8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 3
நோயும் மருந்தும் (பக்க எண்: 49 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உடல்நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி ஆ) பணி இ) பிணி ஈ) மணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் _______.
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
3. ‘இவையுண்டார்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) இ + யுண்டார் ஆ) இவ் + உண்டார் இ) இவை+ உண்டார் ஈ) இவை+ யுண்டார்
4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.
அ) தாம்இனி ஆ) தாம்மினி இ) தாமினி ஈ) தாமனி
குறுவினா
1. நோயின் மூன்று வகைகள் யாவை?
விடை:
ü நோய் மூன்று வகைப்படும்.
ü மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
ü எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
ü அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத்தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
விடை: நல்லறிவு , நற்காட்சி ,நல்லொழுக்கம்
சிறுவினா
நோயின் வகைகள், அவற்றைத்தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
விடை:
ü நோய் மூன்று வகைப்படும்.
ü மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
ü எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
ü அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
ü அகற்றுவதற்கு அரியவைபிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத்தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையேஅம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
சிந்தனைவினா
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் யாவை?
விடை:
v பொய்கூறாமை
v புறம்பேசாமை
v பிறர்பொருள் விரும்பாமை
v சான்றாண்மையுடன் இருத்தல்
வருமுன் காப்போம் (பக்க எண்: 52 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
அ) நிலம் ஆ) வையம் இ) களம் ஈ) வானம்
2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.
அ) நலம் + எல்லாம் ஆ) நலன் + எல்லாம் இ) நலம் + எலாம் ஈ) நலன் + எலாம்
3. இடம் + எங்கும் என்பதனை ச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல்_____.
அ) இடவெங்கும் ஆ) இடம்எங்கும் இ) இடமெங்கும் ஈ) இடம்மெங்கும்
வருமுன்காப்போம் - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை
உடலில் , உறுதி,உடையவரே
சுத்தம்,சுகம்
காலை,காற்று,காலன்
எதுகை
உடலில்,இடமும்
சுத்தம்,நித்தம்
இயைபு
பட்டிடுவாய்,விழுந்திடுவாய்
தருமப்பா,விடுமப்பா
குறுவினா
1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?
விடை: தூய்மையான காற்று,நல்ல குடிநீர்,உடற்பயிற்சி
2. அதிகமாக உண்பதா ல் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
விடை: செரிமானமின்மை,நோய்வாய்ப்படுதல்.
சிறுவினா
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
விடை:
v காலையும் ,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
v தூய்மையான காற்றைச் சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும்.
v குளித்த பிறகு உண்டு,இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
v அளவுடன் உண்ண வேண்டும்.
சிந்தனை வினா
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
விடை:
v காலையும் ,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
v தூய்மையான காற்றைச் சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும்.
v குளித்த பிறகு உண்டு,இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
v அளவுடன்
உண்ண வேண்டும்.
தமிழர் மருத்துவம் (பக்க எண்: 58 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை
2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின் ஈ) வாழ்வின்
3. உடல் எடை அதிகரிப்பதா ல் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.
அ) தலை வலி ஆ) காய்ச்சல் இ) புற்றுநோய் ஈ) இரத்தக் கொதிப்பு
4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக ஈ) உணவுக்காக
குறுவினா
1. மருத்துவம் எப்போது தொடங்கியது?
விடை: மனிதனுக்கு நோய் வந்தபோது மருத்துவம் தொடங்கியது.
2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
விடை:
§ நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி
§ அளவான உணவு
§ சத்தான உணவு
3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
விடை: வேர்,பட்டை,இலை,பூ,கனி
சிறுவினா
1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?
விடை:
ü இயற்கையை விட்டு விலகியமை
ü மாறிப்போன உணவு முறை
ü மாசு நிறைந்த சுற்றுச்சூழல்
ü மன அழுத்தம்
2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
விடை:
ü சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.
ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதா னியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ü கணினித்திரை யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
நெடுவினா
தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக
விடை:
v தமிழரது நிலம்,நிறைந்த பண்பா டுகளும் தத்துவங்க ளும் அடங்கியது.நோய்கள் எல்லாம் பேய்,பிசாசுகளால் வருகின்றன; பாவ, புண்ணியத்தால் வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களா ன சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
v நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை,சுவை இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறா க ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.
சிந்தனை வினா
நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
விடை:
ü சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.
ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதா னியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ü கணினித்திரை யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
எச்சம் (பக்க எண்: 65 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.
அ) முற்று ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்
2. கீழ்க்காணும் சொற்க ளில் பெயரெச்ச ம் _____.
அ) படித்து ஆ) எழுதி இ) வந்து ஈ) பார்த்த
3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படை யாகக் காட்டாது.
அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை ஈ) பெயரை
பொருத்துக.
நடந்து - வினையெச்சம்
பேசிய - பெயரெச்சம்
எடுத்தனன் உண்டான் - முற்றெச்சம்
பெரிய – குறிப்புப் பெயரெச்சம்.
கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த , மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.
பெயரெச்சம்: நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த
வினையெச்சம்: படுத்து, பாய்ந்து, கடந்து, , பிடித்து, பார்த்து.
சிறுவினா
1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை: பொருள் முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.
2. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
விடை: குறிப்புப் பெயரெச்சம்- செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
விடை: சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.
இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
விடை: எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலை யும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வா று செயலை யும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படை யாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
மொழியை ஆள்வோம் (பக்க எண்: 66)
பொருத்துக.
1. காக்கைஉட்காரப் பனம்பழம் விழுந்தது போல - ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்றசெயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்தநீர் போல – எதிர்பாராநிகழ்வு
5. நெல்லிக்காய்மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
விடை: 1-இ , 2-ஈ , 3-உ , 4-ஆ , 5-அ
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
1. குன்றின் மேலிட்டவிளக்கைப் போல
குன்றின் மேலிட்ட விளக்கைப்போல திருக்குறளின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது
2. வேலியேபயிரைமேய்ந்தது போல
வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களைத் துன்புறுத்துகின்றனர்.
3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
பழம் தழுவிப் பாலில் விழுந்தது போல பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.
4. உடலும் உயிரும் போல
உடலும் உயிரும் போல
கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்புடன் திகழ்ந்தனர்.
5. கிணற்றுத்தவளை போல
கினாற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்துவர்
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரைஎழுதுக.
நோயற்ற வாழ்வேகுறைவற்ற செல்வம்
முன்னுரை– நோய்வரக் காரணங்கள் – நோய்தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை– முடிவுரை
முன்னுரை . . உடல்நலம் தான் மனித வாழ்வின் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ˮ என்பர்.நாம் வாழ்வில் பெற்ற செல்வங்களை அனுபவிப்பதற்கு உடல்நலம் மிக அவசியமாகும். உலகில் மனிதன் தனக்கான ஆயுட்காலம் முழுவதும் சிரமம் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டுமாயின் நோய்களை அண்டவிடாது ஆரோக்கியமாக வாழ்ந்தால் மட்டுமே முடியும்.எனவே நோயின்றி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என இக்கட்டுரையில் காண்போம். நோய்ஏற்படக்காரணங்கள்
v நமது உடலில் நோயை ஏற்படுத்தப் பல காரணங்கள் உள்ளன. நோயானது தொற்று நோய்⸴ தொற்றா நோய்கள் என இரு வகை நோய்கள் காணப்படுகின்றன.
v மனிதன் இயற்கையை விட்டு வெளியே வந்தது தான் நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக விளங்குகின்றது. மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள் நோய் ஏற்பட மற்றுமோர் முக்கிய காரணமாக விளங்குகின்றது.
நோய் தீர்க்கும் வழிகள்
v நமது உடலில் ஏற்படும் நோய்களிற்கு பெரும்பாலானவை தவறான வாழ்க்கை முறைதான் காரணமாகின்றன. எனவே நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருதல் மூலம் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
v முடிந்தளவு இயற்கை உணவுகளை உட்கொள்வது அவசியமாகின்றது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக் கொள்ளாமல் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைத் தீர்க்க முடியும்.
v உணவினை உரிய நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும் சரியான தூக்கம் நமது நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
உணவும் மருந்தும்
நாம் உண்ணும் உணவு புரதம், கொழுப்பு,மாவுச் சத்து,கனிமங்கள்,நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற அனைத்தும் கலந்த சமச்சீர் உணவுகளாக இருக்க வேண்டும். உணவில் இவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.உணவை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்⸴ அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலந்து எளிதில் செரிமானம் அடைந்து உணவிலுள்ள சத்தானது உடலில் சேரும்.காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ண வேண்டும்⸴ அப்போதுதான் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.
உடற்பயிற்சியின் தேவை
உடற்பயிற்சியானது உடலின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும்⸴ ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும். எனவே தினமும் உடற்பயிற்சி என்பது மிகத் தேவையான ஒன்றாகும்.
முடிவுரை:
இறைவன் நமக்குக் கொடுத்த இந்த மானுட வாழ்வினை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ்வது சிறந்ததாகும். எனவே உடலை நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ வேண்டும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல் உடலை வைத்துத்தான் உயிரை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்.எனவே உடல் ஆரோக்கியத்தினைப் பேணுவோம் உயிரைப் பாதுகாப்போம். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வினை வாழ்ந்து மகிழ்வோம்.
மொழியோடு விளையாடு (பக்க எண்: 67)
கீழ்க்காணும் படம் சார்ந்தசொற்களை எழுதுக.
உரல், உலக்கை, எண்ணெய், சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், சீரகம் பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ, வத்தல், வெற்றிலை, கடுகு, கொத்துமல்லி, வெந்தையம், ஏலக்காய், கசகசா, புதினா, மல்லி
வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
1. முயற்சி திருவினை ஆக்கும்.
2. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
3. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
4. அறிவே ஆற்றல்.
5. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
6. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
7. சுத்தம் சோறு போடும்.
8. வருமுன் காப்போம்.
9. பருவத்தே பயிர் செய்.
10. பசித்து புசி.