சிறப்பு திருப்புதல் தேர்வு-1
,2023 இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
ஈ.
சருகும் சண்டும் |
1 |
2.
|
இ,நற்றிணை |
1 |
3.
|
ஆ.கீதாஞ்சலி
(கவிதாஞ்சலி எனத் தவறாகத் தரப்பட்டுள்ளது) |
1 |
4.
|
அ.ஜூன் 15 |
1 |
5.
|
அ.வணிகக்
கப்பல்களும் , ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
6.
|
ஆ.இறைவனிடம்
, குலசேகராழ்வார் |
1 |
7.
|
ஈ.
பரிபாடல் |
1 |
8.
|
இ.
அறியா வினா, சுட்டு விடை |
1 |
9.
|
அ.
வேற்றுமை உருபு |
1 |
10. |
இ.உம்மைத்
தொகை |
1 |
11.
|
ஆ.
3 |
1 |
12. |
ஆ.
பாண்டியன் |
1 |
13. |
இ.
விளித்தொடர் |
1 |
14. |
ஆ.நல்
+ கணக்கே |
1 |
15. |
அ.
தென்னன் , இன்னறு |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
செய்யுளும்,உரைநடையும்
கலந்து எழுதப்பெறுவது. |
2 |
17 |
இல்லை,விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற
எண்ணமே தேவை |
2 |
18 |
இயந்திரமனிதன்,
செயற்கைக்கோள் |
2 |
19 |
வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள் |
2 |
20 |
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக்கண்டால், இரப்பவரின் உள்ளத்தின்
உள்ளேமகிழ்ச்சி பொங்கும். |
2 |
21 |
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி
விடும். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
|
2 |
23 |
அறிவினா,அறியா
வினா,ஐய வினா,கொளல் வினா,கொடை வினா,ஏவல் வினா |
2 |
24 |
கிளர்+த்(ந்)+த்+அ கிளர்- பகுதி ,த்-சந்தி , ந்- விகாரம், த்-இறந்தகால
இடைநிலை ,அ- பெயரெச்ச விகுதி |
2 |
25 |
அழைப்புமணி
ஒலித்ததும், கயல்விழி கதவைத் திறந்தாள். |
2 |
26 |
அறியா
வினா,ஐய வினா |
2 |
27 |
மரபுச்சொல்
அல்லது தொடர்களில் சில காரணங்களுக்காக சரியென ஏற்றுக் கொள்வது. |
2 |
28 |
சின்னம்
, அறிவாளர் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளமாக இருந்தது. இ)
பிள்ளை- தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன். ஈ)
வடலி-பனைவடலியை விரும்பி வளர்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் பசுமையாக இருந்தது. |
3 |
30 |
# மறைகாணி
எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது. # செயற்கைக்
கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. # மருத்துவத்
துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. # வேளாண்மையில்
எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவியுள்ளது. |
3 |
31 |
அ.இராமாவதாரம் ஆ.கல்வியில் பெரியவர் கம்பர் , விருத்தம் எனும்
ஒண்பாவிற்கு உயர் கம்பன். இ. சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி , திருக்கை வழக்கம். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
|
33 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார். # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார். # அதுபோல,வித்துவக்கோட்டு அன்னையே,நீ எனக்கு
விளையாட்டாகத் துன்பங்கள் செய்தாலும்,உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார்
கூறுகிறார். |
3 |
|
34 |
அ. அருளைப் பெருக்கி
அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு
அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
தேமா புளிமா
புளிமா தேமாங்காய் கூவிளம் தேமா
பிறப்பு. |
3 |
36 |
ஆற்றுநீர்ப்
பொருள்கோள் – தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது. |
3 |
37 |
தீவகம்-
விளக்கு . ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல,
செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல்
அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி
எனப்பட்டது. |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 அ. |
மனோன்மணியம்
சுந்தரனாரின்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் விளக்கம்: ·
நிலமென்னும்
பெண்ணின் ஆடை நீர் சூழ்ந்த கடலாகும். முகம் பாரத கண்டம் ஆகும். ·
நெற்றிப்
பகுதியாக தக்காணப் பீடபூமி திகழ்கிறது. ·
அதில்
வைத்த பொட்டு போலத் தமிழகம் திகழ்கிறது. ·
தமிழ்த்தாய்
எல்லா திசைகளிலும் புகழ் பெற்று விளங்குகிறாள். உலகின் மூத்த மொழியாகவும், இளமையான
மொழியாகவும் வளமான மொழியாகவும் தமிழன்னை திகழ்கிறாள். பெருஞ்சித்திரனாரின் தமிழ்
வாழ்த்துப் பாடலின் விளக்கம்: ·
அன்னை
மொழியாக அழகாய் அமைந்து, பழமைக்குப் பழமையாய்த் திகழும் மொழி. ·
குமரிக்கண்டத்தில்
நிலைத்து நின்று, பாண்டிய மன்னனின் மகளாக திகழும் மொழி. ·
தமிழிலக்கியங்கள்
அனைத்தையும் தலையணிந்து விளங்கும் தமிழை வாழ்த்துகிறேன். ஒப்புமை: ·
இருபாடல்களிலும்
தமிழ்தாயாகவும் பழமையான மொழியாகவும் சிறப்பிக்கப்படுகிறது. ·
எல்லாத்திசைகளிலும்
புகழ்பெற்றது என்றும் இளமையானது என்றும் பொருள்பட அமைந்துள்ளது. ·
இரு
கவிஞர்களும் தமிழை பெண்,தாய்,மகன் என வெவ்வேறு வகையில் சிறப்பிக்கின்றனர். (அல்லது) ஆ) ü ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத்
தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்கவேண்டும். ü ஒழுக்கமாக வாழும் எல்லாரும்
மேன்மைஅடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளைஅடைவர். ü உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார், பல நூல்களைக்
கற்றாராயினும் அறிவு இல்லாதவரே(எனக் கருதப்படுவார்). ü எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத்
தோன்றினாலும் அந்தப் பொருளின்
உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும். |
5 |
39 |
வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில்
நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ
முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இதைப்போன்று வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க.இளவேந்தன், 86,மருத்துவர் நகர், சேலம்-2. (அல்லது) ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü அங்க
அடையாளங்கள் என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
அ.வினாவுக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ. மரியாதைக்குரியவர்களே.என் பெயர்
இளங்கோவன்.நான் பத்தாம்
வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று
சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம்
வகுத்தனர். தமிழர்களின்
பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத்
தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில்
மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும்
நன்றி. |
5 |
41 |
நூலக உறுப்பினர் படிவம் வேலூர்
மாவட்ட நூலக ஆணைக்குழு
உறுப்பினர் சேர்க்கை
அட்டை அட்டை எண்:
1962 உறுப்பினர் எண்: 62 1. பெயர் : த. மகாலட்சுமி 2. தந்தை பெயர் : தங்கராசு 3. பிறந்த நாள் : 01 – 09
- 2005 4. வயது : 14
5. படிப்பு : பத்தாம்
வகுப்பு 6. தொலைபேசி / அலைபேசி எண் : 6381568124 7. முகவரி : 62. அண்ணா நகர் (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) பாஸ்மார்பெண்டா
– 635810 நான் த. மகாலட்சுமி நூலகத்தில்
உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. 100/- சந்தா தொகை ரூ. 50/- ஆக மொத்தம் ரூ. 150/- செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். இடம்: பாஸ்மார்பெண்டா நாள்: 21 – 10 – 2019
தங்கள்
உண்மையுள்ள
த. மகாலட்சுமி திரு
/ திருமதி / செல்வி / செல்வன்
த. மகாலட்சுமி அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச்
சான்று அளிக்கிறேன். சிவ. ரவிகுமார் பிணையாளர்
கையொப்பம் அலுவலக
முத்திரை (பதவிமற்றும்
அலுவலகம்) |
5 |
42 |
பொருந்திய விடைகள் எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v தமிழ்மொழி
1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த
வேண்டும். மொழிபெயர்ப்பாளர் அந்தந்த
கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும் (அல்லது) ஆ) செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை முன்னுரை:
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாரதி கூறுவதை தமிழகம் செயல்படுத்தவேண்டும்
மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையை நாம் உணர வேண்டும். |
8 |
44 |
முன்னுரை: அ. கட்டுரை
அமைப்பில் சரியான விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக. ஆ. கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக்
கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி
எனும் குறும்புதினமாகும். புயல்: கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது
வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக
மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல்
அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை
தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள்
”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள்
சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர்
அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக
விளக்குகின்றன. |
8 |
45 |
அ) கட்டுரை
அமைப்பில் சரியான விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த
இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர்
என்பதை இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய
மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு
தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.மூன்று தமிழ்ச்சங்கங்களும் கடல்கோளால் அழிந்து போயின. சிற்றிலக்கியங்கள்: 96
சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு
சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி
போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க
காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு
வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
8 |