8. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 14-08-2023 முதல் 18-08-2023
மாதம் : ஆகஸ்டு
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பல்துறைக்கல்வி
2. ஆன்ற குடிப்பிறத்தல்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø பல்துறைக்கல்வி பற்றி அறிந்து ,கற்று வாழ்வில் உயர்தல்
Ø வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் வாழ்வியல் விழுமங்களை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø உங்கள் எதிர்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? என்றவினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம்செய்தல்
# ”குடி” என்ற சொல் தரும் பல்வேறு பொருள்கள் யாவை? என்ற வினாவைக் கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
ஏட்டுக்கல்வி,தாய்மொழி வழிக்கல்வி,தமிழ்வழிக் கல்வி,காப்பியக் கல்வி , இயற்கைக் கல்வி முதலியன பற்றி அறிதல்
ஆன்ற குடிப்பிறத்தல் என்றால் சிறந்தகுடி உன்னிடமிருந்து பிறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது இச்சிறுகதை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø உரைநடைப்பகுதியை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக்காட்டுதல்.
Ø பல்துறைக்கல்வியின் அவசியத்தை நடைமுறைச் சான்றுகளைக் கொண்டு விளக்குதல்
Ø சிறுகதையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் சுருக்கிக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
பல்துறைக்கல்வி
ஆன்ற குடிப்பிறத்தல்
7.மாணவர் செயல்பாடு:
Ø பல்துறைக் கல்வி எதிர்கால முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவும்? என்பதைப் புரிந்துகொள்ளுதல்
Ø பாடக்கருத்தை நடைமுறைச் சான்றுகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளுதல்
Ø மொழித்திறன்களை நன்கு புரிந்து கொள்ளுதல்
# ஆன்ற குடிப்பிறத்தல் என்றால் சிறந்தகுடி உன்னிடமிருந்து பிறக்க வேண்டும் என்ற கருத்தைப் புரிந்து கொள்ளுதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 807 - கதைகள், படங்கள், கட்டுரைகள் ,அறிக்கைகள், நகைச்சுவைகள் ஆகியவற்றைப் படித்து நுட்பமாக ஆய்வ செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.