10 TH STD TAMIL -KAMBARAMAYANAM VIDEO AND ONLINE QUIZ

கம்பராமாயணம்-10.ஆம் வகுப்பு-தமிழ்

* கம்பராமாயணம் , இராமனது வரலாற்றைக் கூறும் காப்பியம் ஆதலால் (இராம + அயனம்= இராமாயணம் ) இராமாயணம் எனப்பட்டது.

நூல்குறிப்பு :

கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்.

* இந்நூலை இயற்றியவர் கம்பர்.

* கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.

* இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி இயற்றினார்.

* கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல்.

* இராமாயணம் தமிழ் இதிகாசம் இரண்டனுள் ஒன்று மற்றும் முதலாவது.

* கம்பராமாணயம் ஒரு வழி நூல்

     10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற்ற சில முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள்


1)ஆறு ஒரு ஓவியமாக விரிந்து, உயிரெனக் காட்சியளிப்பதாக உணர்வது------

அ) ஓவியக்கலை 

ஆ) அழகுணர்ச்சி 

இ)மெய்யுணரச்சி 

ஈ)நுண்கலை 


2)கொடிவேலி உடைய கமுகந்தோட்டங்கள்,நெல்வயல்களில் பரவி பாய்வது

அ) காவேரி ஆறு 

ஆ) சரயு ஆறு 

இ) பாலாறு 

ஈ) வைகை ஆறு


3)கீழ்கண்டவற்றுள் கொடிவகையைச் சார்ந்தது எது?

அ)செண்பகம்

ஆ)கமுகு 

இ)குருக்கத்தி  

ஈ)கொன்றை 


4) ஓசை தரும் இன்பம் உவமை இல்லா இன்பமடா - எனப் பாடியவர்

அ)பாரதிதாசன் 

ஆ)பாரதியார் 

இ)கவிமணி 

ஈ)நாமக்கல் கவிஞர்


5)கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று பெருமைப் படுபவர்

அ)பாரதியார் 

ஆ)பாரதிதாசன்

இ)கவிமணி 

ஈ)நாமக்கல் கவிஞர் 


6)மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? -  இவ்வடியில் இடம்பெறும் நயம்

அ)எதுகை நயம் 

ஆ)மோனை நயம் 

இ)இயைபு நயம்

ஈ)முரண் நயம்


7)ஏழைமை   வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ? இவ்வடியில் வேடன் என்பது

அ)இராமன்

ஆ)இலக்குவன் 

இ)துரியோதனன் 

ஈ)குகன் 


8)நீர்நிலைகள் எழுப்பும் திரைச்சீலைகள் என்று கம்பர் குறிப்பிடுவது

அ)மீன்கள் 

ஆ)அலைகள் 

இ)தாவரங்கள் 

ஈ)கதிரொளி 


9)வண்டுகளின் ரீங்காரத்திற்கு கூறப்பட்ட உண்மை

அ)மகரயாழ் 

ஆ)விளரியாழ்  

இ)முல்லை யாழ் 

ஈ)பாலையாழ்


10)உறங்குகின்ற கும்பகன்ன  - இத்தொடரில் இடம் பெற்ற தொகாநிலைத் தொடர்கள் முறையே

அ)விளித்தொடர், பெயரெச்சத் தொடர் 

ஆ)எழுவாய் தொடர், விளித்தொடர் 

இ)பெயரெச்சத் தொடர், விளித்தொடர் 

ஈ)வினையெச்சத் தொடர், பெயரெச்சத் தொடர்


11)கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி……….எனப் பெயரிட்டார்

அ)பெரியபுராணம் 

ஆ)இராமாவதாரம்

இ)இராமாயணம்

ஈ)இராம காதை 


12)கம்பராமாயணம்--------- காண்டங்களை உடையது

அ)நான்கு  

ஆ)ஏழு  

இ)எட்டு  

ஈ)ஆறு


13)கம்பர் பிறந்த ஊர்

அ)மயிலாடுதுறை 

ஆ)திருவாரூர் 

இ)தேரழுந்தூர் 

ஈ)திருக்கோவிலூர் 


14)கம்பரை ஆதரித்தவர்

அ)சீதக்காதி 

ஆ)குமண வள்ளல் 

இ)சடையப்ப வள்ளல் 

ஈ)பாண்டித்துரை 

சிறப்புக் காணொளியைக் காண👇


சிறப்பு வினாடி வினாவில் பங்கேற்க👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை