மரபுச்சொற்கள் அறிவோம்
நம் முன்னோர்கள் எந்த பொருளுக்கு (அல்லது) செயலுக்கு என்ன பெயர்களை வழங்கினார்களோ, அப்படியே நாமும் வழ்ங்குவது மரபுச்சொல் ஆகும்.
- 1.ஒலி மரபு
- 2.வினைமரபு
- 3.இருப்பிட மரபு
- 4.தாவர உறுப்பு மரபு
- 5.இளமைப்பெயர் மரபு
- எனப்பலவற்றின் அடிப்படையில் மரபுப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.அவற்றுள் சில முக்கியச்சான்றுகளை இங்கு காண்போம்.
இளமை பெயர்கள் :
- அணிற் பிள்ளை யானைக்கன்று,
- நாய்க்குட்டி,
- கழுதைக்குட்டி,
- கீரிப்பிள்ளை,
- மான்கன்று,
- பூனைக்குட்டி,
- பன்றிக்குட்டி,
- எருமைக் கன்று,
- ஆட்டுக்குட்டி,
- எலிக்குட்டி,
- குதிரைக் குட்டி,
- புலிப் பரழ்,
- குரங்கு குட்டி,
- சிங்கக்குருளை
- ஆட்டுப்பட்டி,
- கோழிப்பண்ணை,
- யானைக்கூட்டம்,
- குதிரைக்கொட்டில்,
- மாட்டுத்தொழுவம்,
- வாத்துப் பண்ணை
- ஆந்தை அலறும்,
- குதிரை கனைக்கும்,
- நரி ஊளையிடும்,
- கழுதை கத்தும்,
- குயில் கூவும்,
- புலி உறுமும்,
- காக்கைக் கரையும்,
- கோழி கொக்கரிக்கும்,
- மயில் அகவும்,
- கிளி கொஞ்சும்/ பேசும்,
- சிங்கம் முழங்கும்,
- யானை பிளிரும்
தாவர உறுப்புகளின் பெயர்கள் :
- ஈச்ச ஓலை,
- தாழைமடல்,
- பனையோலை,
- சோளத்தட்டை,
- தென்னை ஓலை,
- பலா இலை,
- மூங்கில் இலை,
- வாழை இலை,
- மாவிலை,
- வேப்பந்தலை,
- கமுக்கங்கூந்தல்,
- நெற்றாள்