முதல் திருப்புதல் தேர்வு-2023
இராணிப்பேட்டை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
இ.தூய
துறவி |
1 |
2.
|
அ.கைம்மாறு
கருதாமல் அறம் செய்வது |
1 |
3.
|
ஈ.மலேசியா |
1 |
4.
|
ஈ.இலா |
1 |
5.
|
ஈ.சிற்றூர் |
1 |
6.
|
இ.அருமை+துணை |
1 |
7.
|
அ.வனத்தின்
நடனம் |
1 |
8.
|
அ.அகவற்பா |
1 |
9.
|
இ.தன்மையணி |
1 |
10. |
இ.வலிமையை
நிலைநாட்டல் |
1 |
11.
|
இ.நேர் |
|
12. |
அ.நாலாயிரத்திவ்வியப்
பிரபந்தம் |
1 |
13. |
ஈஅ.குலசேகர
ஆழ்வார் |
1 |
14. |
ஆ.நீங்காத |
1 |
15. |
அ.விளித்தொடர் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
செய்யுளும்,உரைநடையும்
கலந்து எழுதப்பெறுவது. |
2 |
17 |
அ.எவை அரசனின்
ஆட்சிக்குத் துணைபுரிந்தன? ஆ.பாண்டியன்
எதைப் பார்த்து மலைத்து நின்றான்? |
2 |
18 |
இருபொருள்பட
உரைப்பது |
2 |
19 |
அருளைப்பெருக்கு!
அறிவைச் சீராக்கு! மயக்கம் அகற்று! |
2 |
20 |
வறுமையிலும்
கையில் பணம் கிடைத்தால் புத்தகங்களையே வாங்குவார் |
2 |
21 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ.வரும்+தாமரை-தாமரை வரும், வரும்+தா+மரை- தாவும் மான் வரும் வருந்தா+மரை-வருந்தாத மான் ஆ.பிள்+நாக்கு-பிளவுபட்ட நாக்கு |
2 |
23 |
ஒலி+த்+த்+உ ஒலி-பகுதி த்-சந்தி,த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச
விகுதி |
2 |
24 |
அ.காடு, ஆ.புதுமை |
2 |
25 |
முல்லைக்குரிய
பொருந்திய கருப்பொருள் 4 எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
26 |
அ.பெருங்காற்று ஆ.புற ஊதாக்கதிர்கள் |
2 |
27 |
முதல்நிலை,இடைநிலை,கடைநிலை |
2 |
28 |
கோள்களைப்
பற்றிப் புரிந்து கொண்டான். (கொள்(ண்)+ட்+ஆன்) |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, ஆந்திரத் தலைவர்கள் சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும்
என்று கருதினர். இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் இராஜாஜி தனது பதவியைத் துறந்தார்.அச்சமயத்தில்,செங்கல்வராயன்
தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும்
தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார். |
3 |
30 |
அ.போலச்செய்தல் ஆ.புரவி ஆட்டம்,புரவி
நாட்டியம் இ.பொய்க்கால் குதிரை ஆட்டம் |
3 |
31 |
தமிழர் பண்பாட்டில்
வாழைஇலைக்குத் தனித்தஇடமுண்டு. தலைவாழைஇலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம்
மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழைஇலையின் மருத்துவப் பயன்களை
அன்றேஅறிந்திருந்தனர். தமிழர்கள் உணவு பரிமாறும்
முறையைநன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழைஇலையின்
குறுகலானபகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்தபகுதியும் வரவேண்டும். ஏனென்றால்
வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு,
ஊறுகாய், இனிப்பு முதலானஅளவில் சிறிய உணவு
வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலானஅளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து,
அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன்
பரிமாறுவர். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü நன்னன் என்ற மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து
நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம்
நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும்
கொடுத்து உபசரிப்பார்கள் என்று
கூத்தராற்றுப்படை கூறுகிறது. |
3 |
|
33 |
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத்
தேடும் வழி அறியேன் ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
5
– திணை,பால்,இடம்,காலம்,மரபு |
3 |
36 |
வஞ்சப்புகழ்ச்சியணி-புகழ்வதுபோலப்
பழிப்பது,பழிப்பதுபோலப் புகழ்வது |
3 |
37 |
தேமா புளிமா
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
பிறப்பு. |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் (அல்லது) ஆ) ü பொருளைவிடச் சிறந்தது இவ்வுலகில்
இல்லை. ü முறையான வழியில் வந்த பொருள்
அறம்,இன்பம் இரண்டையும் தரும். ü இரக்கம்,அன்பு இல்லாதவர் பொருளை
நீக்கிவிட வேண்டும் ü கைப்பொருளைக்கொண்டு செயல்
செய்வது குன்றின்மேல் யானைப்போரைக் காண்பதைப் போன்றது. ü பொருள் பகைவரின் செருக்கை
அறுக்கும் ஆயுதம் ஆகும். |
5 |
39 |
ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü அங்க
அடையாளங்கள் என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்
சேர்க்கை விண்ணப்பப் படிவம் 1. மாணவரின் பெயர் :
க.எழிலரசி 2. பாலினம் :
பெண் 3. பிறந்த நாள் :
அ அ -அ அ – அ அ அ அ 4. தேசிய இனம் :இந்தியன் 5. இரத்த வகை :
O+ 6. உயரம் மற்றும் எடை :
172 செ.மீ/60 கி.கி 7. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : கம்பதாசன் 8. வீட்டு முகவரி :
18,வள்ளுவர் தெரு,
மதுரை 9. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210 10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு : பத்தாம் வகுப்பு 11. பள்ளியின் முகவரி :
அரசினர் மேனிலைப்பள்ளி, மதுரை-1 12. சேர விரும்பும் விளையாட்டு :
தடகள விளையாட்டு சேர்க்கை எண்: 1234 க.எழிலரசி மாணவரின் கையெழுத்து |
5 |
42 |
1.பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம் நிகழ்த்துதல் 2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல் 3. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம் நிகழ்த்துதல் 4. விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல். 5. விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல். ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக்
கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை
உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v தமிழ்மொழி
1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த
வேண்டும். மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய
வேண்டும் (அல்லது) ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி
இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த
இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார்.அந்த
வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச
தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில்
ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள் கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்
பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள்
திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். ”எவ்வளவு பொருத்தமான
பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா
தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். முடிவுரை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. (அல்லது) ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ)பொதுக்கட்டுரை: விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும் முன்னுரை: இந்தியாவில்
பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை
நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி
இக்கட்டுரையில் காண்போம். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு
பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி
ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும்
வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995
ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா
கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு
செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில்
இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது கடமை: அனைத்துக்
கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது
என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும்
மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல்
ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக
நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம்
அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் முடிவுரை: “வானை
அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும்.
இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும். (அல்லது) ஆ) தரப்பட்ட குறிப்புகள் அல்லது தலைப்புகள் ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு
,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |