இணையவழி காலாண்டு திருப்புதல் தேர்வு
10.ஆம் வகுப்பு-தமிழ்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். தமிழகப் பள்ளிகளில் வருகின்ற 19-9- 2023 முதல் 6 முதல் 10 வகுப்புகளுக்குக் காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு தேர்வுக்குரிய பாடப் பகுதிகள் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு திருப்புதல் நடைபெற்று வருகின்றது. காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பாக தயாராகும் வகையில், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான இணைய வழி வினாடி வினா ஒன்று தமிழ்ப்பொழில் வலைதளத்தில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு 1 முதல் 6 இயல்கள் காலாண்டு தேர்வுக்குரிய பாடப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஆறு இயல்களில் இருந்தும் இரண்டு தொகுப்புகளாக இரண்டு வினாடி வினா இணைப்புகள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டையும் முடித்து இரண்டு தேர்விலும் 70 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவச பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
வினாடி வினா இணைப்புகள்👇👇
வினாடி வினா-1👇
வினாடி வினா-2👇