வளரறி செயல்பாடுகள் - FA(B)
அன்பார்ந்த தமிழ் ஆசிரியர் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய மதிப்பீட்டு முறையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு இந்த ஆண்டும் கடைபிடிக்கப் படுவதாகத் தெரிகிறது. அந்தத் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில், பின்வரும் மூன்று படிநிலைகள் உள்ளன.அ) வளரறி செயல்பாடுகள்-அ (20 மதிப்பெண்கள்) - ஒப்படைப்புகள் அல்லது மாணவர் தனித்திறன் செயல்பாடுகள்
ஆ) வளரறி செயல்பாடுகள்-ஆ (20 மதிப்பெண்கள்)- குறுந்தேர்வுகள் (பாடம்
சார்ந்தவை)
இ)தொகுத்தறி மதிப்பீடு (60 மதிப்பெண்கள்)- எழுத்துத் தேர்வு
இதில் இரண்டாவது பகுதியான வளரறி செயல்பாடுகள்-ஆ வில் மாணவர்களுக்கு செய்யப்படும் மதிப்பீட்டை மதிப்பெண் பதிவேடுகளாகப் பராமரிக்க வேண்டியுள்ளது. நான்கு செயல்பாடுகள் வழங்கப்பட்டு,அதில் மாணவர்களின் 2 சிறந்த செயல்பாடுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டு மதிப்பெண் கணக்கிடப்படும்.
அவ்வகையில் செயல்பாட்டிற்கான குறுந் தேர்வு வினாத்தாட்கள் PDF வடிவில் இங்கே பதிவிடப் பட்டுள்ளன.
6.ஆம் வகுப்பு-தமிழ்
செயல்பாடு-1 ஐப் பதிவிறக்க👇