10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON AUGUST 3 RD WEEK


    10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 14-09-2022 முதல் 18-09-2022        

மாதம்         ஆகஸ்டு 

வாரம்     :   இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. பன்முகக் கலைஞர்

                                            2. பூத்தொடுத்தல்

                                            3.முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்              

1.கற்றல் நோக்கங்கள்   :

     கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த ஆளுமை ஒருவரைப்பற்றி அறிவதன் வாயிலாகச் சமூகத்திற்குத் தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்க முன்வருதல்

    எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறம றிந்து தானே கற்றல்.

    கவிநயம் நனிசொட்டச்  சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன், அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர் ந்து படித்தல், படைத்தல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  கலைஞர் என்று அழைக்கப்படுபவர் யார்? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

      # சில ஹைக்கூ கவிதைகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

      # பிள்ளைத்தமிழ் என்றால் என்ன? என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

    #  நாடகக் கலைஞர், திரைக்கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ்க் கலைஞர், கவிதைக் கலைஞர், செம்மொழிக் கலைஞர்

     #  பூத்தொடுப்போரின் வாழ்வியலின் இயல்பை அறிந்து கொள்ளுதல்

     #   சிற்றிலக்கியங்களின் தன்மையை அறிதல்

     # வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசாமியைப் பாட்ட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழின் கருத்துகளை அறிதல்

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø கலைஞரின் பன்முகத் திறமைகளைத் தெளிவுற விளக்குதல்

       Ø  இலக்கணக்குறிப்பை எளிமையாக விளக்குதல்

       Ø  பகுபத உறுப்பிலக்கணத்தை ஒவ்வொரு படிநிலையாக விளக்குதல்

       #  சிற்றிலக்கியச் சுவையை மாணவர்களை உணரச்செய்தல்.

6.கருத்துரு வரைபடம்:

பன்முகக் கலைஞர்

பூத்தொடுத்தல்




முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்

7.மாணவர் செயல்பாடு:

      Ø  சிற்றிலக்கியச் சுவை அறிதல்
     Ø நூல்வெளி பகுதியில் உள்ள முக்கியக் கருத்துகளை அறிதல்
     Ø  இலக்கணக்குறிப்பை அறிதல்
     Ø  பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையைப் பற்றி அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. கலைஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
2. பராசக்தி என்ற திரைப்படத்திற்குக் கதைவசனம் இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. கலைஞரின் பன்முக ஆற்றல்கள் யாவை
2.பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1..பூத்தொடுத்தல் என்ற கவிதை உணர்த்தும் நீதி யாது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

        1027 - தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மை யறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச்செய்யவும் தங்களின் பங்களிப்பை நல்குதல்.

    1028- எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.

    1029- கவிநயம் நனிசொட்டச்  சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன்அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்.


       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை