8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 6
வளம் பெருகுக (பக்க எண்: 123 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லாம்
முளைத்தன.
அ) சத்துகள் ஆ) பித்துகள் இ) முத்துகள் ஈ) வித்துகள்
2.
என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________
பெருகிற்று.
அ) காரி ஆ) ஓரி இ)வாரி ஈ) பாரி
3.
‘அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது ____________.
அ) அ +
களத்து ஆ) அக் + களத்து இ) அக்க+ அளத்து ஈ) அம் + களத்து
4.
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.
அ) கதிரென ஆ) கதியீன இ) கதிரீன ஈ) கதிரின்ன
குறுவினா
1.
பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத்தேவையானது யாது?
விடை : பயிர்கள்
வாட்டமின்றிக் கிளைத்து வளரத்தேவையானது மழை
2.
உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?
விடை : உழவர்கள்
போரினை அடித்து நெல்லினை
அறுவடை செய்யும் காலத்தில் ஆரவார ஒலி எழுப்புவர்.
சிறுவினா
உழவுத்தொழில் பற்றித்தகடூர் யாத்திரைகூறுவன யாவை?
விடை:
ü சேரனின் நாடடில் பெருகிய மழைநீரால் வருவாய்
சிறந்து விளங்குகிறது. அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.
ü முளைத்த விதைகள் செழிப்புடன் வளர்
தட்டுப்பாடின்றி மழை பொழிகின்றது. தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள்
வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது.
ü செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப்
பெற்றிருக்கின்றன. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும்
செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.
ü நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும்
(எடுக்கும்) காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம
பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய, சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புது வருவாயுடன்
சிறந்து விளங்குகின்றது.
சிந்தனைவினா
உழவுத்தொழில்
சிறக்கஇன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?
விடை:
உழவுத் தொழில் - உயிர் தொழில்
ü
நாகரீகம்' என்ற பெயரில் இன்று யாரும் உழவுத் தொழில் செய்ய
முன்வருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒருவர் கட்டாயம்
உழவுத் தொழில் செய்தல் வேண்டும்.
ü
உழவுத் தொழில், அரசுப் பணிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும்
உழவுத் தொழிலில் சிறந்து விளங்கும் உழவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் பரிசுத்
தொகையும் கொடுக்க வேண்டும்.
ü
இன்றைய இளைஞர்கள் வேலை விருப்பப்
பட்டியலில் உழவுத்தொழிலைச் சேர்த்துக் கொள்ளச் செய்தால்
மட்டுமே உழவுத் தொழில் நிச்சயம் சிறக்கும்.
மழைச்சோறு (பக்க எண்: 126 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கனத்த
மழை என்னும் சொல்லின் பொருள்
அ) பெருமழை ஆ) சிறு மழை இ) எடை மிகுந்த மழை ஈ) எடை குறைந்த மழை
2. 'வாசலெல்லாம்"
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஆ) வாசல் + எலாம் அ) வாசல் + எல்லாம் இ) வாசம் + எல்லாம் ஈ) வாசு + எல்லாம்
3. 'பெற்றெடுத்தோம்'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெறு + எடுத்தோம் ஆ) பேறு +
எடுத்தோம் இ) பெற்ற
எடுத்தோம் ஈ) பெற்று + எடுத்தோம்
4. கால்
+ இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)கால்லிறங்கி ஆ) காலிறங்கி இ) கால் இறங்கி ஈ) கால்றங்கி
குறுவினா.
1. மழைச்சோறு
பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?
விடை:
·
கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு,
காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது. பெற்றெடுத்த
குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை.
·
கலப்பை பிடிப்பவரின் கை
சோர்ந்து விட்டது, ஏற்றம்
இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர்
வேதனைப் படுகின்றனர்.
2, மக்கள்
ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
விடை: மழை இல்லாததால் உழவுத்
தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.
சிறுவினா.
1. கோலம்
கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
விடை:
ü வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்.
இந்தக் கோலத்தைக் கரைக்க மழை வரவில்லை!
ü பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர் அந்தக் கோலம்
கரைக்கவும் மழை வரவில்லை.
2.மழையின்மையால்
செடிகள் வாடிய நிலையை விளக்குக,
விடை:
ü கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு
வளர்த்தார்கள். அதற்கும் மழைபெய்யவில்லை.
ü முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு
வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை.
ü கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை,
ü மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.
ü மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது? மழைச் சோறு எடுத்தபின், பேய்
மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது. .
சிந்தனை வினா.
1. மழைவளம்
பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை? மழை வளம் பெருக
அதிகப்படியான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.
விடை:
v மரங்களை நட்டால் மட்டும் போதாது. அதனை நன்கு
பராமரிக்க வேண்டும். எங்காவது மரங்கள் வெட்டப்படும் போது, அதனைத் தடுக்க வேண்டும்.
v ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி
கட்டாயம் வைக்க வேண்டும். மழை பெய்யும் காலங்களுக்கு முன் குளங்கள் குட்டைகளை
தூர்வார வேண்டும்
கொங்குநாட்டு வணிகம் (பக்க எண்: 132 மதிப்பீடு)
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.
அ) தொல்காப்பியம் ஆ)
அகநானூறு இ) புறநானூறு ஈ) சிலப்பதிகாரம்
2.
சேரர்களின் தலைநகரம் _____.
அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) தொண்டி
ஈ) முசிறி
3.
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.
அ) புல் ஆ) நெல் இ) உப்பு ஈ) மிளகு
4.
ஆன்பொருநைஎன்று அழைக்கப்படும் ஆறு _____.
அ) காவிரி ஆ) பவானி இ) நொய்யல் ஈ) அமராவதி
5.
வீட்டுஉபயோகப் பொருள்கள்
தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்தமாவட்டம் _____.
அ) நீலகிரி ஆ) கரூர் இ) கோயம்புத்தூர் ஈ) திண்டுக்கல்
கோடிட்டஇடங்களைநிரப்புக.
1.
‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் சேலம்
2.
சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்றஊர் சின்னாளப்பட்டி
3.
சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.
4.
பின்னலாடைநகரமாக திருப்பூர்
விளங்குகிறது.
குறுவினா
1. மூவேந்தர்களின்
காலம் குறித்து எழுதுக,
விடை: மூவேந்தர்களின் காலத்தை
வரையறுத்துக் கூறமுடியவில்லை. வால்மீகி இராமாயணம், மகாபாரதம்,
அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில்
மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இவர்கள் பல
நெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.
2. கொங்கு
நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
விடை: காவிரி, பவானி,
நொய்யல், ஆன்பொருநை (அமராவதி)
3. 'தமிழ்நாட்டின்
ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
விடை: 'தமிழ்நாட்டின்
ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல் மலர் உற்பத்தியில் முதலிடம்
வகிப்பதால், தமிழ்நாட்டின் ஹாலந்து என்று திண்டுக்கல் நகரம்
போற்றப்படுகிறது.
சிறுவினா.
1. கொங்கு
மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
விடை: வடக்கே பெரும்பாலை தெற்கே பழனி மலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே
மதிற்கூரை என இந்நான்கு
எல்லைக்கு உட்பட்ட பகுதியாகக் கொங்கு மண்டலம் விளங்கியதாகக் கொங்கு மண்டலச் சதகம்
கூறுகிறது.
2.கரூர்
மாவட்டம் பற்றிய செய்திகளைச் கருக்கி எழுதுக.
விடை:
v கரூர் நகரத்திற்கு, 'வஞ்சிமா நகரம்' என்ற பெயரும்
உண்டு. கிரேக்க அறிஞர் தாலமி கரூரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக்
குறிப்பிட்டுள்ளார்.
v நெல், சோளம்,
கேழ்வரகு, கம்பு, கரும்பு
போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
v தோல் பதனிடுதல், சாயம் ஏற்றுதல், சிற்ப
வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன. பேருந்துக் கட்டுமானத் தொழிலின்
சிகரமாகக் கரூர் விளங்குகிறது.
நெடுவினா.
1. கொங்கு
நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக
விடை:
உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல்
வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.
உள்நாட்டு வணிகம் :
சேர நாட்டில் உள்நாட்டு
வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து
தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக
இருந்தது என்பர், உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை
அகநானூற்றின் 300வது பாடல் மூலம் அறியலாம்.
வெளிதாட்டு வணிகம்:
முசிறி
சேர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்து நான் மற்ற
நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை,
தத்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி
செய்யப்பட்டன. பொன்மலிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள்
அமைத்த ஆடைகள் பவளம், செம்பு, கோதுமை
ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
சிந்தனை வினா:
1. நாட்டு
மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று
நீங்கள் கருதுகிறீர்கள்?
விடை:
நாட்டு மக்களின் நாகரிக
நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து கலைகள் பலவும்,
அறிவியல் கோட்பாடுகளும், பண்டைய தமிழறிஞர்களின் சிந்தனைகளை மீட்டுக்
கொணர்வதும்,பொதுமைப் பண்பு, புத்தாக்க
சிந்தனைகளும், பழைய நாகரிகங்களை வெளிக்கொணரும் அகழாய்வுகளும்,
பழந்தமிழ் இலக்கியங்களும் உதவும் என்று நான்| கருதுகிறேன்.
காலம் உடன் வரும்
(பக்க எண்: 97 மதிப்பீடு)
1. காலம் உடன் வரும்' - கதையைச்
சுருக்கி எழுதுக.
முன்னுரை :
காலம்
உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கள்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார்.
நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும்
காட்டுவதாக இக்கதை அமைகிறது.
சுப்ரமணியத்தின் கவலை:
அனந்திகா
நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத்
துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள்
கிடைப்பதில்லை. அதனால் துணி/ நெய்ய தாமதமாகிறது. மாணிக்கம் ஓட்டும் ஒரே ஒரு
தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப் பாவும் சற்று நேரத்தில் தீர்ந்து விடும்.
என்ன செய்வது என்று தெரியாமல் சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார்.
நண்பன் ரகுவின் உதவி :
நண்பர்
ரகு துணியகத்தில் கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது
இருப்பார்கள், அங்கே போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய
தறிப்பட்டறைக்குச் செல்கிறார். பதற்றத்துடன் வந்த சுப்பிரமணியத்தை ரகு
நெருங்கினார். அதற்குள் சுப்பிரமணியன் பாவு இணைக்க ஆள் வேண்டும். உடனடியாக
யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார். அதற்கு ரகு மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு
இணைக்கும்! என்கிறார்.
மாயழகும் ஒச்சம்மாவும்:
ஒச்சம்மா
உரிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி மலை அடிவாரத்தில் கோம்பைத்
தொழுவு. திருமணமகள் பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக வெள்ளகோவில்
வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி ஓட்டுவதைத் தவிர
பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள்.
பாவு பிணைத்தல்:
ரகுஅனுப்பியதாகவும், தள்பிரச்சினையையும் சுப்பிரமணியம்எடுத்துரைக்கிறார். மாயழகு தன்
மனைவி ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு இருக்கும் தவர்
கைக்குழந்தையுடான் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து
விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழத்தை விழித்துக்
கொள்கிறது. குழத்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள்.
வேலை முடித்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவலின் வீட்டிற்குக்
கொளண்டுபோய் சேர்க்கிறார்.
முடிவுரை:
இரவு பகல் பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத்
ததி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய
முடிகிறது.
புணர்ச்சி (பக்க எண்: 140 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.விகாரப்
புணர்ச்சி _ வகைப்படும்
அ)ஐந்து ஆ) நான்கு இ)மூன்று ஈ) இரண்டு
2.'பாலாடை
- இச்சொல்லுக்குரிய புணர்ச்சி
அ) இயல்பு இ) திரிதல் ஆ) தோன்றல்
ஈ) கெடுதல்
பொருத்துக,
1. மடபாண்டம்
- அ) தோன்றல் விகாரம்
2. மரவேர் - ஆ) இயல்புப்
புனர்ச்சி
3. மணிமுடி - இ) கெடுதல்
விகாரம்
4. கடைத்தெரு - ஈ) திரிதல் விகாரம்
விடை: 1. ஈ 2. இ 3. ஆ 4. அ
சிறுவினா.
1. இயல்பு
புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக,
விடை:
நிலைமொழியும்
வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
சான்று: தாய் மொழி
தாய்+மொழி = தாய்மொழி
இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை, எனவே இது இயல்பு புணர்ச்சி.
2. மரக்கட்டில்
இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
விடை:
மரம்+ கட்டில் - திரிதல்
விகாரப்புணர்ச்சியின் படி 'ம்' என்பது 'க்' ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்தது.
இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு,
கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது
தோன்றல் விகாரத்தின் படி'க்' என்ற
மெய்யெழுத்து தோன்றியது
மொழியை ஆள்வோம்
(பக்க எண்: 140)
பின்வரும்
மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
1. ஆயிரங்காலத்துப்
பயிர் - அ. இயலாதசெயல்.
2. கல்லில் நார் உரித்தல்
– ஆ. ஆராய்ந்து பாராமல்.
3. கம்பி நீட்டுதல் – இ. இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
4. கானல்நீர் – ஈ. நீண்டகாலமாக
இருப்பது.
5. கண்ணைமூடிக்கொண்டு – உ.விரைந்து
வெளியேறுதல்
விடை: 1- ஈ 2 – அ
3 – உ 4 – இ 5- ஆ
பின்வரும்
மரபுத்தொடர்களைத் தொடரில்
அமைத்து எழுதுக.
1. வாழையடி வாழையாக
– வேலனது குடும்பம் வழையடி வாழையாக உழவுத்தொழில் செய்கிறது
2. முதலைக்கண்ணீர்
– திருடன் காவலரிடம் முதலைக் கண்ணீர் வடித்தான்.
3. எடுப்பார் கைப்பிள்ளை-
செழியன் எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல்படுவான்.
கட்டுரை
எழுதுக.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.
இயல்-6 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇