்புடைய நீ, நல்ல நூல்களைப் படித்தால், எனக்கு அவற்றைப் பற்றி எழுதி அறிமுகம் செய்யவும்.

     

வணக்கம்.

                                                                                                           உன் அன்புள்ள நண்பன்,

                                                                                                                 சி. எழில்வண்ணன்.  

உறைமேல்முகவரி:

   .தமிழ்மறவன்,

   2 ,கம்பன் நகர்,

   மயிலாடுதுறை-1       

 

 

 

 2)வகுப்பில் நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பரின் சிறந்த பண்பைப் பாராட்டியும் அவர் மாற்றிக்கொள்ள வேண்டிய பண்பையும் பெயரைக் குறிப்பிடாமல் கடிதமாக எழுதிப் படித்துக் காட்டுக  .

 அன்பு நண்பர்களே,

           அனைவருக்கும் வணக்கம். நம் வகுப்பில் படிக்கும் படிக்கும் நண்பன் ஓருவன், தன் பெயருக்கு ஏற்பப் பணவசதியிலும் அவன் செல்வந்தன்தான்! தன்னோடு படிக்கும் மாணவர்களோடு வேறுபாடு கருதாமல் பழகுவான். பள்ளியில் நடைபெறுகின்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு, முதல் பரிசு பெறுவான், இப்படிப் பல்வேறு திறமைகளைக்  கொண்டிருப்பவன், மற்றவர்களோடு சேர்ந்து விளையாட வரமாட்டான். மாறாக, விளையாட்டுத் திடலுக்கு அருகில் உள்ள சோலைக்குச் சென்றுவிடுவான்.

           சோலையில் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிப்பான். அவற்றின் சிறகுகளைப் பிடித்துவிட்டும், அவை தவிப்பதைப் பார்த்து, மகிழ்ச்சி அடைவான். தும்பிகளைப் பிடித்து வாலில் நூல்கலைக்கட்டிப் பறக்க முயலும் போது, பிடித்து இழுப்பான். பொன்வண்டுகளைப் பிடித்துகல்லோடு கட்டி, அவை திண்டாடும் காட்சியைக் கண்டு ரசிப்பான். டேய், அந்தப் பூச்சிகளைத் துன்புறுத்தக் கூடாது  என்று கூறினாலும் கேட்கமாடான். நண்பர்களும்    எப்படியோ போகட்டும் என்று  விட்டுவிட்டார்கள். அன்று இரவு அவன் கனவில் ஒரு பேய் வருவது வருவது போலவும் , நான் யாருக்கும் இனிமேல் தீங்கு செய்யமாட்டேன் என்று உறுதி கூறினான் . கனவு கலைந்தது.

              நம்மைவிட வலிமை குறைந்தவர்களை நாம் துன்புறுத்தக் கூடாது என உணர்ந்து திருந்தினான் . நண்பர்களே! நாமும் அவனைப்போல், எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது.                                                                        

                                                                                                                             அன்பு நன்பன்,

                                                                                                                    கண்ணன்                                                             

இயல் -8 அஞ்சல் அட்டையில் எழுதுதல்

வார இதழ் ஒன்றில் படித்த கவிதையை/கதையைப் பாராட்டி அந்த இதழாசிரியருக்கு அஞ்சலட்டையில் கடிதம் எழுதுக.

4,ஔவை நகர்,

கடலூர்-1.

30-09-2021.

மதிப்புமிகு இதழாசிரியருக்கு,

      வணக்கம்.தங்களதுதமிழ்த்தேனீஎன்ற இதழில் வெளியாகக் கூடிய கவிதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர் நான்.24-09-2021 அன்று வெளியான இதழில் திரைப்பட இயக்குநர் இரா.பார்த்திபன் அவர்களின்கருணைஎன்ற தலைப்பில் வெளிவந்த கவிதையில்,

                                    “கருவுற்றிருந்தால்

                                     ஒரு குழந்தைக்கு மட்டுமே தாயாகியிருப்பாய்:

                                     கருணையுற்றதால்,

                                     உலகிற்கே தாயானாய்

     என்ற அன்னை தெரேசா பற்றிய கவிதையைப் படிக்க நேர்ந்தது.படித்ததும் மிகவும் நெகிழ்ந்து போனேன்.கருணையையும்,தாய்மையையும்  ஒன்றிணைத்து மேன்மைப் படுத்தியிருப்பது பாராட்டத்தக்க ஒன்று.இரா.பார்த்திபன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இப்படிக்கு,

தங்கள் அன்பு வாசகர்,

.யாழினி.

உறைமேல் முகவரி:

   ஆசிரியர், தமிழ்த்தேனீ இதழ்,

   12,தமிழ்ச்சோலை நகர்,

   சென்னை-2.

 

இயல் -9 மதிப்புரை எழுதுதல்

உலகப்பொதுமறைதிருக்குறள்

      இனம்,மதம்,மொழி,நாடு என அனைத்தையும் கடந்து உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை நூலாகக் கருதப்படுவது வான்புகழ் வள்ளுவன் எழுதிய திருக்குறளாகும்.

    அறம்,பொருள்,இன்பம் ஆகிய முப்பொருளின்(பால்) அடிப்படையில் அமைந்த திருக்குறளில்  வீடுபேறு என்ற ஒன்று இடம்பெறாததற்குக் காரணம் என்னவென்று யாரேனும் சிந்தித்ததுண்டா?

     முப்பாலையும் கற்றுணர்ந்தால் வீடுபேறு தானே கிடைக்கும் என்பதால்தான் என்று எனக்குத்தோன்றுகிறது.நூல் வைப்பு முறை,பாக்கள் அமைப்பு,இலக்கணப் பிறழ்ச்சியின்மை என அனைத்துமே திருக்குறளில் மிகச்செம்மையாக உள்ளது.

    ”அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்”  என்று ஔவையார் திருக்குறளைப் புகழ்ந்துரைத்தது எவ்வளவு பொருத்தமானது எனத் திருக்குறளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

 PDF வடிவில் பதிவிறக்க

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை