9 TH STD TAMIL ANNUAL EXAM MODEL QUESTION PAPER-1 2022-2023

9.ஆம் வகுப்பு-தமிழ்

ஆண்டு இறுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 

ஆண்டு இறுதித் தேர்வு-மாதிரி வினாத்தாள்-1

       9.ஆம் வகுப்பு                               தமிழ்                                          மதிப்பெண்கள்: 100

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                         15X1=15                                                   

1) தமிழ் வடமொழியின் மகளன்று என்று கூறியவர்

அ‌. முல்லரும் ஆ. வில்லியம்  இ. கால்டுவெல்  ஈ. ஜி.யு.போப்

2) ஏறு தழுவுதல் ______ நிலத்து மக்களின் அடையாளம்

அ.குறிஞ்சி  ஆ.முல்லை   இ.மரும்  ஈ.நெய்தல்

3)  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?

அ.முத்துலெட்சுமி  ஆ.மலாலா  இ.சாவித்திரிபாய் பூலே  ஈ.நீலாம்பிகை அம்மையார்

4) இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்தவர் யார்

அ.கேப்டன் தாசன் ஆ.இராஜாமணி  இ.ஜான்சி   ஈ.தில்லான்

5) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை

அ.கண்ணி  ஆ.சிற்றிலக்கியம் இ.குறள்   ஈ.சங்க இலக்கியங்கள்

6) வாவி என்பதன் பொருள்?

அ.வண்டு ஆ.தேன்   இ.பொய்கை  ஈ.குற்றம்

7) சீவகசிந்தாமணி ______ எனவும் அழைக்கப்படுகிறது

அ.மண நூல்   ஆ.எட்டுத்தொகை  இ.பத்துப்பாட்டு   ஈ.முத்தொள்ளாயிரம்

8)நேர்+நிரை+நேர் என்றமையும் மூவசைச்சீருக்கான வாய்பாடு

அ)தேமாங்காய்  ஆ)புளிமாங்காய்   இ)கருவிளங்காய் ஈ)கூவிளங்காய்

9) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

அ.6  ஆ.8   இ.10   ஈ.12

10) உறுபொருள் இலக்கணக் குறிப்பு எழுதுக 

அ.வினைத்தொகை  ஆ.வேற்றுமைதொகை இ.உம்மைதொகை ஈ.உரிச்சொல் தொடர்

11) "இடைச் சொற்கள் தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல" என்று கூறியவர்?

அ.கம்பர்  ஆ.வள்ளலார்  இ.தொல்காப்பியர்  ஈ.காரியாசான்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

   நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

   உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

   உண்டி முதற்றே உணவின் பிண்டம்

   உணவெனப் படுவது  நிலத்தொடு நீரே

12.இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ.பெரியபுராணம்   ஆ.புறநானூறு  இ.தமிழ்விடு தூது  ஈ.தமிழோவியம்

13.இப்பாடலை இயற்றியவர்

அ.நன்னாகனார்   ஆ.ஔவையார்   இ.மருதனார்  ஈ.குடபுலவியனார்

14.யாக்கை என்பதன் பொருள்

அ.உடல்  ஆ.உலகம்  இ.காற்று   ஈ.வானம்

15.அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு

அ.வினையெச்சம்  ஆ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  இ.பெயரெச்சம்  ஈ.முற்றெச்சம்

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                                      பிரிவு-1                                                   4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ) இளங்கோவடிகள் மழையை வாழ்த்திப் பாடியுள்ளார்.

ஆ)சந்திராயன் – 1 நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது

17)பகுத்தறிவு என்றால் என்ன?

18)வட திராவிட மொழிகள் நான்கனை எழுதுக.

19)நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

20)உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்?ஏன்?

21)தூண்  என முடியும் திருக்குறளை எழுதுக.

                                                                       பிரிவு-2                                                5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22)வல்லினம் மிகா இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.

23)வீணையோடு வந்தாள்,கிளியே பேசு-தொடரின் வகையைச் சுட்டுக.

24)மொழிபெயர்க்க: அ. Polyglot,  ஆ. Philologist

25). பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

        அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______________ மொழியாகும்.

        ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________ .

26) ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.   பிரிந்து-பிரித்த

27) உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

         கயல் விழி உணவு சமைத்தாள் ; உண்டவர் அமுது போன்ற சுவையில் நீந்தினர்

28) அகராதியில் காண்க.   அ.இயவை, ஆ.ந்தப்பேழை.

                                  பகுதி-3(மதிப்பெண்:18)     பிரிவு-1                                                   2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) ஏறுதழுவுதல் , திணை நிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

30) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

      குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மைசெய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்; சூரியவெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே.அதன் பொருளாகும். குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று . குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் ஆண்டாள். தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்கவைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.

அ. குளித்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?

ஆ.உடல் ஏன் வெப்பமடைகிறது?

இ.குளித்தலைப் பற்றி ஆண்டாள் கூறுவது யாது?                                                    

                                                                       பிரிவு-2                                                     2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32)காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

33'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

34)அ.ஒன்றறிவதுவே- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக   (அல்லது)

ஆ.சொல்லரும்- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

                                               

                                                                          பிரிவு-3                                                                    2X3=6                                                   

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:

               இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

               இன்மையே இன்னா .தது.

36)கைபிடி,கைப்பிடி –சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.

37)உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                      5X5=25

38)அ)இராவணகாவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க

                                                            (அல்லது)

ஆ)தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

39)அ.சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக்கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.  

(அல்லது)

ஆ.உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

40)அ)நயம் பாராட்டுக:-

         கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

                காடும் செடியும் கடந்துவந்தேன்;

         எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

                இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.            

         ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

                ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

         ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

                 ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.      

 (அல்லது)

ஆ) அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.

            Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”

41)சமூகத்திற்கு நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகளைப் பட்டியலிடுக.

42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                                  3X8=24

43)அ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .

(அல்லது)

   ஆ)நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

44)அ)இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க

(அல்லது)

    ஆ) ’தாய்மைக்கு வறட்சி இல்லை ’ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக

45)அ.நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக

(அல்லது)

    ஆ. "எனது பயணம்" என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.

வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை