பேசுதல்-பல பொருள்-வகையறிந்து பேசுதல்
#வகையறிந்து_தமிழ்_பேசுவோம்..
#நம் எண்ணங்களைப் பிறருக்கு எடுத்துரைக்க உதவும் தொடர்புக் கருவியே பேசும் கலை. அத்தகைய பேசுதலைக் குறிக்க நம் தமிழில் உள்ள பெயர்கள் பல்வகையாகும். ஒவ்வொரு சூழலுக்கும் இணையாக நுண்ணிய வேறுபாடுகளோடு தமிழில் வார்த்தைகள் வழங்கப்படுள்ளன.
*#பேசுதல்* என்பது சொல்லும் தகவலின் பொருள் கெடாமல் ஒரு மொழியிற் ஒழுங்கச் சொல்லுதல் என பொருள்படும்.
*#அறைதல்* என்பதோ ஓங்கிப் பேசுதல் அல்லது உரக்க வன்மையாகச் சொல்லுதல்.
*#இயம்புதல்* என்பது இனிமையாகச் சொல்லுதல் அல்லது இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்.
*#இசைத்தல்* என்பது கோவையாகச் சொல்லுதல்.
*#உரைத்தல்* என்பது ஒன்றை விளக்கிச் சொல்லுதல்.
*#கூறுதல்* என்பது கருத்துக்களைக் கூறுபடுத்தி அல்லது பாகுபடுத்திச் சொல்லுதல்.
*#சாற்றுதல்* என்பது பலரறிய ஓர் தகவலை அறிவித்தல்.
*#நவிலுதல்* என்பதோ நாவினால் பலகால் ஒன்றை ஒலித்துப் பயிலுதல்.
*#நுதலுதல்* என்பது ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
*#நுவலுதல்* என்பதோ ஒரு நூலின் பொருளடக்கத்தை எடுத்துரைத்தல் ஆகும்.
*#பகர்தல்* என்பது பண்டங்களின் விலை கூறுதல்.
*#பறைதல்* என்பதோ ஒன்றை உரக்கத் தெரிவித்தல்.
*#பன்னுதல்* என்பது பணியின் நிமித்தமாகய் விவரித்துச் சொல்லுதல்.
*#புகலுதல்* என்பதோ விரும்பிச் சொல்லுதல்.
*#புலம்புதல்* என்பது தனிமையில் தனக்குத் தானே சொல்லுதல்.
*#மாறுதல்* என்பது திருப்பிச் சொல்லுதல் அல்லது மறுமொழி கூறுதல்.
*#மொழிதல்* என்பது சொற்களை நன்றாய்த் திருத்தமாய்ச் சொல்லுதல்.
*#பொழிதல்* என்பது இனிமையாகப் பேசுதல்.
*#இயம்புதல்* என்பது அழுத்தமாகப் பேசுதல்.
*#அருளுதல்* என்பது தவத்தில் சிறந்தோர் பேசுதல்.
*#அசைத்தல்* என்பது அசை பிரித்துச் சொல்லுதல்.
*#உளறுதல்* என்பது அச்சத்தினால் ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லுதல்.
*#என்னுதல்* என்பது ஒரு செய்தியைச் சொல்லுதல்.
*#ஓதுதல்* என்பது ஒருவரின் காதில் மெல்லச் சொல்லுதல்.
*#கரைதல்* என்பது அழுது அல்லது அழைத்துச் சொல்லுதல்.
*#கழறுதல்* என்பது கடிந்து சொல்லுதல்.
*#கிளத்தல்* என்பது ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
*#குயிற்றுதல்* என்பது குயிற்குரலிற் சொல்லுதல்.
*#குழறுதல்* என்பது நாத்தடுமாறிச் சொல்லுதல்.
*#கொஞ்சுதல்* என்பது செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
*#செப்புதல்* என்பது வினாவிற்கு விடை சொல்லுதல்.
*#நொடித்தல்* என்பது கதை சொல்லுதல்.
*#பலுக்குதல்* என்பது உச்சரித்தல்.
*#பிதற்றுதல்* என்பது பித்தனைப் போலப் பேசுதல்.
*#மிழற்றுதல்* என்பது கிளிக்குரலிற் சொல்லுதல்.
*#வலித்தல்* என்பது வற்புறுத்திச் சொல்லுதல்.
*#விள்ளுதல்* என்பது வெளிவிட்டுச் சொல்லுதல்.
*#விளம்புதல்* என்பது பலருக்கு அறிவித்தல்.
*#நொடுத்தல்* என்பது விலை கூறுதல்.
*இங்கணம் சுமார் 39 வகையான வார்த்தைகள் தமிழில் பேசுதலைக் குறிப்பதற்காகத் திகழ்கின்றன. இவற்றை நாள்தோறும் வாழ்வியலில் பயன்படுத்துவோம். நம் தமிழ்மொழி ஆற்றலை மேலும் மேம்படுத்துவோம்.*
*கற்போம்! கற்பிப்போம்!*