8 TH STD TAMIL UNIT 2 QUESTION & ANSWER

 

8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

இயல் - 2

ஓடை  (பக்க எண்: 26  மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

அ) பயிலுதல்  ஆ) பார்த்தல்  இ) கேட்டல்  ஈ) பாடுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.

அ) கடல்   ஆ) ஓடை   இ) குளம்   ஈ) கிணறு

3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) நன் + செய்  ஆ) நன்று + செய்  இ) நன்மை+ செய்   ஈ) நல் + செய்

4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

அ) நீளு + உழைப்பு ஆ) நீண்+ உழைப்பு   இ) நீள் + அழைப்பு   ஈ) நீள் + உழைப்பு

5. சீருக்கு + ஏற்ப– என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

அ) சீருக்குஏற்ப  ஆ) சீருக்கேற்ப   இ) சீர்க்கேற்ப   ஈ) சீருகேற்ப

6. ஓடை+ ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) ஓடைஆட  ஆ) ஓடையாட   இ) ஓடையா ஈ) ஓடைவாட

குறுவினா

1. ஓடைஎவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

விடை : ஓடை கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்

2. ஓடைஎழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

விடை: ஓடைஎழுப்பும் ஒலிக்கு வள்ளைப்பாட்டின் இசையை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்

சிறுவினா

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

விடை :

   * நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செயகிறது.

* விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும்

புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

* நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெடகப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிந்தனை வினா

வள்ளைப்பாட்டு என்பது நெல் குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?

விடை:

குழந்தையை உறங்க வைக்கப்பாடப்படுவது - தாலாட்டுப் பாடல்

சிறுவர்கள் விளையாடும் போது பாடுவது - விளையாட்டுப் பாடல்

திருமணத்தின் போது பாடுவது - திருமணப் பாடல்

களையெடுக்கும் போது பாடுவது - களையெடுப்புப் பாடல்

கதிர் அறுக்கும் போது பாடுவது - கதிரறுப்புப் பாடல்

பூத்தொடுப்போர், பூப்பறிப்போர் பாடுவது - திருப்பூவல்லி

தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது - திருச்சாழல்

இறத்தவர்களுக்காகப் பாடுவது - ஒப்பாரிப் பாடல்

பயணம் செய்யும் போது பாடுவது - தெம்மாங்குப் பாடல்

எண்ணிக்கையுடன் பாடுவது - ஏற்றப்பாட்டு இராவண்டை

இரவில் வரும் நிலவை ஆண்பாலாகப் பாலித்துப் பெண்கள் பாடும் பாட்டு - இராவண்டை

ஆண்கள் மட்டும் அடிக்கும் கும்மி பாட்டு - ஒயிற்கும்மிப் பாடல்

பெண்கள் இணைந்து கும்மி அடித்துப் பாடுவது - கும்மிப்பாடல

மீனவர்கள் பாடுவது - அம்பா பாடல்

கோயில் விழாக்களில் பாடுவது வில்லுப்பாடல்

குறவர் பாடுவறு குறத்திப்பாடல்.

கோணக்காத்துப் பாட்டு  (பக்க எண்: 29  மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் கரு _____ தோன்றினால் மழைபொழியும் என்பர்.

அ) முகில்   ஆ) துகில்   இ) வெயில்   ஈ) கயல்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகிதஉணவும் _____யும் ஓட்டிவிடும்.

அ) பாலனை  ஆ) காலனை  இ) ஆற்றலை   ஈ) நலத்தை

3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) விழுந்த+ அங்கே ஆ) விழுந்த+ ஆங்கே  இ) விழுந்தது + அங்கே  ஈ) விழுந்தது + ஆங்கே

4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) செ+ திறந்த  ஆ) செத்து + திறந்த  இ) செ+ இறந்த  ஈ) செத்து + இறந்த

5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பருத்திஎல்லாம்  ஆ) பருத்தியெல்லாம்   இ) பருத்தெல்லாம்  ஈ) பருத்திதெல்லாம்

குறுவினா

1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

விடை : பெருமழையும், சுழல்காற்றும்.

2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்டஅழிவு யாது?

விடை: புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் மரங்கள் யாவும் விழுந்தன.

3. கொல்லிமலைபற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

விடை: கொல்லிமலையில் சித்தர்கள் வாழ்ந்ததாகப் பாடல் கூறுகிறது.

சிறுவினா

1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்டநிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

விடை: வாங்கல் என்றும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயிள, தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்டபாதிப்புகள் யாவை?

விடை: திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின்கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன

சிந்தனைவினா

இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

v  எரிமலை வெடிக்கும் சூழலில், மலைக்கு அருகில் வசிப்போர், பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்குதல் வேண்டும்.

v  காட்டுத் தீ ஏற்படும் குழலில், காட்டிற்கு அருகில் வசிப்போர் நகர்ப்புறத்தில் வந்து தங்குதல் வேண்டும்

v  கனாமி ஏற்படும் போது கடற்கரையில் வசிப்போர். கடலை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று தங்குதல் வேளர்டும்.

v  நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், கட்டடத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் தங்குதல் வேண்டும்.

நிலம் பொது (பக்க எண்: 33  மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத்_____ மதிக்கின்றனர்.

அ) தாயாக  ஆ) தந்தையாக  இ) தெய்வமாக  ஈ) தூய்மையாக

2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) இன் + ஓசை  ஆ) இனி + ஓசை   இ) இனிமை+ ஓசை  ஈ) இன் + னோசை

3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பால்ஊறும்  ஆ) பாலூறும்  இ) பால்லூறும்  ஈ) பாஊறும்

தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை- நன்மை தரும் காட்டை மனிதன் அழிப்பது வேடிக்கையாக உள்ளது

2. உடன்பிறந்தார் – நாட்டு மக்கள் அனைவரும் உடன்பிறந்தார் போன்றவராவர்.

குறுவினா

1. விலைகொடுத்து வாங்கஇயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

விடை: விலைகொடுத்து வாங்கஇயலாதவை எனச் சியாட்டல் கூறுவன  வானம் , காற்றின் தூய்மை , நீரின் உயர்வு ஆகியவை ஆகும்.

2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

விடை : இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுக்குப் புனிதமாகும். இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்குத் தாயாகும்.அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள் அந்த மண்ணும் அவர்களுக்குரியதாகும்.

3.எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

விடை: செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும், தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகிவருவதையும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

சிறுவினா.

1. நிர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுது

விடை:   ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.இந்த நீரின் முனுமுனுப்புகள் எம்பாட்டன்மார்களின் குரல்களேயாகும். இந்த ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள், இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.

2. எவையெல்லாம் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தவைஎன்று சியாட்டல் கூறுகிறார்?

விடை:

ü  இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.

ü  மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.

ü  மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.

நெடுவினா

தாய்மண்மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத்  தொகுத்து எழுதுக.

விடை:

v  இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். எமது மக்கள். இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும்.

v  நாங்கள் இந்த மணிணுக்கு உரியமகள் இந்த மல்னும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க மதிப்பது என்பது மிகவும் இயலாத ஒன்றாகும். நாங்கள் பூமியைத் தாயாகயும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.

v  எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லித்தரவேண்டும். அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.

v  இப்பூமியின் மீது எது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீறு வந்து விழுவனலை யாகும். மேலும், இப்பூமியின் மீறு மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.

v  நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்.முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். I நிலத்தை தேசியுங்கள். இயற்கை நம் எல்லோரையும் தேசிப்பது போல என்று சியாட்டல் கூறுகின்றார்.

சிந்தனைவினா

நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?.

விடை:

ü  சில மட்கும் தன்மை உடையவை மட்காத தன்மை உடையவை. மட்காதப் பொருட்கள் குழி தோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்திகழ்வு நிலச் சிக்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்தல், அவசியம்.

ü  நாளும் பெருகி வரும் தொழிற்சலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் அழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிக்கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.

ü  அதனால் அவைகளை நிலத்தில் கலக்கதவன்னம் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிபினைச் சுத்திலிக்கும்போது திடக்கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன, அவைகளை முறையாக அப்புறப்படுத்தினால் நிலவனத்தைக் காப்பாற்றலாம்.

வெட்டுக்கிளியும் சருகுமானும். (பக்க எண்: 36  மதிப்பீடு)

வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக

வெட்டுக்கிளியும் சருகுமானும் :

       குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.  ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு சருகுமான், 'காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது.

  விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்:

     கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு  பக்கத்தில் பார்ப்பது இதுதாள் முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.

உயிர்பிழைத்த கூரன் :

     கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம், அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நகக்கிவிடுவேன்' என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.

வெட்டுக்கிளியின் பயம்

    அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.

 கற்பவை கற்றபின்

1. ஒரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.

    1) பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர்.

   2) “கனமான பொருளைத் தூக்காதே, வை" என்று தாய் மகனிடம் கூறினார்.

   3) கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்

   4)தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.

   5) "நீ எங்கே சென்றாய்?" என்று சீதா ராணியிடம் கேட்டாள்.

வினைமுற்று (பக்க எண்: 39  மதிப்பீடு)

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாடு வயலில் புல்லைமேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.

அ) மாடு  ஆ) வயல்  இ) புல்  ஈ) மேய்ந்தது

2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.

அ) படித்தான்  ஆ) நடக்கிறான்  இ) உண்பான்   ஈ) ஓடாது

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

அ) செல்க  ஆ) ஓடு   இ) வாழ்க  ஈ) வாழிய

சிறுவினா

1. வினைமுற்று என்றால் என்ன?

விடை : பொருள் முற்றுப் பெற்றவினைச்சொற்களைமுற்றுவினைஅல்லது வினைமுற்று என்பர்.

2. தெரிநிலைவினைமுற்று எவற்றைக் காட்டும்?

விடை:  ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவைஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலைவினைமுற்று எனப்படும்.

3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

விடை: , இய, இயர், அல்

4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

விடை:

மொழியை ஆள்வோம் (பக்க எண்: 40 )

விடுபட்ட கட்டங்களை நிரப்புக

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழெண்களை எழுதுக

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2. _

2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16. _

3. உலக இயற்கைநாள் அக்டோபர் 3. _

4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6. _

5. உலக இயற்கைச் சீரழிவுத்தடுப்பு நாள் அக்டோபர் 5. _ 

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். _ செய்தித்தொடர்

2. கடமையைச் செய் – விழைவுத்தொடர்

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! _ உணர்ச்சித்தொடர்

4. நீ எத்தனைபுத்தகங்களைப் படித்திருக்கிறாய்? _ வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

(எ.கா.) நேற்று நம் ஊரில் மழைபெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)

நேற்று நம் ஊரில் மழைபெய்ததா?

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)

விடை : என்னே,காட்டின் அழகு!

2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : பூனையின் காலில் அடிபட்டுவிட்டது

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

விடை : அதிகாலையில் துயில் எழு

4. முகில்கள் திரண்டால் மழைபெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : முகில்கள் திரண்டால் மழைபெய்யும்

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

கடிதம் எழுதுக.

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

7, தெற்கு வீதி,

மதுரை-1

11-03-2022.

ஆருயிர் நண்பா,

        நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உனது ஆருயிர் நண்பன்

க.தளிர்மதியன்.

உறைமேல் முகவரி:

     த.கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,

     சேலம்-4

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக:

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.

1. நடக்கிறது  -    நட                    

2. போனான் -  போ                       

3. சென்றனர் - செல்                    

4. உறங்கினாள் - உறங்கு            

5. வாழிய - வாழ் 

6. பேசினாள்   - பேசு

7. வருக     - வா

8. தருகின்றனர்  - தா

9. பயின்றாள் - பயில்

10. கேட்டார் - கேள்

திருக்குறள் (பக்க எண்: 45  மதிப்பீடு)

ரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.

அ) அடக்கமுடைமை  ஆ) நாணுடைமை  இ) நடுவுநிலைமை  ஈ) பொருளுடைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.

அ) வலிமையற்றவர்   ஆ) கல்லாதவர்   இ) ஒழுக்கமற்றவர்   ஈ) அன்பில்லாதவர்

3. ‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) வல் + உருவம்  ஆ) வன்மை+ உருவம்  இ) வல்ல+ உருவம்   ஈ) வல்லு + உருவம்

4. நெடுமை+ தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நெடுதேர்   ஆ) நெடுத்தேர்   இ) நெடுந்தேர்   ஈ) நெடுமைதேர்

5. ‘வருமுன்னர்’ எனத்தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.

அ) எடுத்துக்காட்டு உவமைஅணி  ஆ) தற்குறிப்பேற்றஅணி  இ) உவமைஅணி   ஈ) உருவக அணி

குறுவினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

விடை: சான்றோர்க்கு அழகாவது  நடுவுநிலைமை

2. பழியின்றி வாழும் வழியாகத்திருக்குறள் கூறுவது யாது?

விடை : தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

3. ‘புலித்தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

விடை: னத்தை அடக்கும் வல்லமைஇல்லாதவர் மேற்கொண்டவலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரைமேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

தக்கார்  தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால்  காணப்  படும்.

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்கமுற்று மிடங்கண்டபின் அல்லது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல்  லது.

கோடிட்டஇடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம்  பெற்றம்

    புலியின்தோல்  போர்த்துமேய்ந்  தற்று. 

2. விலங்கொடுமக்கள்அனையர்இலங்குநூல்                                                                                                               கற்றாரோடு ஏனை யவர்.

சீர்களைமுறைப்படுத்தி எழுதுக.

   யாழ்கோடு அன்னகொளல் கணைகொடிது

   வினைபடு பாலால் செவ்விது ஆங்கு.

கணைகொடிது  யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு  பாலால் கொளல்

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

விடை:

1.     வலியில் நிலைமையான் வல்லுருவம்  பெற்றம்

       புலியின்தோல்  போர்த்துமேய்ந்  தற்று.

விடை:

2.     கடல்ஓடா  கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

        நாவாயும் ஓடா  நிலத்து.

  இயல்-2 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை