9.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல்-5
(பக்க எண்: 142 கற்பவை கற்றபின்)
1. பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக்
கண்டறிந்து எழுதுக.
அ) பெண்ணடிமை போகவேண்டும்; பெண்,
கல்வி பெற வேண்டும், பெண்கள் படித்தால் தான்
தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும்
நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும்
உண்டு.
ஆ) நமது முன்சந்ததியார்களுக்கு
இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம்,
அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில்
சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக்கடன்களை முடித்துக்
கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம்,
ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது
வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம்,
மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள
காலம்.
விடைகள்:
அ)
படித்தால்தான் – தான்
வீடும் நாடும் – உம்
சமுதாயத்தின்- இன்
பெண்களுக்கும் – உம்
உரிமைகளும் – உம்
ஆ)
இருந்ததைவிட- விட
அவர்களின் – இன்
அடவியில் – இல்
பர்ணசாலைக்கு – கு
வீட்டுக்கு – கு
எழுத்தாணியும் – உம்
2. உம், ஓ.ஏ. தான் மட்டும்,
ஆவது, கூட, ஆ. ஆம் ஆகிய
இடைச் சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர்களை உருவாக்குக.
§ வீரர்களும் போற்றும் வீரன்.
§ பூங்கொடியோ மலர்க்கொடியோ இப்படத்தை வரையுங்கள்.
§ தேவி நடந்தே
வீட்டுக்கு வந்தாள்
§ இனியா
நான்தான் ஆடுவேன் என்றாள்
§ உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்.
§ இன்றாவது மழை வருமா?
§ தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை.
§ புகழேந்தி பாடினானா?
§ தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்
§ ”ஆகிய” எனுமிடைச்சொல் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.
3. பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக,
அ) மணற்கேணியைப் போல்
விளங்கும். நூல்கள் உறுதுணையாக இருக்கிறது,
ஆ) பெண்களைப் படிக்க
வைக்காத காலத்தில்தான் பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் படிக்கு நம்
முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.
இ) மக்களின் மனங்களில்
உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
4. பொருத்தமாக இணைத்து எழுதுக.
விடை:
5) பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
அ) மா பெரும் பொதுக்கூட்டம்
(கடி, மா)
ஆ) கடி விடுதும் (உறு, கடி)
இ) வாள் நுதல் (வாள், தவ)
ஈ) சால சிறந்தது
( சால, மழ)
உ)
கடி மனை ( கடி,
தட)
சிந்தனைவினா
1)
“தான்” என்னும் இடைச்சொல்லைஎப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
விடை:
· தான் என்னும் இடைச்சொல்லை அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்.
·
எந்தச் சொல்லுடன்
வருகின்றதோ, அச்சொல்லை
முதன்மைப்படுத்தும் வகையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம். •
·
சான்று: நிர்மலாதான்
பாடினாள்.
2)
அவர்களுக்குப்பரிசு தருவேன் – இத்தொடரில்“ஆ” என்னும் இடைச்சொல்லைச்
சேர்த்து வினாக்களைஅமைக்க.
விடை: * அவர்களுக்கா பரிசு தருவேன்? , * அவர்களுக்குப் பரிசு தருவேனா?
3)
செய்யுளில்உரிச்சொற்கள்எத்தகைய பொருள்களில் இடம்பெறுகின்றன?
விடை: உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை, ஒரு சொல் பல பொருளுக்கு உரியது பல சொல் ஒரு பொருளுக்கு உரியது
என இடம் பெறும்.
4)
தற்காலத் தமிழ்ப்பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச்சொற்களை எழுதுக.
விடை: மா, உறு,
தவ, நளி, கடி, கூர், கழி - முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில்
காணப்படுகின்ற உரிச் சொற்கள், மேலும் மழ, குழ, விழுமுதல், என்பனவும்
பயன்பாட்டில் உள்ளன.
5)
’ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி
வரும் என்பதை எழுதுக.
விடை: ஆ' என்னும் இடைச்சொல் எதிர்மறைப்
பொருளில் "ஐயம்" தோன்ற வரும்.
சான்று: அவனா பேசினான்
6) இடைச் சொற்களைப்பயன்படுத்திக்கீழ்க்காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக்
காண்க.
அ)
வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
விடை: வீட்டிற்குச்
செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்
ஆ)
இந்தச் சூழ்நிலை மாறியாகவேண்டும்.
விடை :இந்தச் சூழ்நிலையை மாற்றித்தான் ஆக வேண்டும்.
இ)
வானூர்தியைச் செலுத்துதல்,
உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச்
செயலும் ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
விடை: வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கலையும் அளத்தல் ஆகிய செயல்கள் இருபாலருக்கும் பொதுவாம்.
ஈ)
சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
விடை : சமைப்பது மட்டும் தாழ்வென்று எண்ணலாமா?
உ)
பூக்காமலேசிலமரங்களில்காய்ப்பதுண்டு.
விடை : பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.
ஊ)
வாளால்வெட்டினான்.
விடை: வாளால்தான் வெட்டினான்
(பக்க எண்: 142 மதிப்பீடு)
பலவுள் தெரிக.
1.
பொருத்தமான விடையைத்தேர்க.
அ) சிறுபஞ்சமூலம் - 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்பவிளக்கு - 2. சங்கஇலக்கியம்
இ) சீவகசிந்தாமணி - 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை - 4. தற்காலஇலக்கியம்.
(௧) அ-3, ஆ- 4, இ -1, ஈ- 2 (௨) அ- 2, ஆ- 3, இ- 1, ஈ- 4
(௩) அ- 3, ஆ-1, இ- 4. ஈ -2 (௪) அ- 4, ஆ
-1, இ – 2, ஈ- 3
2.
மாறுபட்டுள்ள குழுவினைக்கண்டறிக.
அ) கலைக்கூடம் திரையரங்கம் ஆடுகளம் அருங்காட்சியகம்
ஆ)
கடி உறு கூர் கழி
இ)
வினவினான் செப்பினான் உரைத்தான் பகன்றான்
ஈ) இன்
கூட கிறு அம்பு
3.
கீழ்க்காண்பனவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ)
சிறுபஞ்சமூலத்தில்உள்ள பாடல்கள்பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ)
இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
ஈ)
வாழ்க்கையில் அடிப்படைத்தேவைகளுக்கு அடுத்த இடத்தைப்
புத்தகசாலைக்குத் தருக.
4.
சரியான கூற்றினைத்தெரிவு செய்க.
அ)
‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை
என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர்
இலக்கிய வடிவம்.
1.
ஆ, இ சரி; அ தவறு 2. அ, இ,
சரி; ஆ தவறு 3. மூன்றும் சரி 4. மூன்றும் தவறு
5.
பூவாது காய்க்கும், மலர்க்கை- அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய
இலக்கணம் யாது?
அ) பெயரெச்சம், உவமைத்தொகை ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்,
உருவகம்
இ) வினையெச்சம், உவமை ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
குறுவினா
1.
தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள்
யாது?
விடை: குடும்ப விளக்கின் தலைவியின் பேச்சில்,
- பெண்ணுக்கு விடுதலை வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
- பெண் ஒளிர வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
நாட்டின்வழக்கத்தை மாற்ற வேண்டுமெனில்
கல்விவேண்டும் என்று “பெண்கல்விவேண்டும்”
என்பதையே பாடுபொருளாகக் கொண்டு தலைவி பேசி, தன்
கருத்தை வெளிப்படுத்துகிறாள்.
2.
மூவாது மூத்தவர், நூல்வல்லார்- இத்தொடர்
உணர்த்தும் பொருளைக்குறிப்பிடுக.
விடை:
இத்தொடரின் பொருளாவது,
நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர், வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.
3.
நீங்கள் மிகவும் விரும்பிப்படித்த நூல்கள் யாவை?
விடை:
திருக்குறள் , கம்பராமாயணம் , சிலப்பதிகாரம், பெரிய புராணம்.
4.
சாரதாசட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
விடை:
பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய்
இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில்
1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது
சிறுவினா
1.
சங்ககாலப்பெண்பாற் புலவர்களின் பெயர்களைஎழுதுக.
விடை:
ஔவையார், நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப்பாடினியார், ஆதிமந்தியார்,
வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார், நப்பசலையார், பொன்முடியார், காவற்பெண்டு, அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.
2.
சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல்செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்? - பெண்
ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா? – சமைப்பது
தாழ்வல்ல
3.
விதைக்காமலேமுளைக்கும் விதைகள்-இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம்
தெரிவிக்கும் கருத்துகளைவிளக்குக.
விடை:
- கழனியிலே பாத்தி அமைத்து,
விதை விதைக்காமலே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன.
- தானே முளைப்பதுடன் உயிர்களுக்குப் பயனும் நல்குவன.
- அதைப்போலவே, அறிவுடைய மேதையரும்
பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு,
பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.
“விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.”
4.
இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில்வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
விடை:
குழுத்தலைவர் : ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே நீ எழுதுகோலை எடுக்கவேனும்,
கையிலே..
மற்றோர் :
ஆமா., கையிலே…
குழுத்தலைவர்: ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே, ஏடெடுத்து
நீ போகணும்...
மற்றோர்: ஆமா.,
போகனும்..
குழுத்தலைவர்: சிந்திக்கும்
மூளை வேண்டும் உனக்கு..நீ நிந்தையைப் பொறுத்துக்கோ.. நீ உன்
திறமையைக் காட்டு அம்மா
மற்றோர்: ஆமா.,
நீ உன் திறமையைக் காட்டு அம்மா
குழுத்தலைவர்: முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து
முடித்துக் காட்டு அம்மா.,நீ
முடித்துக்
காட்டு அம்மா...
மற்றோர்: ஆமா.,
நீ முடித்துக்காட்டு அம்மா
குழுத்தலைவர்:
செல்லம்மா நீ செல் அம்மா
பள்ளிக்கு... பட்டம் பெறு அம்மா சட்டம் செய்' அம்மா, நாடே
உள்ளை
வணங்கட்டும் அம்மா...
மற்றோர்: ஆமா.,
நாடே உன்னை வணங்கட்டும் அம்மா
5.
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக்குறிப்பிடுக.
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகள்:
- 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல
சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை
- மேயராகவும், சட்ட மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
- அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம்,
1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்,
இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற
காரணமாக இருந்துள்ளார்.
6.
நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப்பணியின் சிறப்பைக்குறித்து எழுதுக.
தமிழ்ப்பணியின் சிறப்பு:
- நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
- இவரது தனித்தமிழ் கட்டுரை,
வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தடிகள் பாராட்டிய
மூவர் ஆகிய நூல்களை எழுதி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
- மேலும், இவருடைய நூல்கள்
தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
நெடுவினா
1. நீங்கள்அறிந்தசாதனைப்பெண்கள்குறித்தசெய்திகளைவிவரிக்க.
முன்னுரை:
நிலைத்த புகழுடைய கல்வியாலும்
சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து
அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து
கொள்வோம்.
பண்டித ரமாபாய்:
1858 -ஆம் ஆண்டு முதல்
1922 – ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின்
உயர்வுக்குத் துணை நின்றவர், “பெண்மை என்றால் உயர்வு”
என்பதற்குச் சான்றாவார்.
ஐடாஸ் சோபியா:
1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே
விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து
மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.
மூவலூர் இராமாமிர்தம் :
1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின்
சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல்
செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர்.
இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை
இவரின் பெயரில் வழங்கி வருகிறது.
சாவித்திரிபாய் பூலே :
1831 முதல் 1897
வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட
பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.
மலாலா :
பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும்
பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில்
இறங்கிய வீரமங்கை ஆவார்.
முடிவுரை :
இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று
விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே
“புவி வளம் பெறவே புதிய
உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே”
2.
குடும்பவிளக்கு நூலில்தலைவி பேச்சில்வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
முன்னுரை:
பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு
என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை
வெளிப்படுத்தும் போது, பெர்கல்வி குறித்த கருத்துகளையும்
வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும்,
இன்றைய சூழலையும் பார்ப்போம்..
தலைவியின் பேச்சு:
கல்வி இல்லாத பெளர்கள்
பண்படாத உவர்நிலம் போன்றவர்கள். அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த
புதல்வர்கள் உருவாவதில்லை, கல்வியறிவு பெற்ற பெண்கள்,
பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள் அவர்கள் மூலமே சிறத்த அறிவார்ந்த
மக்கள் உருவாகின்றனர்.
பெண் கல்வி இல்லாததினால்,
இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது. கல்வியறிவு இல்லாத பெண். மின்னலபோல்
ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவன் வாழ்வு ஒளிர்வதில்லை.
"கல்வி இல்லா
மிள்னாள்
வாழ்வில் என்றும்
மின்னாள்"!
சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கார் இமைக்கும் நேரத்தில்
நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.
இன்றைய சூழல்:
கல்வி கற்ற பெர்
குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கடபேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.
வானூர்தியைச் செலுத்துதல்
விளர்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப்
பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை
அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள்,
செயலாற்றும் திறள் உடையவளாய் இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது.
“வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுது மனத்தல்
ஆனஎச்
செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே” ஆகிவிட்டது.
சமையல்பணி
சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை
மாறிவருகிறது.ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும்காலம்
வந்துகொண்டிருக்கிறது எளில் மிகையாகாது, குடும்ப விளக்கு
தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது..
முடிவுரை:
"பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும் பெண்கள் நடத்த வந்தோம்". என் பாரதியின் களவு கரிகள்
தனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
3.
நூலகம், நூல்கள்ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில்வெளிப்படுகின்ற கருத்துகள்யாவை?
முன்னுரை:
மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப்
போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலை” என்னும்
அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து
பார்ப்போம்.
நூலகம்:
ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும்
எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை
உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே
.
“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால்
நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும். வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு
முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட
வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத்
தேவையாகும்.
நூல்கள் :
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை
அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை,
உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.
பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர்
“திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல்
வேண்டும்.
- நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
- மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
- தொலைதேசங்களைக் கண்டவர்கள்
- வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை
ஆகிய
நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .
முடிவுரை :
கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை
அமைப்போம்.
“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு
வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில்
யாண்டும்”
என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.
(பக்க எண்: 146 மொழியை ஆள்வோம்)
மொழிபெயர்க்க.
விடை:
பீர்பாலின்
நகைச்சுவையுணர்வு
இந்த நகரத்தில்
எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார்,
பீர்பால் ஒரு கணம் கூட
யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று
பதிலளித்தார்.
எப்படி உங்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர், உங்களது
ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில
இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக்
குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக்
காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்,
பீர்பாலுடைய நகைச்சுவையையும்,
நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும்,
மன மகிழ்வும் அடைந்தார்.
பிழை
நீக்கி எழுதுக :
1 மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
விடை: மதீனா சிறந்த
இசைவல்லுநராக வேண்டும்
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்
விடை : நல்ல தமிழில் எழுதுவோம்
3.பவள விழிதான் பரிசு உரியவள்,
விடை: பவளவிழிதான்
பரிசுக்கு உரியவள்.
4.துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்
விடை : துன்பத்தைப்
பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.
5. குழலியும் பாடத் தெரியும்
விடை : குழலிக்கும்
பாடத் தெரியும்
இடைச்
சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க,
(எ.கா) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு
ஓடியது.
பெரும்
மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
1.அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
விடை : அலுவலர்
வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
2 சுடர்க்கொடி பாடினாள்; மாலன்
பாடினான்.
விடை: சுடர்க்கொடியும்
மாலனும் பாடினார்கள்.
3. பழனிமலை பெரியது; இமயமலை
மிகப் பெரியது.
விடை : பழனிமலையைவிட
இமயமலைதான் மிகவும் பெரியது.
4. கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ்காலம்,
விடை: கவலையற்ற எதிர்காலம் அமைய வேண்டுமெனில், கல்வியே நிகழ்காலமாக
அமைய வேண்டும்
விளம்பரத்தைச்
செய்தித்தாள் செய்தியாக மாற்றியமைக்க
செய்தி
புத்தகத் திருவிழா
செப் - 16.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில்
உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 26
வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
நாள்தோறும்
காலை8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய
புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன.
இப்புத்தகத் திருவிழாவிளை முதல் நாள் காலை 9 மணிக்குத்
தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின்
சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச்
செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
6. நிகழ்வினைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
அண்ணாலின் வாழ்க்கையில்..
தமிழக
முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச்
செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை
முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது
வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர். முதலமைச்சரின் மகிழுத்து என்ற
அறியாமலே திறந்துகாட்டச் செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள்,
கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன.
அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது
புரித்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, "தெரியாமல்
நடத்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்" என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம் "இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்" என்ற அந்த அலுவலர்
தனக்கு ஏதோ நடத்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார் உடனே.
அண்ணா, "தாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில்
நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற
இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்!"
என்றார். அந்த அலுவலர் தளக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத
குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா, "நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு
உங்களைப் போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப்
பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான்
உங்கள் பெயரைக் கேட்டேன்" என்றார்.
1. மகிழுத்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர்
எப்படி அறிந்தார்?
விடை: மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து மடல்கள்
இருந்தன. அவற்றைப் பார்த்த
பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர் அறிந்து கொண்டார்.
2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக்
கொள்ளச் சொன்னார்?
விடை: முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து
காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
3, அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு
பாராட்டினார்?
விடை: சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்
போன்றவர்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும்
என்று பாராட்டினார்.
4. பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு
புதிய சொற்றொடர்களை உருவாக்குக?
விடை:
தான் : பதவி உயர்வு வழங்கத்தான்
உம் பெயரைக் கேடடேன்.
இன் : சட்டத்தைக் காக்கும்
பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது
கள்: பொறுப்புணர்வுடன்
செயல்படும் அலுவலர்கள் நாடடிற்குத் தேவை.
5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:
விடை: "பொறுப்புணர்வு" (அல்லது) "கடமையுணர்வு"-
(பக்க எண்: 148 மொழியோடு விளையாடு)
சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை. உருவாக்குக,
மாணவர்கள் , புத்தகம்,
அறை , ஆசிரியர் ,பாடவேளை,
கரும்பலகை, வழிபாட்டுக் கூட்டம் , சீருடை , எழுதுகோல்,அழிப்பான்
, கல்லூரி, உயர்நிலை ,மடிக்கணினி
1.வழிபாட்டுக்கூட்டத்தில்
மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
2.மாணவர்கள்
உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்,
3.மாணவர்களே!
எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்
4. பாடவேளையின்
பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
5.மாணவர்கள்
பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
6. வழிபாட்டுக்
கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
7. ஆசிரியர்
அறையிலிருந்து புத்தகம் எடுத்து வா
8. கல்லூரி
மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.
9.கரும்பலகையை
அழிப்பானால் சுத்தம் செய்தான்.
10.சீருடையும்,
மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.
அகராதியில் காண்க.
(அரங்கு,ஓடபம், கான், நசை, பொருநர்)
அரங்கு - அரங்கம்,
உள்வீடு
ஓட்பம்
- அறிவு, அழகு, நன்மை,
மேன்மை
கான் - காடு, மணம், வாய்க்கால், இசை
நசை - ஆசை,குற்றம், எள்ளல், ஈரம்
பொருநர் - படைவீரன், தலைவன்.
போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்
படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
(ஒரு
கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு
மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம். தண்ணீர் தண்ணீர்)
1. நா.
காமராசனின் கவிதை நூல் - கருப்பு மலர்கள்
2. திரைப்படமாக வெளிவந்த
கோமல் சுவாமிநாதனின் நாடகநூல் - தண்ணீர் தண்ணீர்
3. நோபல் பரிசு பெற்றஎர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் - கிழவனும் கடலும்
4.
சாகித்திய அகாதெமி பரிசுபெற்றசிற்பியின் கவிதைநூல் - ஒரு கிராமத்து நதி
5. எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் - சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
கடிதம்
எழுதுக.
பதிப்பகத்தாருக்குக் கடிதம்
தணிகைப்போளூர்,
27.09.21.
அனுப்புநர்
க. இளவேந்தன்
மாணவச்செயலர்,
12ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,
அரசினர் மேனிலைப்பள்ளி,
தணிகைப்போளூர்,
பெறுநர்
மேலாளர்,
நெய்தல்
பதிப்பகம்,
சென்னை-600 001.
பெருந்தகையீர்,
வணக்கம்.
உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல் மொழியாகவும், முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது
தமிழ்மொழியே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் தமிழ்மொழியில்
உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம்
அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
தங்கள்
உண்மையுள்ள,
க.இளவேந்தன்,
(மாணவச் செயலர்)
உறைமேல் முகவரி:
மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை-600 001