10 TH STD TAMIL ONLINE REVISION EXAM (UNIT -5) REDUCED SYLLABUS

 இயல்-5 வினாக்கள்



1)அருந்துணை என்பதைப் பிரித்தால்- -------------என வரும்

அ)அரு+துணை  ஆ)அருமை +துணை   இ)அருமை+இணை   ஈ)அரு+இணை

2)’இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர் கேட்பது----------வினா.

    ‘அதோ அங்கு நிற்கும் என்று மற்றொருவர் கூறியது--------------விடை

அ)ஐய வினா,வினா எதிர் வினாதல் ஆ)அறியா வினா,மறை விடை

இ)அறியா வினா,சுட்டு விடை ஈ)கொளல் வினா,இனமொழி விடை

3) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

      மருளை யகற்றி மதிக்கும்  தெரு்ளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது

அ)தமிழ்    ஆ)அறிவியல்    இ)கல்வி     ஈ)இலக்கியம்

4)அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி - இவ்வடியில் பயின்று வரும் தொடை 

அ)எதுகை  ஆ)மோனை  இ)இயைபு    ஈ)முரண் 

5)கற்றவர் வழி அரசு செல்லும்  என்று கூறுவது........இலக்கியம்

அ) காப்பிய  ஆ)பக்தி  இ)சங்க  ஈ)நீதி  

6)சதம் என்ற சொல்லின் பொருள்

அ)விளையாட்டு  ஆ)கேடயம்  இ)ஆயிரம்   ஈ)நூறு

7) ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளிப்பது------

அ)தசாவதானம்   ஆ)சதாவதானம்  இ)பதின்மம்   ஈ)பதின் கவனம் 

8)செய்குத்தம்பி பாவலர்----------என  அழைக்கப்படுகிறார்

அ)நாஞ்சில் கவிஞர்  ஆ)மக்கள் கவிஞர்  இ)சதாவதானி  ஈ)தசாவதானி 

9)செய்குத்தம்பி பாவலர் உரை எழுதிய நூல்

அ)குறுந்தொகை  ஆ)சீறாப்புராணம்  இ)தேம்பாவணி  ஈ)இரட்சணிய யாத்திரிகம்

10)வினா----------  வகைப்படும்.                                                                     

)ஆறு  ஆ)ஏழு  இ)எட்டு  ஈ)ஒன்பது                                  

  11)விடை----------- வகைப்படும்                     

அ)ஆறு   ஆ)ஏழு   இ)எட்டு  ஈ)ஒன்பது                                   

  12) தான் அறியாதஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது---------வினா 

அ)அறியா வினா  ஆ)ஐய வினா    இ)ஏவல் வினா   ஈ)அறிவினா

13)’பறந்தது   வண்டா? பழமா? எனக் கேட்பது------------வினா

அ)அறிவினா   ஆ)அறியா வினா    இ) ஏவல் வினா   ஈ) ஐய வினா 

14)பிறருக்கு ஒருபொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது------வினா

அ) கொளல் வினா  ஆ) கொடை வினா   இ) ஏவல் வினா   ஈ) அறியா வினா

15)’ அறிவு அறியாமை ஐயுறல் கொளல்  கொடை

         ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் என வினா வகைகளைக் கூறும் நூல்--

அ) தொல்காப்பியம்  ஆ) தண்டியலங்காரம்  இ) நன்னூல் ஈ)யாப்பதிகாரம் 

16)விடை வகைகளில் முதல் மூன்றும்----------விடைகள் ஆகும்

அ) வெளிப்படை  ஆ)மறை இ)குறிப்பு    ஈ) இனமொழி 

17)பாடுவாயா? என்னும் வினாவிற்குரிய  எதிர்மறை விடையைத் தேர்ந்தெடு

அ)பாடுவேன்  ஆ)பாடேன்  இ)பாடிலன்  ஈ)பாடிற்று 

18)ஏன் பேருந்தை தவற விட்டாய்? என்னும் வினாவிற்குத் தாமதமாக வந்தேனென்று விடைளிப்பது---விடை

அ)உறுவது கூறல்  ஆ)உற்றது உரைத்தல்  இ)ஏவல்  ஈ)இனமொழி 

19)உனக்குக் கதை எழுதத் தெரியுமா ?என்ற வினாவிற்குக் கட்டுரை எழுதத்தெரியுமென்று கூறுவது---விடை

அ)ஏவல்  ஆ)வினா எதிர் வினாதல்  இ)இனமொழி   ஈ)உறுவது கூறல் 

20)பொருள்கோள்------------ வகைப்படும்

அ)ஆ)6    இ)ஈ)8

21) மற்றைய நோக்காது  அடிதொறும் வான்பொருள்

        அற்று அற்று ஒழுகும் அஃது……இவ்வடிகள்குறிப்பிடும் பொருள்கோள்

அ)ஆற்றுநீர்   ஆ) மொழிமாற்று  இ) நிரல்நிறை   ஈ) கொண்டு கூட்டு 

22)ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது-------- பொருள்கோள்

அ) ஆற்றுநீர்  ஆ) நிரல்நிறை  இ) மொழிமாற்று  ஈ) கொண்டு கூட்டு 

23)’அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

        பண்பும் பயனும் அது - இக்குறட்பா  எந்த பொருள் கோளில் அமைந்துள்ளது?

அ) ஆற்றுநீர்  ஆ) முறை நிரல்நிறை  இ) எதிர் நிரல் நிறை  ஈ) கொண்டு கூட்டு 

 24) செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை  ஏற்கும் பயனிலைகளை எதிரெதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் ----------பொருள்கோள்

அ) முறை நிரல்நிறை  ஆ) ஆற்றுநீர்  இ) எதிர் நிரல் நிறை  ஈ) கொண்டு கூட்டு

25) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று சேர்த்துப் பொருள் கொள்வது-------- பொருள்கோள்

 அ) முறை நிரல்நிறை  ஆ) ஆற்றுநீர்  இ) எதிர் நிரல் நிறை  ஈ) கொண்டு கூட்டு

26)யாப்படி பலவினுங்  கோப்புடை மொழிகளை

       ஏற்புழி இசைப்பது....இவ்வடிகள் குறிப்பது-------- பொருள்கோள்

அ) மொழிமாற்று   ஆ) கொண்டு கூட்டு   இ) நிரல்நிறை  ஈ) ஆற்றுநீர் 

27) ஆலத்து மேல  குவளை குளத்துள

        வாலின் நெடிய குரங்கு - இவ்வடிகளில் இடம்பெறும் பொருள்கோள் 

அ)ஆற்றுநீர்   ஆ) நிரல்நிறை  இ) கொண்டு கூட்டு  ஈ) மொழிமாற்று 

TO ATTEND ONLINE QUIZ

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை