இரண்டாம் திருப்புதல் தேர்வு-2023 வேலூர் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
ஆ.
இறைவனிடம் குலசேகராழ்வார் |
1 |
2.
|
அ.
கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
3.
|
ஆ.
நற்றிணை |
1 |
4.
|
ஆ.
சில நேரங்களில் சில மனிதர்கள் |
1 |
5.
|
அ.
வினைத்தொகை |
1 |
6.
|
இ.
ஐந்து |
1 |
7.
|
ஈ.
அங்கு வறுமை இல்லாததால் |
1 |
8.
|
அ.
கான் அடை - காட்டைச்சேர் |
1 |
9.
|
இ.
‘என் தங்கை வந்தாள்’ என்று பசுவைக் குறிப்பிடுவது. |
1 |
10. |
ஆ.
மணி வகை |
1 |
11.
|
ஈ.
சிலப்பதிகாரம் |
1 |
12. |
அ.
முல்லைப்பாட்டு |
1 |
13. |
இ.
உரிச்சொல் தொடர் |
1 |
14. |
அ.
பாடு இமிழ் , கோடு கொண்டு |
1 |
15. |
ஆ.
வளைஇ |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ. மொழிபெயர்ப்பு
எவ்வாறு மொழி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது? ஆ. உலகத்தமிழ்க்
கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்? |
2 |
17 |
செய்யுளும்,
உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது. |
2 |
18 |
|
2 |
19 |
ஜப்பானில் சாப்ட்வங்கி
உருவாக்கிய இயந்திரமனிதனேபெப்பர். இது உலகஅளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு,வணிகத்துக்கு, படிப்புக்கு
என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. இவை மனிதரின்
முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்துகொண்டு
அதற்கேற்பச் செயல்படுகின்றன. |
2 |
20 |
விடைக்கேற்ற
வினாவைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
21 |
அருமை உடைத்தென்
றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி
தரும். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு,
தெற்கு |
2 |
23 |
6 வகை – அறிவினா,அறியா
வினா, ஐய வினா, கொளல் வினா ,கொடை வினா , ஏவல் வினா |
2 |
24 |
அ. நாட்டுப்புற
இலக்கியம் , ஆ. சின்னம் |
2 |
25 |
அ.
அழகு பாழ் ஆ.
குப்பையிலே இ.
நூறு வயது ஈ.
சோற்றுக்கு ஒரு சோறு பதம் |
2 |
26 |
வெல்(ன்)
+ ற் + அ வெல்-பகுதி , ன் – விகாரம் ,ற்
– இறந்தகால இடைநிலை ,அ -பெயரெச்ச விகுதி |
2 |
27 |
செயற்கையைவிட
இயற்கையே சிறந்தது |
2 |
28 |
மரத்தின் , தன் , மணத்தை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, ஆந்திரத் தலைவர்கள் சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும்
என்று கருதினர். இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் இராஜாஜி தனது பதவியைத் துறந்தார்.அச்சமயத்தில்,செங்கல்வராயன்
தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும்
தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார். |
3 |
30 |
அ. மறைகாணி ஆ. இயந்திர மனிதன் இ. மடிக்கணினி |
3 |
31 |
அ. முன்பின் அறியாதவர் ஆ. விருந்தே
புதுமை இ. விருந்து |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
|
33 |
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத்
தேடும் வழி அறியேன் ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
எதிர்
நிரல்நிறைப் பொருள்கோள் |
3 |
36 |
கவிஞர் தன்குறிப்பை ஏற்றிக் கூறுவது |
3 |
37 |
புளிமாங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
மலர். |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
(அல்லது) ஆ) விடைக்கேற்ற வினாவைப்
பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
39 |
ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்
சேர்க்கை விண்ணப்பப் படிவம் 1. மாணவரின் பெயர் :
செ.மங்கை 2. பாலினம் :
பெண் 3. பிறந்த நாள் :
அ அ -அ அ – அ அ அ அ 4. தேசிய இனம் :இந்தியன் 5. இரத்த வகை :
O+ 6. உயரம் மற்றும் எடை :
172 செ.மீ/60 கி.கி 7. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : செல்வம் 8. வீட்டு முகவரி :
18,வள்ளுவர் தெரு,
மதுரை 9. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210 10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு : பத்தாம் வகுப்பு 11. பள்ளியின் முகவரி :
அரசினர் மேனிலைப்பள்ளி, மதுரை-1 12. சேர விரும்பும் விளையாட்டு :
பூப்பந்து விளையாட்டு செ.மங்கை
மாணவரின் கையெழுத்து |
5 |
42 |
அ) விடைக்கேற்ற
வினாவைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ) 1. Education is what
remains after one has forgotten what one has learned in school – Albert
Einstein ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன!
– ஆல்பிரட் ஐன்ஸ்டின் 2. Tomorrow is often the
busiest day of the week – Spanish proverb பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி 3. It is during our darkest
moment that we must focus to see the light – Aristotle இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில் 4. Success is not
final,failure is not fatal.It is the courage to continue that counts –
Winston Churchill வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற
செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது – வின்ஸ்டன் சர்ச்சில் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச்
சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக்
கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச்
சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக்
கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
ü
அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால.
கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü
கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü
வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü
மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். (அல்லது) ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின் பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ) முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த
இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர்
என்பதை இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய
மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு
தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.மூன்று தமிழ்ச்சங்கங்களும் கடல்கோளால் அழிந்து போயின. சிற்றிலக்கியங்கள்: 96
சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு
சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி
போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க
காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு
வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. (அல்லது) ஆ) தரப்பட்ட குறிப்புகள் அல்லது தலைப்புகள் ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு ,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |