முதல் திருப்புதல் தேர்வு-வினா விடைகள்
தமிழாசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வணக்கம். அனைவருக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வருகிற 19 ஆம் தேதியன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகம் முழுவதுமான பொது திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையின் காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்து தங்கள் திருப்புதலைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அந்த நோக்கத்திற்காக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் திருப்புதலுக்கு படிக்க வேண்டிய முக்கிய வினாக்கள் மற்றும் அவற்றுக்கான விடைகள் முழுவதும் இங்கு ஒரு சிறப்புக் கையேடாக வழங்கப்பட்டுள்ளது. மனப்பாடப்பகுதி மற்றும் அலகிடுதல் பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளும் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்த கையேடு மாணவர்கள் வருகின்ற திருப்புதல் தேர்வில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மிகச்சிறந்த தேர்ச்சியுடன் முழு மதிப்பெண் பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறோம்.