8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 19-06-2023 முதல் 24-06-2023
மாதம் : ஜூன்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : கற்கண்டு (எழுத்துகளின் பிறப்பு)
1.கற்றல் நோக்கங்கள் :
@ சொற்களின் பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் ஒலித்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
@ தொல் பழங்காலத்திலேயே ,எவ்வித அறிவியல் கருவியும் இல்லாத காலத்திலேயே,எழுத்துகள் எந்த உறுப்பில் இருந்து பிறக்கின்றன என்று ஒரு அறிஞர் கண்டறிந்துள்ளார்.
மேற்கண்ட கருத்தைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன. •
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. •
உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன
க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தி ன் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ட், ண் - ஆகிய இருமெய்களும் நா வின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø எழுத்துகளின் பிறப்பைப் படிப்படியாக விளக்குதல்
Ø எழுத்துகள் தோன்றுமிடங்களையும்,பிறக்குமிடங்களையும் எளிதாக விளக்குதல்
கருத்துரு வரைபடம்
மாணவர் செயல்பாடு:
Ø மாணவர்கள் எழுத்துகளின் பிறப்பு எவ்வாறு நிகழ்கிறது என உணர்தல்.
Ø இடப்பிறப்பைப் பற்றி அறிதல்
@ முயற்சிப் பிறப்பைப் பற்றி அறிதல்
@ எழுத்துகள் பிறக்கும் இடங்களை எழுத்துகளைச் சரியாக உச்சரித்துப்பார்த்து அறிதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
இடை நா இடையண்ணம் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் யாவை?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 809 - படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
@ 816 - மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது
பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை
நயத்தைப் புரிந்துகொள்ளுதல்.)
திறன்கள்:
@ படித்தல்,பேசுதல்
8.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇