8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -OCTOBER 2 ND WEEK

  8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 14-10-2024 முதல் 18-10-2024        

மாதம்         அக்டோபர்  

வாரம்     :  இரண்டாம் வாரம்                                         

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

                                             2.தமிழர் இசைக்கருவிகள்

1.கற்றல் நோக்கங்கள்   :

     Ø  கைவினைக்கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்

  #      @ பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் ,விளக்கப்படம்




3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # மண்பானை செய்வதைப் பார்த்துள்ளீர்களா?

       # இசை கேட்பது எத்தனை பேருக்குப் பிடிக்கும்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

        Ø  மட்பாண்டக்கலை,சுடுமண் சிற்பக்கலை,டெரகோட்டா

         Ø  மூங்கில்கலை,கோரைப்பாய் கலை,பனையோலைக்கலை,பிரம்புக் கலை

         Ø  இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø கைவினைப்பொருட்கள் பற்றி விளக்குதல்

     Ø  கைவினைப் பொருட்களின் வகைகளை உரிய படங்களுடன் விளக்குதல்

    @ இசைக்கருவிகளின் வகைகளை உரிய காணொளிகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

நாட்டுப்புறக் கைவினைக்கலைகள்


தமிழர் இசைக்கருவிகள்

7.மாணவர் செயல்பாடு:

   மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.


    # நாட்டுப்புறக் கைவினைப் பொருட்களின் முக்கியத்துவத்தை அறிதல்

    # நாட்டுப்புறக் கைவினைப்பொருட்களின் வகைகளை அறிதல்

    # தமிழர் இசைக்கருவிகளின் வகைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1.டெரகோட்டா என்பது-----ஐக்குறிக்கும்
 2.பிரம்பு என்பது ஒரு-----வகைத் தாவரம்
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. டெரகோட்டா-குறிப்பு வரைக
4. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.கைவினைபொருட்களைப் பற்றி அறிதல் ஏன் அவசியமாகிறது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

         Ø  805 - எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள் /

நிகழ்வுகள்பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும் சிந்தனைகளையும்

 உருவாக்கி வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி /  சைகை மொழியில்)

@ 817 - ஒரு குறிப்பிட்ட சூழலில் பிறர் பயன்படுத்திய சொற்களைப் பிறிதொரு சூழலில் தமது மொழிநடையில் பயன்படுத்துதல்

  #           

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை