சுதந்திர தின விழா 2023
தமிழ்நாடு அளவிலான கட்டுரைப்போட்டி
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் அருமை மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 ஆம் நாளைச் சுதந்திரதினமாக நமது இந்தியத் திருநாடு கொண்டாடி வருகிறது. இந்திய சுதந்திரத்துக்காக எத்தனையோ செயல் வீரர்கள் தங்கள் இன்னுயிரையும், குருதியையும் தந்து தெய்வநிலை எய்தினர். அவர்களது தியாகங்களை நினைவு கூர்ந்து ,மாணவர்கள் தங்கள் நாட்டுப்பற்றுணர்வை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். அதற்கு வலுசேர்க்கும் வகையில் , தமிழ்ப்பொழில் வலைதளம் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
போட்டி குறித்த விவரங்கள்:
- சுதந்திர தினக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி இலவசம்.
- ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் பங்கு பெறலாம்.
- 6-8 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 3 பக்கங்களும்,
- 9-10 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 5 பக்கங்களும்,
- 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 7 பக்கங்களும் A4 தாளின் SINGLE SIDE மட்டும் எழுதி SCAN செய்து PDF வடிவில் அனுப்பவும்.
- கண்டிப்பாக மாணவர்கள் தங்கள் சொந்த கையெழுத்தில் மட்டுமே கட்டுரையை எழுதி SCAN செய்து அனுப்ப வேண்டும்.
முதல் மூன்று சிறந்த கட்டுரைகளுக்கு முறையே தலா 500 ரூபாய், 300 ரூபாய், 200 ரூபாய் பரிசாக வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றதற்கான இலவச மின்சான்றிதழ் அவரவர் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
(அந்தந்த வகுப்பு மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மட்டுமே கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் தங்களது கட்டுரை ,போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
கட்டுரையை அனுப்ப வேண்டிய நாட்கள்:
👉 வகுப்பு 6 முதல் 8 : 11-08-2023 (காலை 6 முதல் இரவு 10 வரை)
👉 வகுப்பு 9 முதல் 10 : 12-08-2023 (காலை 6 முதல் இரவு 10 வரை)
👉 வகுப்பு 11 முதல் 12 : 13-08-2023 (காலை 6 முதல் இரவு 10 வரை)
கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு:
👉 வகுப்பு 6 முதல் 8 : நாடும் மொழியும் நமதிரு கண்கள்
👉 வகுப்பு 9 முதல் 10 : சுதந்திரப்போராட்டத்தில் தமிழரின் பங்கு
👉 வகுப்பு 11 முதல் 12 : ஊடகப் பயன்பாட்டில் பெண்கள் சுதந்திரம்
கட்டுரையை அனுப்பும் முறை:
கட்டுரையைப் பதிவேற்றம் செய்வதற்கான இணைப்பு அந்தந்த வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட நாளில் பதிவு செய்யப்படும்.
6 முதல் 8.ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்வதற்கான இணைப்பு👇
9 மற்றும் 10.ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்வதற்கான இணைப்பு👇
சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கட்டுரையை எழுதியவர்களுக்கான பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும். கட்டுரையின் முகப்புத் தாளில் மாணவர்கள் அவர்களது பெயர்,வகுப்பு,பிரிவு,பள்ளி,ஊரின் பெயர் மற்றும் அலைபேசி எண் போன்ற முழு விவரங்களையும் எழுத வேண்டும் ( எழுதாதவர்களுடைய கட்டுரை நிராகரிக்கப்படும்)
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று கட்டுரைகள் மற்றும் அதை எழுதியவர்களின் பெயர் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும்.
மேலும் உடனடித் தகவல்களுக்கு தமிழ்ப்பொழில் புலனத்தில் இணைக👇