9 TH STD TAMIL UNIT 1 QUESTION & ANSWER

 


9.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள் 

இயல்-1  

(பக்க எண்:23 கற்பவை கற்றபின்)

1. தொடர்களைமாற்றி உருவாக்குக.

அ) பதவியைவிட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.

விடை: பதவியைவிட்டு நீங்கினான்

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்–

        - இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.

விடை: மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே– இத்தொடரைச்செய்வினைத்தொடராக மாற்றுக.

விடை: உண்ணும் தமிழ்த்தேனே.

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் –

       -இத்தொடரைச் செயப்பாட்டு வினைத்தொடராக மாற்றுக.

விடை: திராவிட மொழிகள் மூன்று மொழிக்குடும்பங்களாகப்  பகுக்கப்பட்டுள்ளன.

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் பிறவினைத்தொடராக மாற்றுக.

விடை: நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தார்.

2. சொற்களைத் தொடர்களாக மாற்றுக.

அ) மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.

விடை : மொழிபெயர்த்தாள் (தன்வினை)     மொழிபெயர்ப்பித்தாள் (பிறவினை)

ஆ) பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

விடை: பதிவு செய்தான் (செய்வினை)     பதிவு செய்யப்பட்டது (செயப்பாட்டுவினை)

இ) பயன்படுத்து – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.

விடை: பயன்படுத்தினான் (தன்வினை)    பயன்படுத்துவித்தான் (பிறவினை)

ஈ) இயங்கு - செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

விடை: இயங்கினாள் (செய்வினை)    இயக்கப்பட்டாள் – (செயப்பாட்டுவினை)

3. பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.

(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களைக், நம்மை, வாழ்வியல் அறிவைக்)

அ) தமிழ் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது.

ஆ) நாம் தமிழிலக்கிய நூல்களை வாங்கவேண்டும்.

இ) புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன.

ஈ) நல்லநூல்கள்  நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

4. பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)

அ) எல்லோருக்கும் இனிய வணக்கம்.

ஆ) அவன்  நல்ல நண்பனாக இருக்கிறான்.

இ) பெரிய ஓவியமாக வரைந்து வா.

ஈ) கொடிய விலங்கிடம் பழகாதே.

5. பொருத்தமான விளையடைகளைத் தேர்வுசெய்க

   (அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

அ) ஊர்தி மெதுவாகச் சென்றது.

ஆ)காலம் வேகமாக ஓடுகிறது.

இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை அழகாகக் காட்டுகிறது.

ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் பொதுவாகக் காட்டு,

6. அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக,

அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக எழுதுக)

     நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா? (அல்லது)

     இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர் யார்?

ஆ) இசையின்றி அமையாது பாடல், (உடன்பாட்டுத் தொடராக அமைக்க)

     இசையோடு அமையும் பாடல்.

இ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக மாற்றுக)

      நீ இதைச் செய்.

7.வேர்ச்சொல்லை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

அ) தா (உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)

    தந்தேன் - உடன்பாட்டு வினைத்தொடர்

    தருவித்தேன் - பிறவினைத் தொடர்

ஆ) கேள் (வினாத்தொடர் ஆக்குக)

     கேட்டாயா? - வினாத் தொடர்

இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர் ஆக்குக)

     நீ அதைக் கொடு - செய்தித் தொடர்

     நீ கொடு - கட்டளைத் தொடர்

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டு வினைத் தொடர். பிறவினைத் தொடர் ஆக்குக)

   பார்த்தான் - செய்வினைத் தொடர்

    பார்க்கப்பட்டான் - செயப்பாட்டு வினைத் தொடர்

    பார்க்கச் செயதான் - பிறவினைத் தொடர்

 

(பக்க எண் : 25 மதிப்பீடு)

பலவுள் தெரிக


அ) 1-வங்கம், 2-மானு, 3-தாழிசை, 4-பிறவினை    ஆ) 1- தாழிசை, 2-மானு,3- பிறவினை,4- வங்கம்

இ) 1-பிறவினை, 2-தாழிசை. 3-மானு,4- வங்கம்     ஈ) 1- மானு, 2-பிறவினை, 3-வங்கம், 4-தாழிசை

விடை : அ) 1-வங்கம், 2-மானு, 3-தாழிசை, 4-பிறவினை    

2. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச்சேர்ந்தது.

அ. தொடர்நிலைச்செய்யுள்   ஆ. புதுக்கவிதை    இ. சிற்றிலக்கியம்  ஈ. தனிப்பாடல்

விடை: இ. சிற்றிலக்கியம்  

3. விடுபட்டஇடத்திற்குப் பொருத்தமான விடைவரிசையைக் குறிப்பிடுக.

அ. …………….இனம்    ஆ. வண்ணம் …………….   இ. …………….குணம்    ஈ. வனப்பு …………….

   க) மூன்று, நூறு, பத்து, எட்டு  உ) எட்டு, நூறு, பத்து, மூன்று

  ௩) பத்து, நூறு, எட்டு, மூன்று  ௪) நூறு, பத்து, எட்டு, மூன்று

விடை:    க) மூன்று, நூறு, பத்து, எட்டு

4. ”காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்

     காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!”........... இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்-

அ. முரண், எதுகை, இரட்டைத்தொடை   ஆ. இயைபு, அளபெடை, செந்தொடை

இ. மோனை, எதுகை, இயைபு      ஈ. மோனை, முரண், அந்தாதி

விடை: இ. மோனை, எதுகை, இயைபு

5. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தாமணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு –

அ. வேற்றுமைத்தொகை ஆ. ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சம் இ. பண்புத்தொகைவ் ஈ. வினைத்தொகை

விடை : ஆ. ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சம்

குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச்சேர்ந்தது?

விடை: தென் திராவிட மொழிக்குடும்பம்

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

விடை: மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
             மட்டுமே போதுமே ஓதி நட
மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய குறள் மட்டுமே போதும். அதைப் படித்து நடக்க வேண்டும்.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

விடை: இரண்டிரண்டு அடிகளால் அமையும் செய்யுள் வகை.

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக .

விடை : சுட்டி , உலாவி, திரை, தேடுபொறி, அச்சுப்பொறி.

5. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை

    அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

            இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

விடை: தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும் போர் வாழ்வைச் சொல்லும்

           புற இலக்கியங்களையும் உணர்த்துகின்றன.

6. செய்வினையைச்செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினைஎடுத்துக்காட்டுடன் எழுதுக.

விடை: படு, பெறு

7. வீணையோடு வந்தாள், கிளியேபேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

விடை:   வீணையோடு வந்தாள்செய்தித் தொடர்      கிளியே பேசுகட்டளைத் தொடர்.

சிறுவினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய  சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

விடை :

 

தமிழ்

 

எறிதிரை

 

கலன்

 

நீர்

 

நாவாய்

 

தோணி

 

கிரேக்கம்

 

எறுதிறான்

 

கலயுகோய்

 

நீரியோஸ்

 

நாயு

 

தோணீஸ்


2. திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத்தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளைவிளக்குக.

விடை:

திராவிட மொழிகள்:

    திராவிட மொழிக் குடும்பம், நில அடிப்படையில் மூன்று வகைப்படும்.

         தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்

இவற்றுள் எனக்குத் தெரிந்த மொழி தமிழ் ஆகும். அவற்றின் சிறப்பியல்புகளைக் காண்போம்.

தமிழ் மொழி:

ü  பல உலக நாடுகளில் பேசப்படும் மொழியாகவும் சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் தமிழ் திகழ்கிறது.

ü  திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழ்.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

விடை:  தமிழ்மூன்று  

             மலையாளம்மூணு   

             தெலுங்குமூடு 

             கன்னடம்மூரு

             துளு – மூஜி

4 .காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுபித்துக் கொள்கிறது?

விடை:

ü  திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாக திகழ்கின்ற தமிழ், பிற திராவிட

      மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.

ü  மூலத் திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.

ü  காலந்தோறும் தன்னைப்புதுப்பித்துக் கொள்கிறது.

5. வளரும் செல்வம் - உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக

விடை:

பிறமொழிச்சொற்கள்

சாஃப்ட்வேர்

லேப்டாப்

பிரௌசர்

சைபர் ஸ்பேஸ்

சர்வர்

தமிழ்ச்சொற்கள்

மென்பொருள்

மடிக்கணினி

உலவி

இணைய வெளி

வையக விரிவு வலை

 

6. தன்வினை, பிறவினை- எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

விடை:

   தன்வினை :   வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

                         .கா: பந்து உருண்டது.

   பிறவினை :   வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும்.

                        .கா. பந்தை உருட்டினான்

   காரணவினை :  எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது

                         .கா. பந்தை உருட்ட வைத்தான்.

7. "புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்"- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

விடை:

     (அ) பாரதியார் "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்" என்று பாடியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பிறமொழி நூல்களை நம் தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பேன்.

   (ஆ) இலக்கியங்களைக் காலக் கண்ணாடி என்றும் கூறுவர். அதனால் இன்றைய காலக் கட்டத்திற்கு நம் மாணவர்களுக்குத் தேவையானவற்றை எளிதில் பொருள்விளங்கக் கூடிய வகையில் நூல்கள் இயற்றுவேன்

    (இ) அறிவியல் சார்ந்த நூல்களை எளிமையான தமிழில் உருவாக்குவேன்.

நெடுவினா:

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாய் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகளுடன் விவரிக்க?

தமிழிலிருந்தே "திராவிடர்" - என்னும் சொல்:

    தமிழிலிருந்தே "திராவிடர்” என்னும் சொல் பிறந்தது என்று மொழியியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். "ஹீராஸ் பாதிரியார்" என்பவர் இக்கூற்றை தமிழ் தமிழா தமிலா டிரமிலா * ட்ரமிலா த்ராவிடா திராவிடா என்று விளக்குகின்றார்.

பிரான்சிஸ் எல்லிஸ் கருத்து :

     தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஆய்ந்து ஒப்புமைப்படுத்தி இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இவை "தென்னிந்திய மொழிகள்" என்றும் பெயரிட்டார்.

ஹோக்கன் - மாக்ஸ் முல்லர் கருத்து :

   ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் "தமிழியன்" என்று பெயரிட்டார். மேலும், இவை ஆரிய மொழிகளினின்று மாறுபட்டவை என்று கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

திராவிட பொழிகளுக்கான ஒப்பீட்டு அளவுகோல் தமிழே!:

   திராவிட மொழிகளுக்கான அடிச் சொல்லை மாற்றமின்றித் தொடர்ந்து வழக்கில் கொண்டுள்ள பொழிதமிழ் எனவே, திராவிட மொழிகளை ஒன்றுக் கொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, தமிழே ஒப்பீட்டு அளவுகோவாகவும் கருவியாகவும் பயன்படுகிறது.

   இவற்றின் மூலம் திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாய் இருக்கிறது என்பதை அறியலாம்.

நெடுவினா

2. "தூது அனுப்பத் தமிழே சிறந்தது" - தமிழ்விடு தூது காட்டும் காரணங்கள் விளக்கி எழுதுக.

1. சொக்கநாதருக்குத் தூது சென்ற தமிழ்:

     மதுரையில் கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட பெண்ணொருத்தி, தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான்.

2. தூது செல்வோரின் தகுதி :

    தூது செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய், இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும் குறையாமல் செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும் செய்தியைக் குற்றம் குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய் இருத்தல் வேண்டும். அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி மேற்கூறிய சிறப்புகளை உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய பாச்சிறப்பும் பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ், இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை அனுப்புகிறாள், தலைவி.

(பக்க எண் : 27 மொழியை ஆள்வோம்)

மொழிபெயர்க்க:

   1. Linguistics – மொழியியல்         2. Literature- இலக்கியம்    3. Philologist – மொழி ஆய்வறிஞர்

 

  4. Polyglot – பன்மொழி அறிஞர்  5. Phonologist – ஒலியியல் ஆய்வறிஞர்  6. Phonetics – ஒலியியல்

அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்டஇடங்களில் எழுதுக

   1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கிறது (திகழ்)

   2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில்  கலந்துகொள்வாள் (கலந்துகொள்)

   3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன (பேசு)

   4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றார்கள் (செல்)

   5. தவறுகளைத் திருத்தினான் (திருத்து)

தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:

  1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்
  2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
  3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
  4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

கடிதம் எழுதுக.
உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
                                                                                                                                           திருத்தணி,
                                                                                                                                          09-09-2023.

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

            இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                  அன்புடன்,                                                                                                                                                      

                                                                                                                                     முகிலன்.-

முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

நயம் பாராட்டுக:

    விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்

    விண்ணோங்கு பெருமலையில், பள்ளத்தாக்கில்

    பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்

    புல்வெளியில், நல்வயலில், விலங்கில், புள்ளில்

    தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

    தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,

    அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்

    அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

 

                                                                                         -  ம.இலெ. தங்கப்பா

திரண்ட கருத்து:

       பரந்து விரிந்து இருக்கின்ற நெடிய வானத்திலும், பரந்த கடற்பரப்பிலும், விண்ணைத் தொடுமாறு உயர்ந்து நிற்கும் உயரமான மலையிலும், பள்ளத்தாக்குகளில் பொழிகின்ற நீரருவியிலும், காடுகளிலும், புல்வெளிகளிலும், பசுமையான வயல்களிலும், விலங்குகளிலும், பறவைகளிலும் மட்டுமின்றி கண்ணிய தெரிகின்ற பொருட்களிலெல்லாம் நிறைந்து மனதில் தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மையான ஊற்றே, அழகு என்னும் ஒழுங்காய் அமைந்த பேரோவியமே, மெய்யே, மக்கள் மனதிலும் நீ குடியிருக்க வேண்டுகிறேன் என்கிறார் ஆசிரியர்.

மையக் கருத்து :

     இயற்கையின் சிறப்பையும், வளத்தையும், அழகையும் மக்களின் உள்ளத்தில் குடியிருக்கவேண்டும் எனக் கவிஞர் கூறுகிறார்.

மோனை நயம் :

     அடியிலோ, சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை ஆகும்.

    (எ.கா) விரிகின்ற- வின்னோங்கு

              பொழிகின்ற-புல்வெளியில்,

              தெரிகின்ற - தெவிட்டாத

எதுகை நயம் :

     அடிகளிலோ, சீர்களிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத்தொடை  ஆகும்.   

    (எ.கா) புல் வெளியில் - நல் வயலில்

இயைபு நயம் :

      அடிகளிலோ, சீர்களிலோ கடைசி எழுத்தோ, சொல்லோ ஒன்றி வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

      (எ.கா) வானில், கடற்பரப்பில், பள்ளத்தாக்கில், காட்டில், புள்ளில், நெஞ்சில்

அணி நயம்:

    உள்ளதை உள்ளவாறு இயல்பாகக் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

    (எ.கா) இப்பாடலில் ஆசிரியர் இயற்கை அழகு எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை உள்ளதை உள்ளவாறு கூறியுள்ளார்.

உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள்  (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றிளை வடிவமைக்க,

தமிழ் இலக்கிய மன்றம்

அரசு மேனிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்

உலகத் தாய்மொழி நாள் விழா

 

நிகழ்ச்சி நிரல்

v  நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

v  தமிழ்த்தாய் வாழ்த்து : இல்க்கியமன்ற உறுப்பினர்கள் (மாணவிகள்)

v  வரவேற்புரை : மூ.வேல்முருகன் (மாணவர் செயலர்)

v  தலைமையுரை : ம.செயப்பிரகாசு , தலைமை ஆசிரியர்

v  முன்னிலை : முனைவர் கா.எழில்வாணன் , தமிழாசிரியர்

v  சிறப்புரை : முனைவர் திரு.நிறைமதி , தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி, சென்னை

v  நன்றியுரை : செ. பூவிழி, 9ஆம் வகுப்பு மாணவி

மொழியோடு விளையாடு

அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

     அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையாக.

(எ.கா) அத்தி, திகைப்பு, புகழ்ச்சி, சிரிப்பு, புன்னகை, கைப்பேசி, சிறப்பு, புதுமை, மைனா

  குருவி -  விருது, துவர்ப்பு, புகழ்ச்சி, சிரிப்பு, புன்னகை

  விருது - துடுப்பு, புதிது, துணிவு

  இனிப்பு - புளிப்பு, புரட்சி, சிரிப்பு, புதிது, திகைப்பு

  வரிசையாக - கசப்பு, புலமை, மைனா 

கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க:

 

வா

 

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

நான்

வந்தேன்

வருகிறேன்

வருவேன்

நாங்கள்

வந்தோம்

வருகிறோம்

வருவோம்

நீ

வந்தாய்

வருகிறாய்

வருவாய்

நீங்கள்

வந்தீர்கள்

வருகிறீர்கள்

வருவீர்கள்

அவன்

வந்தான்

வருகிறான்

வருவான்

அவள்

வந்தாள்

வருகிறாள்

வருவாள்

அவர்

வந்தார்

வருகிறார்

வருவார்

அவர்கள்

வந்தார்கள்

வருகிறார்கள்

வருவார்கள்

அது

வந்தது

வருகிறது

வரும்

அவை

வந்தன

வருகின்றன

வருபவை

  (தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து  எழுதுக.)

அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய்ய், வினைஅடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க. (திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை)

   (எ.கா) நான் திடலில் ஓடினேன் (தன்வினை).

             திடலில் மிதிவண்டியைஓட்டினேன் (பிறவினை).

எழுவாய்/பெயர்

வினையடி

தன்வினை

பிறவினை

காவியா

வரை

 வரைந்தாள்

வரைவித்தாள்

கவிதை

நனை

நனைந்தேன்

நனைவித்தேன்

இலை

அசை

அசைந்தது

அசைத்தது

மழை

சேர்

சேர்ந்தது

சேர்த்தான்

 காவியா- வரை

     காவியா போட்டியில் வரைந்தாள். (தன்வினை)

     காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள். (பிறவினை)

கவிதை - நனை

      கவிதை மழையில் நனைந்தேன்.  (தன்வினை)

     இரகு கவிதை மழையில் நனைவித்தான்.  (பிறவினை)

இலை - அசை

      இலை வேகமாக அசைந்தது. (தன்வினை)

     காற்று இலையை வேகமாக அசைவித்தது (பிறவினை)

மழை - சேர்

      மழை மண்ணை சேர்ந்தது. (தன்வினை)

     மழைநீரை மண்ணில் சேர்த்தான். (பிறவினை)

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

   ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத     

   என்னை எழுது என்று சொன்னது

   இந்தக் காட்சி!    

   முயற்சியைப் பற்றி எழுதினேன்!

   அனைவரும் இதன் அருமை அறிந்து

   நடக்க வேண்டும்!

    வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்!

 மற்ற இயல்களுக்கு விரைவில் பதிவிடப்படும். தொடர் பதிவுகளுக்கு தமிழ்ப்பொழில் புலனத்துடன் இணைந்திருக்க. 

இயல்-1 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇



 

 

 

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை