RANIPET DISTRICT FIRST MID TERM 10 TH STD TAMIL ANSWER KEY (2022-2023)

10.ஆம் வகுப்பு-தமிழ்-விடைக்குறிப்புகள்

TO DOWNLOAD PDF - CLICK HERE

முதல் இடைப்பருவத்தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்

தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                        பகுதி-1                                       15X1=15

1)ஆ)மணி வகை

2)இ.எம்+தமிழ்+நா

3)அ.வணிகக் கப்பல்களும்,ஐம்பெருங்காப்பியங்களும்

4)அ.கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

5)இ.அன்மொழித்தொகை

6)ஆ.3,1,4,2

7)இ.தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

8)ஈ.சிற்றூர்

9)காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

10)இ.பாண்டியன்

11)அ.பாரதியார்

12)இ.இரட்டுற மொழிதல்

13)இ.சந்தக்கவிமணி தமிழழகனார்

14)ஆ.தருதல்

15)இ.அணை கிடந்தே,இணை கிடந்தே

TO DOWNLOAD PDF - CLICK HERE

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

16)உரைநடையும்,செய்யுளும் கலந்து எழுதப் பெறுவது

17)அ.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் எழுதியவர் யார்?

    ஆ.இந்தியாவின் முதுகெலும்பு எது?

18)அரும்பு,போது,மலர்,வீ,செம்மல்

19)தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

20)வாருங்கள், நலமா?,நீர் அருந்துங்கள்

21)எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

TO DOWNLOAD PDF - CLICK HERE 

                                                                  பிரிவு-2                                           5X2=10

22)சிரித்து சிரித்துப் பேசினார்                                                                                        

23)அ.புதுமை , ஆ.விண்மீன்

24)அ.சிலைக்கு சீலை கட்டினார்கள்  ஆ.பள்ளி விட்டதும் வீட்டுக்குச் சென்றேன்

25)வா(வரு)+க   வா-பகுதி , ‘வரு’ எனத்திரிந்தது விகாரம்,க-வியங்கோள் வினைமுற்று விகுதி

26)அ.பண்டம் குப்பையிலே  ஆ.மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

27)கண்ணே கண்ணுறங்கு-விளித்தொடர்  ,பாடினேன் தாலாட்டு-வினைமுற்றுத்தொடர்

28) புயல்,பெருங்காற்று

பகுதி-3

                                                                         பிரிவு-1                                                    2X3=6     

29) அ)நாற்று- நெல் நாற்று நட்டேன்.

     ஆ) கன்று- வாழைக்கன்று வளமாக இருந்தது.

     இ) பிள்ளை- தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.

     ஈ)வடலி-பனைவடலியை விரும்பி வளர்த்தேன்.

     உ)பைங்கூழ்-பைங்கூழ் பசுமையாக இருந்தது.

30) சோலை (பூங்காக்) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது :

சோலை (பூங்காக்) காற்று

மின்விசிறிக் காற்று

என்ன நண்பரே நலமா

நான் நலம் தான். ஆனால் உன்னைப் போல் நலமாக இல்லை

தென்றலாகி வந்தேன் நான்

வெயிலின் வெப்பம் தனிப்பேன் நான்

சோலை மலர்களின் மணம் கலந்து வருவேன்

மின்சாரத்தின் வேகத்தில் வருவேன்

இன்பமூட்டுபவன் நான்

தேவையை நிறைவு செய்பவன் நான்

உடலின் நோயைத் தீர்ப்பேன் நான்

உன்னிலே காற்று மாசுபடும்,என்னிலே அது இல்லை

நான் இயற்கையானவன்

நான் செயற்கையானவன்

எனக்கு விலை இல்லை

எனக்குக் காசு கொடுக்க வேண்டும்

நான் உலாவரும் தென்றல்

நான் ஒரு கூண்டுக்கிளி

உன் வெப்பக்காற்று உடலுக்கு தீங்கு தரும் என்னிளம் காற்று உடலுக்கு நன்மை தரும்

உணர்வேன் நண்பா! மின்சாரம் இல்லையெனில் என்னால் இயங்க முடியாது

 

31)அ.மொழி   ஆ.நாட்டு வளம் இ.நாகரிகம்

 

                                                     பிரிவு-2                                                2X3=6

32)

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்

33)

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

34) அ.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !

 TO DOWNLOAD PDF - CLICK HERE

தென்னன் மகளே! திருக்குறளின் மாண் புகழே !

இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே! நற்கணக்கே !

மன்னுஞ் சிலம்பே ! மணிமேகலை வடிவே !

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !

ஆ. சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

      உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

      நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

      கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

      இன்னே வருகுவர், தாயர்” என்போள்

      நன்னர் நன்மொழி கேட்டனம்

                                                  பிரிவு-3                                                  2X3=6

35)வேற்றுமை,வினை,பண்பு,உவமை,உம்மை,அன்மொழி

36)இன்னிசை அளபெடை – செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது.

37)புளிமா   புளிமா  புளிமா  புளிமா

     கருவிளம்   தேமா  மலர்.

                                                     பகுதி-4                                                     5X5=25

38)அ. # மிகுதியான உயிர்வளியைக் கொண்டுவந்து தரவேண்டும்

        # வாழ்நாளை நீட்டிக்க வேண்டும்.

        # ஆற்றலைக் குறைக்காமல் வீச வேண்டும்.

        # சீராக நீண்டகாலம் வீச வேண்டும்.

        #  உன்னைப் பாட்டுகள் பாடி வழிபடுகிறோம்.

ஆ. மாணவர் மனத்திறன்,எழுத்துப் பிழை,மொழி ஆளுமை ஆகியவற்றைக் கொண்டு மதிப்பெண் வழங்குக.

39) அ.உறவுமுறைக்கடிதம்,

          # அனுப்புநர் முகவரி,நாள்

          # விளித்தல்

          # கடிதத்தின் உடல்

          # இப்படிக்கு

          # உறைமேல் முகவரி

ஆகிய அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

ஆ.அலுவலகக் கடிதம்,

          # அனுப்புநர் முகவரி

          # பெறுநர் முகவரி

          # ஐயா,பொருள்

          # கடிதத்தின் உடல்

          # இப்படிக்கு

          # இடம்,நாள்

          # உறைமேல் முகவரி

ஆகிய அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40) ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

     என்னை எழுது என்று சொன்னது

    இந்தக் காட்சி!      

    காற்றைப் பற்றி எழுதினேன்!

    அனைவரும் இதன் அருமை அறிந்து

    நடக்க வேண்டும்!

    வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்!

41) திரண்ட கருத்து: சரியாக உபசரிக்கப்படாமையை விளக்குகிறார்

     மையக்கருத்து: விருந்தோம்பலில் தாமதம்

     அணி நயம் : சிலேடை அணி

     எதுகை நயம்: கத்துகடல்,அத்தமிக்கும்    லை,லை

     மோனை நயம் : லை ,ர்

42)அ. பிறர் மனம் மகிழும்

          அறம் வளரும்

          புகழ் பெ ருகும்

          நல்ல நண்பர்கள் சேருவர்

          அன்பு நிறையும்

ஆ.

                                          

 

                                                   பகுதி-5                                              3X8=24

43.அ. தமிழின் சொல்வளம்:

    1)சொல்வளம் என்பது இலக்கியச்செம் மொழிகளுக்கெல்லாம் பொதுவாக இருந்தாலும் 

  தமிழ் மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.

    2)தமிழ் அல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது தமிழில் உள்ள

   ஒரு பொருட் பல வரிசைகளில் அவற்றில் இல்லாத குறை தெரிகிறது எந்தத்

   தமிழறிஞருக்கும் மிகத் தெளிவாகத் தோன்றும் செயல் இதுவாகும்.ஒரு மொழி பொது

   மக்களாலும் அதன் இலக்கியம் புல மக்களாலும் அமையப்பெறும்.

   3)தமிழ் பொதுமக்கள் உயர்ந்த பகுத்தறிவு உடையவர்கள் எத்தனையோ ஆராய்ச்சி நடந்து 

      வரும் இக்காலத்திலும் எத்தனையோ மொழிகளில் நின்று கடன் கொண்ட ஆங்கில 

      மொழியிலும் இலையைக் குறிக்க leaf என ஒரே ஒரு சொல் உள்ளது.

   4)ஆங்கிலநூல்களிலும் வேறு பலவகைகளில் இலைகளைப்பாகுபாடு செய்தனர் அன்றி,தமிழ் 

      பொதுமக்களைப் போல வன்மை,மென்மை பற்றி தாள், இலை,தோகை எனப்பாகுபாடு   

      செய்யவில்லை.

   5)இத்தகைய பாகுபாடு ஏனைய உறுப்புகளுக்குள்ளும் செய்யப்பட்டது. இதில் இருந்தே

   தமிழின் சொல்வளத்தைத் தெளிவாக நம்மால் அறிய முடியும்.

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை:

    1)மொழியுடன் இலக்கணம் நெருங்கியதொடர்புடையது.சொல்லாக்கம் மரபிலக்கணத்துடன் 

    வேறுபடும் இடங்களைக் கண்டறிந்து புதிய இலக்கண விதிகளை வகுக்க வேண்டிய 

   தேவை ஏற்பட்டுள்ளது.

     2)சொல்லாக்க அறிவானது அத்துறையில் வளர்ச்சிக்கும் மேலும் மொழியின் வளர்ச்சிக்கும் 

        ஆதாரமாகும்.

     3)உயர் கல்வியைத்  தாய்மொழியில் பயிற்றுவிக்க நாடுகளில் சில ஆண்டுகளில் வீட்டு 

        மொழியாகி விடும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.

     4)உயர் கல்வியை தமிழில் கற்பித்தலுக்கான நிலையை ஏற்படுத்திய துறைதோறும் 

        நடைபெற்றுக்கொண்டிருக்கும் சொல்லாக்கங்கள் அடிப்படையாக விளங்குகின்றன.

     5)தொன்மையான நம் தமிழ் மொழியானது எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும்  

        பிரச்சினைகளை தகர்த்து காலத்துக்கு ஏற்றவாறு இளமையுடன் விளங்க வேண்டும்

   என்றால் சொல்லாக்க முயற்சிகள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற வேண்டியது

   அவசியம் என்று பாவாணர் தமது சொல்லாக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்

ஆ. # அறவுணர்வும்,தமிழர் மரபும்

     # தனித்து உண்ணார்

     #  அல்லில் ஆயினும்

     #  இன்மையிலும் விருந்தோம்பல்

     # விருந்தை எதிர்கொள்ளும் தன்மை

44.அ.அன்னமய்யா

முன்னுரை:

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார்.அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யாஅருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

               சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும்    அன்னமய்யாவையும், இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்.

முடிவுரை:

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

ஆ.புயலிலே ஒரு தோணி 

முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்,

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

   அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

45)அ. சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

        “ தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!”

என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப்  புலவர்கள் பலவகை இலக்கியங்களை, பல்வேறு வடிவங்களில் படைத்து,தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர். தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய்த்திகழ்வதற்கு அதுவும் ஒருபெருங்காரணமாகும். சான்றோர்களாலும்,புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

கன்னித்தமிழ்:

      தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களில் தொடங்கி,தற்காலஉரைநடை  மற்றும் துளிப்பா வரை பல்வேறு காலகட்டங்களில்  பல்வேறு இலக்கிய வடிவங்களில், பல்வேறு பொருட்களைக் கொண்டு,எண்ணிலடங்கா நூல்களை இயற்றி, தமிழன்னைக்குச் சூட்டி, தமிழ் மொழியைக் கன்னித்தமிழாய் வைத்திருப்பதற்கு தமிழராகிய நாம் பெருமைப்பட வேண்டும்.

தமிழன்னைக்கு எழில் சேர்க்கும் சிற்றிலக்கிய வடிவங்கள்:

      தமிழகத்தில், நாயக்கர் ஆண்ட காலப்பகுதியை சிற்றிலக்கிய காலம் என்பர். ஏனெனில், அக்கால கட்டத்திலேயே சிற்றிலக்கிய வடிவங்கள் பல உருவாகி, நூல்கள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை பிள்ளைத்தமிழ், சதகம், பரணி, கலம்பகம், உலா அந்தாதி, கோவை முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் ஆகும்.

முடிவுரை:

   “ வீறுடை செம்மொழி தமிழ்மொழி” என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை காப்பது நம் தலையாய கடமையாகும்.

.மாணவரின் சொற்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்

 TO DOWNLOAD PDF - CLICK HERE

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை