9.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 6
(பக்க எண்: 170 கற்பவை கற்றபின்)
1. எழுத்துவகைஅறிந்து பொருத்துக.
1.
இயல் - அ. உயிர் முதல்உயிரீறு
2.
புதிது - ஆ. உயிர் முதல்மெய்யீறு
3.
ஆணி - இ. மெய்ம்முதல்மெய்யீறு
4. வரம் - ஈ. மெய்ம்முதல்உயிரீறு
விடை: 1 -ஆ , 2 -ஈ , 3 -அ , 4 – இ
2. புணர்ச்சிகளை முதல், ஈற்றுச்சொல்வகையால் பொருத்துக.
1.
செல்வி + ஆடினாள்- அ. மெய்யீறு + மெய்ம்முதல்
2.
பாலை + திணை - ஆ. மெய்யீறு + உயிர்முதல்
3.
கோல்+ ஆட்டம் - இ. உயிரீறு + உயிர்முதல்
4.
மண்+ சரிந்தது - ஈ. உயிரீறு + மெய்ம்முதல்
விடை: 1 -இ , 2 -ஈ , 3 -ஆ , 4 – அ
3. சேர்த்து எழுதுக.
அ) தமிழ் + பேசு – தமிழ்பேசு
ஆ) தமிழ் + பேச்சு – தமிழ்ப்பேச்சு
இ) கை + கள் – கைகள்
ஈ) பூ + கள் – பூக்கள்
4. பொருத்தமான உடம்படுமெய்யுடன்இணைக்க.
அ)
பூ + இனம் - பூவினம் (வ்)
ஆ)
இசை+ இனிக்கிறது –
இசையினிக்கிறது (ய்)
இ)
திரு + அருட்பா
– திருவருட்பா (வ்)
ஈ) சே+ அடி – சேவடி ,சேயடி (வ்,ய்)
சிந்தனை கிளர் வினாக்கள்
அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.
விடை:
ü குற்றியலுகரத்தில் வரும் "உ" கரமானது
தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக
குறுகி ஒலிக்கும்.
ü முற்றியலுகரத்தில் வரும் "உ" கரமானது
தன் ஒரு மாத்திரை அளவில் குறையாது ஒலிக்கும்,
ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதுவதற்கு உதவும் - இக்கூற்றை
ஆய்க,
விடை:
v
ஒரு சொல்லைப்
பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி - எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான்
உரைநடை எழுதும் போது ஏற்படும் ஒலி நிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும்,
v
வல்லினம் மிகும்
மற்றும் மிகாவிடங்கள், சொற்சேர்க்கை
ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும் அவற்றைத் தெறிவாகத் தருவது புணர்ச்சி இலக்கணம்
எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.
இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.
தமிழின் 'தொன்மை + ஆன' இலக்கண 'நூல் +
ஆகிய' 'தொல்காப்பியம் + இல்' 'சிற்பம்
+ கலை" பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண் படடு இறந்த
வீரருக்கு நடுகல் நடப்படும். அ + கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். 'தமிழக + சிற்பம் + கலை" யின் தோற்றத்திற்கான சான்றாக 'இதனை + கொள்ளலாம்' சிலப்பதிகாரத்தில் 'கண்ணகிக்கு சிலை' வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது.
மாளிகைகளில் பல 'சுதை + சிற்பங்கள்" இருந்ததை மணிமேகலை
மூலம் 'அறிய + முடிகிறது'
விடை:
தொன்மை + ஆன = தொன்மையான
நூல் + ஆகிய = நூலாகிய
தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
சிற்பம் + கலை = சிற்பக்கலை
அ + கல்லில் = அக்கல்லில்
தமிழக + சிற்பம் + கலை = தமிழகச்சிற்பக்கலை
இதனை + கொள்ளலாம் = இதனைக்கொள்ளலாம்
சுதை + சிற்பங்கள் = சுதை
சிற்பங்கள்
அறிய + முடிகிறது = அறிய முடிகிறது
ஈ)
படக்காடசியிலிருந்து இரு சொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக்
கண்டறிக
எ.கா.
மரக்கிளை– விகாரப்புணர்ச்சி, மூன்று பெண்கள்– இயல்பு
புணர்ச்சி
அ. நிறை+
குடம் = நிறைகுடம் , இயல்புப் புணர்ச்சி
ஆ. உழவு + தொழில் = உழவுத்தொழில் , தோன்றல் விகாரப்புணர்ச்சி
(பக்க எண்: 172 மதிப்பீடு)
பலவுள் தெரிக.
1. பல்லவர்
காலச் சிற்பக்கலைக்குச் சிறந்தசான்று ___________
அ)
மாமல்லபுரம்
ஆ) பிள்ளையார்பட்டி இ) திரிபுவனவீரேசுவரம் ஈ) தாடிக்கொம்பு
2. ’பொதுவர்கள்
பொலிஉறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி
_______
அ) குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
3.
மரவேர் என்பது ________ புணர்ச்சி
அ) இயல்பு ஆ) திரிதல் இ) தோன்றல் ஈ) கெடுதல்
4.
’அதிரப்புகுதக்கனாக்கண்டேன்’ -யார் கனவில்யார் அதிரப்புகுந்தார்?
அ) கண்ணனின் கனவில் ஆண்டாள்புகுந்தாள் ஆ) தோழியின்
கனவில்ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டாளின் கனவில் தோழி
புகுந்தாள் ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன்
புகுந்தான்
5) திருநாதர்குன்றில்ஒரு
பாறையில்புடைப்புச் சிற்பங்களாகஉள்ளவை________ .
அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள் ஈ)நாட்டியம் ஆடும்
பாவைஉருவங்கள்
குறுவினா
1.
செப்புத்திருமேனிகள்பற்றிக்குறிப்பு வரைக.
விடை:
ü
செப்புத் திருமேனிகள்
சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகும். சோழர் காலத்தில்தான்
மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.
ü
கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு
வடிவமைக்கப் பட்டன.
ü
சோழர் காலம்
"செப்புத் திருமேனிகளின் பொற்காலம்" என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை
அழகுற அமைந்துள்ளன.
2.
நடுகல்என்றால்என்ன?
விடை:
- நடுகல் பற்றியக் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
- போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
- அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப் பெறும். அவரது வீரத்தின் சிறப்பும் கூறப்பெறும்.
- தமிழரின் தொடக்ககாலச் சிற்பக் கலைக்குச் சான்றாக இதனைக் குறிப்பிடுவர்.
3.
இசைத்தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
விடை:
இசைத்தூண்கள் விஜய நகர மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டவை.
4.
கண்ணன் புகுந்தபந்தல்எவ்வாறு இருந்தது?
விடை : பந்தலின் கீழ் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது
5.
இடிகுரல், பெருங்கடல்–
இலக்கணக்குறிப்புத்தருக.
விடை
: இடிகுரல் – வினைத்தொகை , பெருங்கடல் – வினைத்தொகை
6.
பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
விடை:
சிறுவர்கள் பாலைக்காயை அடித்து விளையாடிய ஒலியைக் கேட்ட பருந்துகள் பறந்தன
சிறுவினா
1.
முழு உருவச் சிற்பங்கள்– புடைப்புச் சிற்பங்கள்இரண்டிற்கும் உள்ள
வேறுபாடு யாது?
விடை:
முழு உருவச் சிற்பம்: உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்து இருக்கும்.
புடைப்புச் சிற்பம்:
புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி
மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.
2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள்யாவை?
விடை:
- நாயக்கர் காலச் சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன்
காணப்படும்.
- நாயக்கர் காலச் சிற்பங்களை, கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என்று
கூறலாம்.
- விழியோட்டம், புருவ நெளிவு,
நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலை நயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.
3.
இராவணகாவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
விடை:
குன்று போல :
முல்லை நிலத்தவர்கள்,
முதிரை. சாமை, கேழ்வரகு மணி
போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது
குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.
மதியம் தொடரும் மேகம் போல :
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது,
தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும்.
அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின்
காட்சி போல் உள்ளது என்று உவமைப் படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.
4.
ஆண்டாளின் கனவுக்காட்சிகளைஎழுதுக.
விடை:
- சதிராடும் இளம்பெண்கள்,
தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும்
ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
- மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர
மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
- மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத,
முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத்
திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்
5.
குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக்குறிப்பிடுக.
விடை:
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின்
மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி
நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும்
பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.
6.கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள்வேறுபாடுகளையும்
அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
விடை:
“கை பிடி” – கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
“கைப்பிடி” – கைப்பிடி அளவைக் குறிப்பது.
(ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
கை + பிடி →
கைபிடி – இயல்புப் புணர்ச்சி ஆகும்.
கை + பிடி →
கைப்பிடி (தோன்றல்) – விகாரப்புணர்ச்சி
ஆகும்.
நெடுவினா
1.
இராவணகாவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில்காட்சிகளை விவரிக்க.
விடை:
முன்னுரை:
இராவணனை
முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவணகாவியம்
தமிழகக் காண்டத்தில் அமைந்துள்ள ஐந்து நில அழகுக் காட்சிகளைக் காண்போம்.
அருவியின் அற்புதக்காட்சி:
அருவிகள்
ஆர்ப்பரித்து பறையாய் ஒலிக்க பசுமையான கிளிகள் நாங்கள் அறி விழிசையை பாட
இனிமையாகப் பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகுக வீர்த்து ஆடும்.
இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கு ஆசியுடன்
பார்க்கும்.
தீயில்
இட்ட சந்தனமரக்கட்டைகளின் மணமும், அகிலின் நறுமணமும்,
உலையில் மலை நெல்லின் சோற்றின் மணமும் ஆற்றிடைப் பள்ளங்களில் உள்ள
காந்தள் மலரின் மணமும் எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள
பொருள்கள் ணம் கமழ்ந்து குன்று முழுவதும் நிறைந்திருந்தது.
முல்லையின் எல்லையில்லா
அழகு:
நாகணவாய்ப்
பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்து இனித பாட, மா, பலா, வாழைப் பழங்களோடு
தேனும் தந்து இசைப்பாடி மகிழ்ந்தனர் புகழ் முல்லை நில மக்களான ஆயர் முக்குழல்
இசையோடு மேயும் பசுக் கூட்டங்களை அ ஒன்றிணைத்தனர்.
முதிரை,
சாமை, கேழ்வரகு, மணி போன்ற
குதிரைவால் நெல் ஆகியவற்றைக் கதிரம த்தில் குன்று போலக் குவித்து வைத்திருப்பர்
இடையர்கள் அழகு மிகு கதிர்களை அடித் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள்
பயத்துடன் அஞ்சி ஓடும்.
பாலையின் வெம்மை காட்சி :
கொடிய
பாலைநிலத்தில் வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குப் வாய் மிகவும்
உலர்ந்து குழறியது. இதனை கண்டு அதன் தாய் வருந்தியது. இளைப்பாறவும் நிழவில்லாததால்
கடும்வெயிலில் தான் துன்புற்று நின்று தனது நிழலில் கு நிளைப்பாறச் செய்தது.
மருத நிலத்தின் காட்சி:
மலையிடையே
தோன்றும் அழகிய ஆறும், கரையை மோதித் ததும்பும் குளத்து
நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தல் பாய்ந்தோடும். அங்கு
நெய்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும் பெருகி வரும் நீரினைக்
கால்வாய் வழி வயலி, தேக்கி வளம் பெருக்கும். இத்தகு வளம்
நிறைந்த மருத நில வயலில் காஞ்சி வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.
தாமரை
மலர்கள் நிறைந்திருந்த குளத்தில் சிறுவர்கள் ஆடி மகிழ்ந்து நீராடினர் அக்குளத்தில்
நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து அதன் வடிவழகு சுண்டு மகிழ்ந்தனர்.
சிறுகழல் அணிந்த சிறுவர்கள் வைக்கோல் போர் குலுங்கிடும். படி ஏறி தென்னை
இளநீர்க்காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்..
குறிஞ்சி தரும் குன்றா அழகு:
தும்பியானது
கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி கடற்கரை மணவிடை உலவி காற்றிலே
தன் நீண்ட சிறகினை உலர்த்தும் பின்னர் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை
நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும்
கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.
முடிவுரை :
இராவண
காவியம் தரும் அழகு காட்சிகள் நம் கண்முன் இனிய காட்சிகளைத் தருகின்றன. தமிழரின்
ஐந்நிலக்காட்சிகள் நம் நாட்டின் வளமான காட்சிகளை நம் கண்முன் காட்டுகின்றன.
2.
தமிழ்நாட்டுச் சிற்பங்கள்கலைநயம் மிக்கனவாகவும்
வரலாற்றுப்பதிவுகளாகவும் இருப்பதைநிறுவுக.
விடை:
முன்னுரை:
கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம்
என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினாள், உணர்வுகளையும்,
நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின்
வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.
சிற்பங்களின்
கலைநயம்:
"கற்கவிஞர்கள்"
என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும்
கலைநயம்
மிக்கலையாய் மிளிர்கின்றன. சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றுளர்கள், கற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிரச் செதுக்கினர்
புதுக்கோட்டைமாவட்டம்நார்த்தாமலையில்
உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை
நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித
உருவங்களும் மிகுந்த கலை நுடபத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள்
சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.
கோவில் கோபுரங்களில்
கதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை அணிகலன்கள் அரிந்த நிலையில்
உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள்
விழியோட்டம், புருவ நெளிவு. நகஅமைப்பு என மிக மிக நுட்பமாக
கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி
கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி
சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை,
சிற்பங்கள்
வரலாற்றுப் பதிவுகள்:
சிற்பக் கலையைப் பற்றிக் கூற
முற்படுகின்ற பொழுது. பல்லவர் காலச் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பங்கள், சோழர் காலச் சிற்பங்கள் ,விஜய நகர மன்னர் காலச்
சிற்பங்கள், நாயக்கர் காலச் சிற்பங்கள் என்றே
வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது. என்பதை
மறுக்க இயலாது.
மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில்
உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம். திருமயம் பிள்ளையார்பட்டி,
குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச்
சான்றுகளாகும்.
கங்கை கொண்ட சோழபுரம்,
தாராகரம், திரிபுவனம், தஞ்சை
பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன்,
குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.
விஜயநகர மன்னர்கள் கோவில்களில்
மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில்
கதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர், சோழர் காலத்தை
செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.
நாயக்க மன்னர்களின் காலத்தில்
ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது.மதுரை மீனாட்சியம்மன்
கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி,
அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.
முடிவுரை:
'சிற்பங்கள் என்பன
தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும். என்னய உருவங்கமைக் கண்டு களிப்பதற்கும்
மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறியில் முதிர்ச்சிக்கு
ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.
3.
இசைக்கு நாடு, மொழி, இனம்
தேவையில்லைஎன்பதைச் ‘செய்தி’ கதையின் மூலமாகவிளக்குக.
விடை:
முன்னுரை :
இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப்
பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது.
இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம்,
நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.
இசைக்கு நாடு, மொழி, இனம்
தேவையில்லை என்பதைச் செய்தி என்னும் கதை உணர்த்துகிறது.
வித்வானின் வருகையும், அறிமுகமும் :
நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும்,
ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.
வக்கீல் வீட்டில்
“பிலிப் போல்ஸ்கா ” என்பவர் தலைமையில் மேற்கத்திய
சங்கீத குழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர்
தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி,
பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
கீர்த்தனம் தொடங்கினார்
:
வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம்
செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.
போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான்.
நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.
சாமாராகம் :
தஸரிமா……. மா” என்று
ஆரம்பித்த ராகம் கொஞ்சம் – கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு
….. மொழி தெரியாத போல்ஸ்காவைத் திரும்பிப் பார்த்தார் வக்கீல்.
அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான். மெல்லிய
காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். மேடைக்கருகில்
வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்து கையை மேடையோரத்தில் வைத்து முகத்தைப் புதைத்து தவத்தில்
ஆழ்ந்தவன் போல் ஆனான்.
சாமா ராகத்தை அனுபவிக்க அவனுக்கு மொழியோ,
இனமோ இடையூறு செய்யவில்லை.
சாந்தமுலேகா :
குழந்தையைக் கொஞ்சுவது போல்,
அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது.
அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக்
கொண்டிருந்தன அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி
உணர்வை வெளிப்படுத்த, நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கா
தடுமாறினான்.
என்ன? என்றார் வித்வான்.
வக்கீல் மொழி பெயர்த்தல்
:
தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல்,
கூச்சல், அடிதடி, புயல்,
அலை, இடி என ஒரே இரைச்சல். அத்தகு போர்க்களத்தினுள்
நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்; காண்கிறேன்.
இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது .இந்த அமைதி எனக்குப் போதும்
என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார் வக்கீல்.
வித்வானின் திகைப்பு :
அமைதியா , அப்படியா தோணித்து அவருக்கு? நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே!
மிஸ்டர் போல்ஸ்கா நீங்கள் உணர்ந்தது போல், புயல்,
இடி என்று சொல்லாவிட்டாலும், இப்பாடல் அமைதி அமைதி
என்று அமைதியையே கடைசி இலட்சியமாக இறைஞ்சுகிறது என்று திகைத்துக் கூறினார் போல்ஸ்கோ
பாராட்டல் : இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள்.
கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று வித்வானின் விரலைப் பிடித்து
உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா
முடிவுரை :
நாடு, மொழி, இனம்
கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை,
அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப்
புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும்
செலுத்தி விடும். இசையை
உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.
(பக்க எண்: 173 மொழியை ஆள்வோம்)
1.மொழி பெயர்க்க:
1. Strengthen the body. : உடலினை உறுதி செய்
2. Love your food : ஊண் மிக விரும்பு
3. Thinking is great : எண்ணுவது உயர்வு
4. Walk like a bull. : ஏறு போல் நட
5. Union is strength : ஒற்றுமை வலிமையாம்
6. Practice what you have learnt : கற்றது ஒழுகு
2.மரபுத் தொடர்களைக்
கொண்டு தொடர் அமைக்க:
( எட்டாக்கனி,உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்)
எ.கா: எட்டாக்கனி : முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி
என்பது எட்டாக்கனி இல்லை.
உடும்புப்பிடி : என் தம்பிக்கு பிடிவாத குணமாததால் பிடித்தால் உடும்புப்பிடிதான்.
கிணற்றுத் தவளை : கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய
எல்லைக்குள் சுருக்கிக்
கொள்ளாதே!.
ஆகாயத்தாமரை : ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது
போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.
எடுப்பார் கைப்பிள்ளை : என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல்
யார் எதனைச் சொன்னாலும்
ஏற்றுக்கொள்வான்.
மேளதாளத்துடன் : எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன்
வரவேற்றோம்.
பத்தியில் இடம் பெற்றுள்ள இயல்புப் புணர்ச்சிகளையும், விகாரப் புணர்ச்சிகளையும்
எடுத்து எழுதுக:
காஞ்சி கயிலாசநாதர் கோவில்
சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று
காஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன.
இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில்
செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின்
இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
இயல்புப் புணர்ச்சி சொற்கள்::
நுழைவு வாயிலின் -நுழைவு + வாயிலின்
நிற்பது போன்று - நிற்பது+ போன்று
விகாரப்புணர்ச்சிச் சொற்கள்
1. தோன்றல் விகாரப் புணர்ச்சி
சுற்று + சுவர் - சுற்றுச்சுவர்
கலை + கூடம் - கலைக்கூடம்
தெய்வம் + சிற்பங்கள் - தெய்வச்சிற்பங்கள்
குடைவரை + கோயில் - குடைவரைக்கோயில்
2. கெடுதல் விகாரப் புணர்ச்சி
வைகுந்தம் + பெருமாள் - வைகுந்த பெருமாள்
3. திரிதல் விகாரப் புணர்ச்சி
பல்லவர் காலம் +
குடைவரைக் கோவில் – பல்லவர்காலக் குடைவரைக்
கோவில்.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக
1. இல்லத்தின்
அருகே புதிதாகக் கூரை போட்டனர்
விடை: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்,
2. கயல்பானை
செய்யக் கற்றுக் கொண்டாள்.
விடை: கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.
3, நேற்று
தென்றல் காற்று அடித்தது.
விடை: நேற்று தென்றல் வீசியது
4. தென்னை
மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
விடை: தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர்
(கிழித்தார்)
5. அணில்
பழம் சாப்பிட்டது
விடை: அணில் பழம் தின்றது.
கவிதை படைக்க
புவியைப்போற்று
புவியைப்போற்ற
நீரைச்சேமி
புவியைப்போற்ற
மரங்களை நடு
புவியைப்
போற்ற நீர்நிலை பெருக்கு
புவியைப்போற்ற
சுற்றுச்சூழல் பேணு.
அன்பின் வழி
அன்பின்
வழியே அனைத்தும் சாத்தியம்
அறம்
பெருக்கி மனிதம் காப்பாய்
உயிரிரக்கம்
கொண்டு வாழ்
பிறர்
துன்பம் தன் துன்பமாய் நினை
அன்பின் வழியே அனைத்தும் சாத்தியம்
(பக்க எண்: 174 மொழியோடு விளையாடு)
விடைகளைத் தமிழெண்களில் எழுதுக
18- ௧அ
133- க௩௩
96 – ௯௬
12 – உக
63- ௬௩
12 – உக
கண்டுபிடிக்க
1. எண்ணும் எழுத்தும் கண் -
இத்தொடரை ஒருவர் 1, 2, 3, 4, 1, 5, 6, 7, 4, 8, 2 என்று
குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றி கீழ்க்காணும் சொற்களை எப்படிக்
குறிப்பிடுவார்.
விடை:
அ) எழுது →
1,5, 7
ஆ) கண்ணும் →
8, 2, 3, 4
இ) கழுத்து →
8, 5, 6, 7
ஈ)
சுத்து → 8, 6, 7
2. என்
வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய
புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் -
இக்கூற்று.
அ) உண்மை ஆ) பொய் இ) உறுதியாகக் கூறமுடியாது
விடை: இ) உறுதியாகக் கூறமுடியாது
காரணம்: அனைவரும் என்று கூறிய பின் இராமன் வேறு வகுப்பு
மாணவனாகக் கூடஇருக்கலாம்.
அகராதியில் காண்க
ஏங்கல், கிடுகு,
தாமம், பான்மை, பொறி
அ) ஏங்கல் - ஓசை, மயிற்குரல், அழுதல், குழந்தைகளுக்கு
ஆ) கிடுகு - கேடகம், முடைந்த ஓலைக் கீற்று. சட்டப்பலகை வரும் ஒருவகை
நோய்
இ) தாமம் - பூமாலை, வடம், புகழ், ஒளி, பரமபதம்
ஈ) பான்மை குணம், தகுதி, முறைமை, சிறப்பு
உ)பொறி -
புள்ளி, தழும்பு, எந்திரம், ஒளி, ஐம்பொறி
உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
1 மலர்விழி
வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
விடை: மலர்விழி வீணை வாசித்தாள், கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்.
2.குழலியின்
இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
விடை: குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில்
இருந்து நீங்கினர்.
3.தேன்
போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள்
விடை: பவளவாய் திறந்து மொழித்தேளைப் படித்தாள்.
4. முத்துநகை
தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
விடை: முத்துநகை தன் புகுவவில்லில் மை தீட்டினாள்
காட்சியைக்கண்டு கவினுற எழுதுக
என்னை நானே
செதுக்கும் சிற்பியாவேன் – ஆம்
கல்வி எனும் உளி கொண்டு
உயரிய சிந்தனை செயல் எனும்
நுட்பங்களுடன் என்னை நானே
வடித்து கொள்கிறேன் சிற்பமாக
(பக்க எண்: 180 மதிப்பீடு -திருக்குறள்)
சிறுவினா
1.இறக்கும் வரை உள்ள நோய் எது?
விடை: தன்
செயலைப் பிறர் எடுத்துச் சொல்லியும் செய்யாதவனாய், தானும் சிந்தித்து செயல்படத் தெரியாதவனாய்
உள்ளவனின் வாழ்வு, உயிர் போகும் வரை உள்ள நோய் ஆகும்.
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவும் ஓர் நோய்”.
2.அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி
எழுதுக.
விடை:
இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி ஏகதேச
உருவக அணி ஆகும்.
அணி விளக்கம் :
ஒரு செய்யுளில் தொடர்புடைய இரு பொருட்களுள்,
ஒன்றை மட்டும் உருவகம் செய்து, மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக
அணி எனப்படும்.
பொருத்தம் :
மேற்கூறிய இக்குறட்பாவில் சான்றோர் வாழ்விற்குத் தேவையான ஐந்து நற்குணங்களை
தூண் என உருவகித்து விட்டு, சான்றாண்மையை (விதானம் – கூரை) என உருவகிக்காமல் விட்டு
விட்டதால் ஏகதேச அணிக்குப் பொருந்தி வருகிறது.
3.உலகிற்கு அச்சாணி எனப்படுபவர் யார்?
ஏன்?
விடை: உலகிற்கு
அச்சாணியாக விளங்குபவர் உழுபவரே ஆவார். மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால்
அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
4.காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான் கண்டவாறு - இக்குறட்பாவில்
பயின்று வரும் தொடைநயத்தை எழுதுக.
விடை:
காணாதான் காணான்
கண்டானாம் கண்டவாறு
இதில் உள்ள நயம்: சீர் மோனை, சீர் எதுகை