10 TH STD QUARTERLY TAMIL QUESTION PAPER & ANSWER KEY RANIPET DIST(2023-2024)

காலாண்டுப்பொதுத் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇👇

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

அ. வணிகக் கப்பல்களும்,ஐம்பெருங்காப்பியங்களும்

1

2.    

இ. கல்வி

1

3.     

ஈ. இலா

1

4.     

ஈ. வானத்தையும் ,பேரொலியையும்

1

5.    

இ. அன்மொழித்தொகை

1

6.    

ஆ. தளரப்பிணைத்தால்

1

7.     

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

8.    

ஆ. மணி வகை

1

9.    

ஈ. பாடல், கேட்டவர்

1

10.   

ஈ. சிற்றூர்

1

11.    

அ. அருமை+ துணை

1

12.  

இ. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

1

13.  

ஆ. குலசேகர ஆழ்வார்

1

14.  

அ. தீராத

1

15.  

அ. இறைவன்

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

செய்யுளும் உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது.

2

17

அ. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரமே எந்நூலில் அமைந்துள்ளது?

ஆ.சிந்துக்குத் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

2

18

தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

2

19

அருளைப் பெருக்கு, அறிவைச்சீராக்கு, மருளை அகற்று

2

20

  கம்பர், இராமனது வரலாற்றைத்தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப்பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது ஆறு காண்டங்களைஉடையது.

2

21

பல்லார்   பகைகொளலின்   பத்தடுத்த தீமைத்தே

நல்லார்  தொடர்கை  விடல்

 

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

விடை: அ)வேங்கை          தனிமொழி          விலங்கு,

        ஆ)”வேம்+கை”           தொடர் மொழி          கை        பொதுமொழி

2

23

கிளர்+த்(ந்)+த்+அ 

கிளர்- பகுதி , த்- சந்தி ,ந் – விகாரம் , த்- இறந்தகால இடை நிலை ,

அ- பெயரெச்ச விகுதி

2

24

6 வகை – அறி, அறியா, ஐய, கொளல், கொடை ,ஏவல்

2

25

”முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்கவேண்டும்” என்பதை, ’மோப்பக் குழையும் அனிச்சம்’ என்ற குறளில்  எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.

2

26

அ. நாட்டுப்புற இலக்கியம்

ஆ. கலந்துரையாடல்

2

27

ஒன்றுக்கு மேற்பட்ட முறை அடுக்கி வருவது. பிரித்தால் பொருள் தருவது.

2

28

அ. உப்பிட்டவரை உள்ளளவும் நினை

ஆ. விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்கு

 

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

:கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

 மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

 பாடினேன் தாலாட்டு -வினைமுற்றுத்தொடர்

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர்

3

30

அ. ஒருமொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளிடிடுவது

ஆ. செண்ரிடுவீர் எட்டுத்திக்கும், செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

இ. எல்லா காலகட்டத்திற்கும்

3

31

அ) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

 ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

 

3

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3

33

 

  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல்,  விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

3

34

 

அ.

தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத்தேம்பிழி மகரயாழின்

    வண்டுக ளினிது பாட மருதம்வீற்றிருக்கு மாதோ

ஆ.

சிறுதாம்பு தொடுத்த பசலைக்கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

    இன்னேவருகுவர், தாயர்” என்போள்

    நன்னர் நன்மொழி கேட்டனம்

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

புளிமாங்காய்  தேமாங்காய்  கூவிளம்  தேமா

புளிமா  புளிமா   மலர்.

3

36

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

 

3

37

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

(அல்லது)

ஆ)

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

 

5

39

அ.

அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

    வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                     இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

அ.எழில்வேந்தன்.

இடம்:அரக்கோணம்,

நாள்:08-01-2022.

உறைமேல் முகவரி:

          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

(அல்லது)

ஆ) நூலின் தலைப்பு:

                    பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                    சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                    நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                    பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                    விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                    சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                    ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                    வீரமாமுனிவர்.

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42 அ

1.      தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.     குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.     உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.     நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.     வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.      

5

 

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 

அ)

   தமிழ்ச்சொல் வளம்:

v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v திராவிட மொழிகளில் மூத்தது.

v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v தமிழ்மொழி 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது.

v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப

தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்

(அல்லது)

ஆ. வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

8

44

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார்.அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யாஅருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

               சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்.

முடிவுரை:

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

 (அல்லது)

ஆ)  மொழி நடை , பிழையின்மை , கருத்துச் செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

8

45

அ) முன்னுரை :

    எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

          மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

          பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

          அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

          வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

          சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

 (அல்லது)

பொதுக்கட்டுரை: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

            1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். 

நமது கடமை:

            அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

         “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

 

8

 

 விடைக்குறிப்பை PDF வடிவில் பதிவிறக்க👇



 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை