10 TH STD TAMIL -SPECIAL REVISION EXAM -2 QUESTION PAPER

மூன்றாம் திருப்புதல் தேர்வு - மாதிரி வினாத்தாள்

10.ஆம் வகுப்பு                    தமிழ்               நேரம்: 3 மணி நேரம்                   100 மதிப்பெண்கள்

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                          15X1=15                                                                               

1) நாடகக் கலையை மீட்பதே தமது குறிக்கோள் என்று கூறியவர்--------------

அ) ந. குப்புசாமி     ஆ) ந. முத்துசாமி   இ) மு.மேத்தா   ஈ) அவ்வை சண்முகம் 

2) ”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்மாலவன் குன்றமும் வேலவன்  குன்றமும் குறிப்பது முறையே

அ) திருப்பதியும், திருத்தணியும்  ஆ) திருத்தணியும், திருப்பதியும்                                              

இ) திருப்பதியும், திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும், பழனியும் 

3) மதுரையில் இருந்த அவையத்தைப் பற்றிக் குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி   ஆ) புறநானூறு  இ) திருவிளையாடற் புராணம்  ஈ) சிலப்பதிகாரம்

4) சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) அறிவியல் முன்னேற்றம்

இ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்   ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 

5) ’இவள் தலையில் எழுதியதோ  கற்காலம் தான் எப்போதும்’ -இதில் கற்காலம் என்பது

அ) தலைவிதி  ஆ) பழைய காலம் இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது 

6) வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்- இவ்வடி குறிப்பிடுவது

அ) காலம் மாறுவதை  ஆ) வீட்டைத் துடைப்பதை 

இ) இடையறாது அறப்பணி செய்தலை ஈ)வண்ணம் பூசுவதை

7) மலர்கள் தரையில் நழுவும்.எப்போது

அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால் இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால்

8) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்    ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள் 

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்   ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

9) இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------

அ) நாட்டை கைப்பற்றல்  ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்

10) ’காட்டைச் சேர்’ என்று பொருள் தருவது

அ) கால் நடை  ஆ) கான் நடை    இ) கான் அடை  ஈ) காநடை                                                                                              

11) வாய்மையே மழைநீராகி-  இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை  ஆ) தற்குறிப்பேற்றம்  இ) உருவகம்  ஈ) தீவகம்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

தாதுகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்

போதவிழ் பொய்கைதோறும் புதுமணற் றடங்கடோறும்

மாதவி வேலிப் பூகவனம்தொறும் வயல்கடோறும்

    ஓதியவுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே.

12) இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ) முல்லைப்பாட்டு  ஆ) நற்றிணை  இ) கம்பராமாயணம்   ஈ) மலைபடுகடாம்

13) மணற்றடங்கள் – பிரித்து எழுதுக

அ) மணல் + றடங்கள்  ஆ) மணல் + தடங்கள் இ) மணற் + றடங்கள்  ஈ) மணற் + தடங்கள்

14) தாது என்ற சொல்லின் பொருள்

அ) தடக்கை ஆ) மகரந்தம்  இ) வாசனை  ஈ) செலவு

15) இப்பாடலை இயற்றியவர் யார்?

அ) நப்பூதனார் ஆ) கம்பர் இ) பாண்டியன் ஈ) பாரதியார்

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                                      பிரிவு-1                                                              4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)

16) குறிப்பு வரைக:- அவையம்

17) வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம்  கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

18) கரம்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் எழுதுக

19) பிள்ளைத்தமிழ் என்றால் என்ன?

20) வறுமையின் காரணமாக உதவி கேட்டுவருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன ?

21) ’குற்றம்’ எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

                                                                    பிரிவு-2                                                             5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

23) கீழ்வரும்  தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப்பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

24) பதிந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

25) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக : மனக்கோட்டை

26) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.   ( தனிச் சொற்றொடராக மாற்றுக )

27) தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க

       காட்டு விலங்குகளைச்---தடை செய்யப்பட்டுள்ளது.செய்த தவறுகளைச் --திருத்த உதவுகிறது.                                                

       ( சுட்டல் , சுடுதல் )

28) கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க :  1.Artifacts  2.Myth

பகுதி-3(மதிப்பெண்:18)

                                                                        பிரிவு-1                                                             2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

30) ஜெயகாந்தன் இயற்றிய புதினங்களைப் பட்டியலிடுக.

31) பின்வரும் உரைப்பத்தியை படித்து வினாக்களுக்கு விடை தருக.

        பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன.புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக(வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1.பத்தியில்உள்ளஅடுக்குத்தொடர்களைஎடுத்துஎழுதுக.                                                                    

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?                                                                                              

3. பெய்த மழை- இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

                                                  பிரிவு-2                                                          2X3=6                                                 

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடியநயத்தை விளக்குக.

33) முதல்மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

34) அ) ”தண்டலை”…. எனத்தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிமாறாமல் எழுதுக.

(அல்லது)

   ஆ) “தூசும்”…….. எனத்தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை அடிமாறாமல் எழுதுக.

                                                                             பிரிவு-3                            2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35) அலகிட்டு வாய்பாடு எழுதுக:

         அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

         பண்பும் பயனும் அது

36)  ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

37) நிரல் நிரை அணியைச் சான்றுடன் விளக்குக.

பகுதி-4 (மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                        5X5=25                                                 

38) அ) மெய்க்கீர்த்தி பாடலில் இடம்பெற்ற நயங்களை விளக்குக.

(அல்லது)

 ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு  வீரமாமுனிவர்தம்  பூக்கள் போன்ற உவமைகளலும், உருவக மலர்களாலும்  நிகழ்த்திய  கவிதாஞ்சலியை விவரிக்க.

39) அ) உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.

(அல்லது)

    ஆ) பல்பொருள் அங்காடி ஒன்றில் காலாவதியான உணவுப்பொருள் விற்கப்பட்டது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குப் புகார்க் கடிதம் எழுதுக.

40) அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.

(அல்லது)

ஆ)மொழி பெயர்க்க:

       Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

 

41) ராணிப்பேட்டை மாவட்டம், தென்றல் நகர், தமிழன்னை வீதி, 62 ஆம் இலக்க வீட்டில், ஆற்காடு நகரில் குடியிருக்கும் பாண்டியன் மகன் இனியன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை தேர்வராகக் கருதி கொடுக்கப்பட்ட சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                            3X8=24

43) அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கானஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

(அல்லது)

 ஆ) நாட்டு விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின்  முன்னேற்றத்தில் மாணவர் பங்கு- குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாட்டுப்பற்று என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

44) அ) அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்என்னும் சிறுகதையில்  மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக

(அல்லது)

  ஆ)”பாய்ச்சல்” சிறுகதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கி எழுதுக.

45) அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

   முன்னுரை-அரசுப்பொருட்காட்சி-அரங்குகள்–துறை விளக்கம்-விளையாட்டுகள்-தின்பண்டங்கள்- முடிவுரை

(அல்லது)

   ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

   முன்னுரை- நீர்மாசு – நில மாசு – காற்று மாசு – கழிவுநீர் சுத்திகரிப்பு - விழிப்புணர்வைத் தருவோம் - முடிவுரை

 

மேல்நிலை வகுப்புசேர்க்கை விண்ணப்பப் படிவம்

 

சேர்க்கை எண்: --------                    நாள்: ----------                 வகுப்பும் பிரிவும்: -----------------

    

1.    மாணவரின் பெயர்                                            :      

2.   பிறந்த நாள்                                                     :      

3.   தேசிய இனம்                                                  :      

4.   பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                            :      

5.   வீட்டு முகவரி                                                  :      

6.   இறுதியாகப் படித்த வகுப்பு                                  :      

7.   பயின்ற மொழி                                                  :      

8.   இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி                   :      

 

9.   பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்                  :      

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

 

 

தமிழ்

 

ஆங்கிலம்

 

கணிதம்

 

அறிவியல்

 

சமூக அறிவியல்

 

மொத்தம்

 

 

9.   மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?                    :    

10.  தாய்மொழி                                                              :    

11.   சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்                  :    

 

மாணவர் கையெழுத்து

 

 PDF வடிவில் பதிவிறக்க 👇👇 


 

 

 

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை