6.ஆம் வகுப்பு-தமிழ்-இரண்டாம் பருவம்
வினா விடைகள்
இயல்-3 நானிலம் படைத்தவன்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. போர்க்களத்தில்
வெளிப்படும் குணம்----------
அ)
மகிழ்ச்சி ஆ) துன்பம் இ)
வீரம் ஈ) அழுகை
2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது----------
அ)
கல் + அடுத்து ஆ) கல் +
எடுத்து இ) கல் +லடுத்து ஈ) கல் + லெடுத்து
3. நானிலம் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக்
கிடைப்பது----------
அ)
நா+ னிலம் ஆ) நான்கு + நிலம் இ) நா + நிலம் ஈ) நான் +
நிலம்
4. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்----------
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடுஎன்ற ஈ) நாடுஅன்ற
5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்----------
அ)
கலம்ஏறி ஆ) கலமறி இ) கலன்ஏறி ஈ)
கலமேறி
சொற்றொடரில் அமைத்து
எழுதுக.
அ)மாநிலம் –
கேரளா நமது அண்டை மாநிலம்
ஆ) கடல் - பரவை என்ற சொல்லின் பொருள் கடல்
இ) பண்டங்கள் – இனிப்புப் பண்டங்களை நான் விரும்பி உண்பேன்.
நய ம் அறிக.
1.நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச்சொற்களை எடுத்து எழுதுக.
எதுகைச்சொற்கள்:
கல்லெடுத்து ,மல்லெடுத்த
ஊராக்கி,பேராக்கி
ஆழ , சூழும்
அஞ்சாமை,அஞ்சுவதை
2.நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.
மோனைச்சொற்கள்:
மாநிலத்தில்,முல்லை,மருதம்
அஞ்சாமை,அஞ்சுவதை
குறுவினா
1.
நான்கு நிலங்கள் என்பன யாவை ?
விடை:
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்
2.
தமிழன் எதற்கு அஞ்சினான்?
விடை:
தமிழன் தீமைகளைச் செய்ய அஞ்சினான்
3.
தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
விடை:
தமிழன் வணிகம் செய்யக் கண்டங்களைச் சுற்றி வந்தான்.
சிறுவினா
1.
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை
எவ்வாறு உருவாக்கினான்?
விடை:
ü கற்களும்,முட்களும் நிறைந்த நிலப்பரப்பைப் பண்படுத்தினான்.
ü உடல்வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.
ü ஊர்,நகரம்,நாடு ஆகியவற்றை உருவாக்கினான்.
2.
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை ?
விடை:
ü கடல்
கடந்து வணிகம் செய்தான்.
ü போர்களில்
வெற்றிபெற்றான்.
ü இமயத்திலும்
தன் கொடியை நாட்டினான்.
ü கப்பல்களில்
வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தான்.
சிந்தனை வினா
1.காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனச்சிந்தித்து எழுதுக.
விடை:
ü காடுகளில் வாழ்ந்த மனிதன் தொடக்கத்தில் இலை,தழைகளை உடுத்தி நிரந்தர இடமின்றி,
நாடோடியாக வாழ்ந்தான்.
ü நெருப்பைக் கண்டறிந்தபின் உணவைச் சமைத்து உண்டான்.
ü சக்கரம் கண்டுபிடித்த பிறகு இடம்பெயரத் தொடங்கினான்.
ü உழவுத்தொழிலை அறிந்த பிறகு ஒன்றுகூடி வாழ்ந்தான்
இயல்-3 கடலோடு விளையாடு
சரியான விடையை த் தே
ர்ந்தெ டுத்து எழுதுக.
1.
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது___________
அ) கதிர்ச்+சுடர் ஆ) கதிரின்+சுடர் இ) கதிரவன்+சுடர் ஈ) கதிர்+சுடர்
2.
மூச்ச டக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது___________
அ) மூச்சு+அடக்கி ஆ) மூச்+அடக்கி இ) மூச்+சடக்கி ஈ) மூச்சை
+அடக்கி
3.
பெருமை + வானம் என்ப தனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல் ___________
அ) பெருமைவனம் ஆ)
பெருவானம் இ) பெருமானம் ஈ) பேர்வானம்
4.
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___________
அ)அடிக்குமலை ஆ)அடிக்கும் அலை இ) அடிக்கிலை ஈ) அடியலை
பாடல் வரிகளுக்கு
ஏற்பப் பொருத்துக
1.
விடிவெள்ளி - பஞ்சுமெத்தை
2.
மணல் - ஊஞ்சல்
3.
புயல் - போர்வை
4.
பனிமூட்டம் – விளக்கு
விடைகள்:
1.
விடிவெள்ளி - விளக்கு
2.
மணல் - பஞ்சுமெத்தை
3.
புயல் - ஊஞ்சல்
4.
பனிமூட்டம் – போர்வை
குறுவினா
1.
அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக்
கருதுகின்றனர் ?
விடை:
அலை-தோழன் , மேகம்-குடை.
2.
கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை ?
விடை:கண்ணாடி-முழுநிலவு
, தலைவன் -வானம்.
3.
மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை ?
விடை:
வீடு-கட்டுமரம் , செல்வம்- மீன்கள்
சிந்தனை வினா
1.
நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில்
ஒன்றைப் பற்றி ஐந்துவரிகள் எழுதுக.
விடை:
ü நாங்கள் வசிக்கும் பகுதியில் நெசவுத்தொழில் நடைபெறுகிறது.
ü உழவுத்தொழிலுக்கு அடுத்து உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
ü எண்ணற்ற குடும்பங்கள் இத்தொழிலை மேற்கொள்கின்றன.
ü ஆடவர் உடுத்தும் கைலிகளும்,அனைவரும் பயன்படுத்தும் கைக்குட்டைகளும் பெருமளவு
தயார்செய்யப்படுகின்றன.
ü இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.
2.
நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன ?
விடை: யாராலும் ஏட்டில் எழுதப்படாமல் , ஒருவர் கூற, மற்றவர் அறிய, வாய்வழியாகவே கற்பிக்கப்பட்டு வருவதால் வாய்மொழி இலக்கியங்கள் எனப்படுகின்றன.
இயல்-3 வளரும் வணிகம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________
அ) நுகர்வோர் ஆ)தொழிலாளி
இ) முதலீட்டாளர் ஈ) நெசவாளி
2.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல் ______________
அ) வணிகசாத்து ஆ) வணிகம்சாத்து இ) வணிகச்சாத்து ஈ) வணிகத்துசாத்து
3.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல் ______________
அ) பண்டமாற்று ஆ) பண்டம்மாற்று இ) பண்மாற்று ஈ) பண்டுமாற்று
4.
மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது _____________
அ) மின் + னணு ஆ) மின்ன + அணு இ) மின்னல் + அணு ஈ) மின் + அணு
5.
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது_____________
அ) விரி+வடைந்த ஆ) விரி+அடைந்த இ) விரிவு+அடைந்த _ஈ) விரிவ்+அடைந்த
பின்வரும் சொற்களைச்
சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) வணிகம் – தமிழர் கடல் வணிகத்தில்
சிறந்திருந்தனர்
ஆ) ஏற்றுமதி – நறுமணப்பொருட்களை ஏற்றுமதி
செய்தனர்
இ)சில்லறை–சில்லறை வணிகர்களே மக்களுக்குத்
தேவையானவற்றை கொண்டு சேர்க்கின்றனர்
ஈ) கப்பல் – காலாண்டு விடுமுறையில்
நான் கப்பலில் பயணம் செய்தேன்
குறுவினா
1.
வணிகம் என்றால் என்ன ?
விடை:
ஒரு
பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு
விற்பதும் வணிகம் ஆகும்.
2.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
நெல்லைக் கொடுத்து உப்பைப் பெறுதல்.
3.
சிறுவணிகப் பொருட்கள் யாவை
?
விடை:
பால்,கீரை,காய்கறிகள்
சிறுவினா
1.
சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக.
வ.எண் |
சிறுவணிகம் |
பெருவணிகம் |
1 |
முதலீடு குறைவு |
முதலீடு அதிகம் |
2 |
நுகர்வோருடன் நேரடித் தொடர்புண்டு |
நுகர்வோருடன் நேரடித் தொடர்பில்லை |
3 |
பொருட்களை தெருக்களிலும் சிறிய கடைகளிலும் விற்பனை செய்வர். |
மொத்தமாகக் கொள்முதல் செய்து சில்லறை வணிகர்கள் மூலம் விற்பனை செய்வர். |
2.
பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை ?
விடை:
ü பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு ,மயில் தோகை , அரிசி , சந்தனம் ,
இஞ்சி , மிளகு போன்றவை
பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன .
ü சீனத்திலிருந்து
கண்ணாடி,
கற்பூரம், பட்டு போன்றவை
இறக்குமதி செய்யப்பட்டன . அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
சிந்தனை வினா
1.
வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம்
மக்களை வந்தடைகின்றன ?
விடை:
நேரடி வணிகர்கள் மூலமாகவும்,இணைய வனிகம் மூலமாகாவும் வந்தடைகின்றன.
2.
உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
விடை:
உழவுத்தொழில்,நெசவுத்தொழில்,வணிகம்.
ஆங்கிலச் சொல்லுக்கு
இணையான தமிழ்ச்சொல்லை எடுத்து எழுதுக.
(மின்னணு வணிகம், காசோலை,
இணையத்தள வணிகம், வரைவோலை,
வங்கி,
மின்னணு மயம், பற்று
அட்டை , பணத்தாள், கடன் அட்டை )
ஆங்கிலச்சொல் |
தமிழ்ச்சொல் |
கரன்சி
நோ ட் |
பணத்தாள் |
பேங்க் |
வங்கி |
செக் |
காசோலை |
டிமாண்ட் டிராஃப்ட் |
வரைவோலை |
டிஜிட்டல் |
மின்னணு மயம் |
டெபிட் கார்டு |
பற்று அட்டை |
கிரெடிட் கார்டு |
கடன் அட்டை |
ஆன்லைன் ஷாப்பிங் |
இணையத்தள வணிகம் |
ஈ-காமர்ஸ் |
மின்னணு வணிகம் |
இயல்-3 உழைப்பே மூலதனம்
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
v பூங்குளத்தில்
வசிக்கும் அருளப்பர் என்ற முதியவர் தான் வெளிநாடு செல்லும் முன் தன் பிள்ளைகளாகிய வளவன்,
அமுதா,எழிலன் மூவரிடமும் தலா ஐம்பதாயிரம் பணம் கொடுத்து தான திரும்பும்வரை அப்பணத்தை
பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறிச்சென்றார்.
v உழவுத்தொழிலில்
ஆர்வமுடைய வளவன்,நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து,அதில் பலவித காய்கறிகளை விதைத்து நல்ல
வருவாய் ஈட்டி பணத்தை இருமடங்காக்கினான்.
v ஆடு
மாடுகள் வளர்ப்பதில் ஆர்வமுடைய அமுதா ஆடு மாடுகள் வளர்த்து அவற்றிடமிருந்து கிடைத்த
பால்பொருட்களைக் கொண்டு வருவாயை இரட்டிப்பாக்கினான்.
v இளையவனாகிய
எழிலனோ தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வங்கியில் வைத்திருந்தான்
v அருளப்பர்
வந்ததும் மூவரும் தத்தம் செயல்களைப்பற்றிக் கூறினர்.
v வளவன்,அமுதாவை
வெகுவாகப் பாராட்டியவர்,எழிலனது தவற்றைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறினார்.
இயல்-3 சுட்டு எழுத்துகள்,வினா எழுத்துகள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுது.
1.
என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே )
2.
தம்பி ____________ வா (இவர் / இங்கே )
3.
நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே
)
4.
யார் ___________ தெரியுமா? (அவர் / யாது)
5.
உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே / என்ன )
குறுவினா
1.
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன ? அவை யாவை ?
விடை: ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும்
எழுத்துகளுககுச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும்
சுட்டு எழுத்துகள் ஆகும்.
2.
அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
விடை:
ü வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே
இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
ü வினா
எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவதுபுறவினா எனப்படும்.
சிந்தனை வினா
1.அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு,
புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
விடை:
ü சொல்லின்
உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத்தருவது அகச்சுட்டு
ü வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே
இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா.
ü சொல்லின்
வெளியே இருந்து சுட்டுப்பொருளைத்தருவது புறச்சுட்டு.
ü வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே இருந்து வினாப் பொருளைத்
தருவது புறவினா.
இயல்-3 மொழியை ஆள்வோம்
சொற்றொடர்ப் பயிற்சி.
அ) அந்த , இந்த
என்னும் சுட்டுச்சொற்களை அமைத்துத் தொடர்கள்
எழுதுக.
விடை:
· எழிலன் அந்த இடத்திலேயே நின்றான்.
· மாமா இந்த வாரம் வருவதாகச் சொன்னார்.
ஆ) எங்கே , ஏன்,
யார் ஆகிய வினாச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
விடை:
v சரஸ்வதி மகால் நூலகம் எங்கு உள்ளது?
v வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?
v திருக்குறளை இயற்றியவர் யார்?
சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக.
அ) நான்
பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு , அரசு)
விடை
: நான் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்.
ஆ) பொன்னன்
முன்னேறினான். ( வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)
விடை: பொன்னன் துணி வணிகம் செய்து,பொருளீட்டி முன்னேறினான்.
பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க .
விடை:
நீ
ஊருக்குச் சென்றாய்.
நான்
ஊருக்குச் சென்றேன்.
அவன்
ஊருக்குச் சென்றான்.
அவள்
ஊருக்குச் சென்றாள்.
அவர்
ஊருக்குச் சென்றார்.
அடைப்புக்குள் உள்ள சொல்லைத்
தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள் .
அ) நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
விடை:
நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள்
ஆ) நாம்
உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை )
விடை:
நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்
இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த )
விடை: நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.
கடிதம் எழுதுக.
பிறந்த நாள்
பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம்
எழுதுக.
10,தமிழன்
வீதி,
மதுரை-1
25
நவம்பர்,2022.
அன்புள்ள மாமாவிற்கு,
அன்புடன் நிறைமதி எழுதும் மடல்.நலம் நலமறிய
ஆவல்.தாங்கள் எனக்குப் பிறந்தநாள் பரிசாக அனுப்பிய தமிழ் அகராதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மிகவும்
பயனுள்ளதாகவும் உள்ளது.எனது தமிழாசிரியரிடமும் அகராதியைக் காட்டினேன்.அவரும் அகராதி
மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்னார். வகுப்பறையில் தமிழாசிரியர் கூறும் அருஞ்சொற்கள்
அனைத்திற்கும் இதில் பொருள் உள்ளது. பயனுள்ள பிறந்தநாள் பரிசை வழங்கிய தங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்.
நன்றி!!
இப்படிக்கு,
தங்கள்
அன்புடைய,
வா.நிறைமதி.
உறைமேல் முகவரி:
கோ.தமிழரசன்
12,முல்லை
நகர்,
திருத்தணி-1.