அடிப்படைத்திறன்கள் மேம்பாடு
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலும் அடிப்படைத் திறன்கள் (எழுதுதல் , படித்தல்) குறைபாடுடைய மாணவர்கள் இனங்கானப்பட்டு, அவர்களுக்குத் தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு, தனி பாடவேளைகள் வகுக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு ,சிறப்புப் பயிற்சி அளித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையானது சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அவற்றை ஆசிரியர்கள் கடைபிடிக்க அறிவுறித்தியுள்ளது. அதற்கான தனி பதிவேட்டையும் பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்பதிவில் அவ்வழிகாட்டு நெறிமுறைகளையும் , பராமரிக்க வேண்டிய மாதிரி பதிவேட்டையும் வழங்கியுள்ளோம். ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
வழிகாட்டு நெறிமுறைகள் :
1) தமிழ் வாசிப்பு திறன், ஆங்கில வாசிப்பு திறன், மற்றும் கணித அடிப்படைச் செயல்களில் பின்தங்கியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் சமர்ப்பிக்கப்பட்டு,தலைமை ஆசிரியர் சார்ந்த ஆசிரியர்கள் என தேவையான நகல்கள் தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி அளவில் ஒவ்வொரு ஆசிரயரும் தனியாக பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
2) தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித அடிப்படை செயல்களில் ஜூன் மாதம் ஜூலை மாதம் ஆகஸ்ட் மாதம் என ஒவ்வொரு மாத இறுதியில் மாணவர்களுடைய முன்னேற்ற அறிக்கை ஆசிரியர்கள் மாணவர்களை சோதித்து அறிந்து அறிக்கை எழுதி தினந்தோறும் நடைமுறையில் வைத்திருக்க வேண்டும். ஆய்வு அலுவலர்கள் பார்வையின் போதும் ஆய்வின் போதும் முன்னிலைப்படுத்த வேண்டும்.
3) தமிழ் வாசிக்கவும் எழுதவும் சுலபமான வழிமுறைகளை தங்கள் அனுபவத்தின்/பிற ஆசிரியர்கள்பின்பற்றும் வழிமுறைகளின் படியும், இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள தமிழ் வாசிப்புப் பயிற்சி கையேடு வழிகாட்டுதலின் படியும் தினந்தோறும் பயிற்சி வழங்க வேண்டிய பயிற்சி கட்டகம் தயார் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்துகள்,உயிர் குறில்,உயிர் நெடில்,வல்லினம், மெல்லினம், இடையினம் எழுத்துகள், ஓரெழுத்து,ஈரெழுத்து,மூன்றெழுத் து,நான்கெழுத்து வார்த்தைகள், இரு சொல் தொடர், மூன்று சொல் தொடர், நான்கு சொல் தொடர் போன்றவை தயாரித்து பயிற்சி அளித்தல்.
4) (ல,ழ,ள ) (ண,ந,ன) (ர,ற) உச்சரிக்க பயிற்சி வழங்கி வார்த்தைகளுடன் பயிற்சி அளித்தல்
5) எழுத்துக்களை வழங்கி எழுத்துக்களை சேர்த்து வார்த்தைகளை உருவாக்க பயிற்சி அளித்தல்
6) சொல் எதிர்ச்சொல் மற்றும் குறுக்கெழுத்து பயிற்சி அளித்தல்
7) நாட்கள் மாதங்கள் மற்றும் எண்ணின் பெயர்கள் பயிற்சி அளித்தல்
8) பணி நிலைகள்(Occupation),காய்கறி வகைகள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள், பழங்கள் புவி அமைப்புகள்,நாட்கள், மாதங்கள் மற்றும் பாடங்கள்,பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள்போன்றவைகளை பயிற்சி அளித்தல்
9) பொருளைக் காட்டி வார்த்தைகளைச் சொல்ல பயிற்சி அளித்தல்
10) வாரம் ஒரு முறை மாணவர்களின் அடிப்படை திறன்களை சோதித்தறிதல்
11) அடிப்படைத் திறன்களில் உள்ள மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
12) தொடர்ந்து அனைத்து பாடப்பிரிவுகளும் ஒரு ஆசிரியருக்கு நாற்பத்தி ஐந்து நிமிடம் என்று ஒதுக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
13) அடிப்படைத் திறன்களில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ஒரு ஆசிரியருக்கு 15லிருந்து 20 ஒதுக்கப்பட வேண்டும்.(மாணவரின் எண்ணிக்கைக் கேற்ப ஒதுக்கப்பட வேண்டும்)
14) தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் நேரடி கண்காணிப்பில் அனைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
15) அவ்வப்போது தலைமை ஆசிரியர் வாசிப்பு திறனில் பின் தங்கியுள்ள மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று சோதித்து அறிய வேண்டும்
16) தேவையான கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
17) வாசிப்பு திறனில் பின்தங்கியுள்ள மாணவர்களை தொடர்ந்து பயிற்சி அளித்து ஊக்குவித்து பாராட்டி தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும்
18) அடிப்படைத் திறன்களில் பின் தங்கியுள்ள மாணவர்களை மேம்படுத்துவது ஒரு கூட்டு முயற்சியாக பள்ளிகளில் முன்னெடுக்க வேண்டும்
19) மாத இறுதியில் வாசிப்பதில் முழுமை பெற்ற மாணவர்கள் மற்றும் அடிப்படைத்திறன்களில் மேம்பட்ட மாணவர்களை சிறப்பு வகுப்பில் இருந்து விடுவித்து வழக்கமான வகுப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும்
20) அடிப்படைத் திறன்களில் பின்தங்கியுள்ள உள்ள மாணவர்களுக்கு வழக்கமான தேர்வுகளில் இருந்து விலக்களித்து அடிப்படை திறன்களில் சோதித்து மதிப்பெண் அளிக்க வேண்டும்.
21) *ஒவ்வொரு நிலையிலும் வாசிப்பு பயிற்சியோடு எழுத்து பயிற்சியும் (எழுத்து வரி வடிவம்) கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும்*
தமிழ் பாடத்திற்கான மாதிரி பதிவேட்டினைப் பதிவிறக்க 👇