10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 2 ND WEEK

 10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 09-10-2023 முதல் 13-10-2023        

மாதம்         அக்டோபர்  

வாரம்     :  இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.மெய்க்கீர்த்தி

                                            2.சிலப்பதிகாரம்

                                            3.மங்கையராய்ப் பிறப்பதற்கே    

1.கற்றல் நோக்கங்கள்   :

       @ நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் ப ங்களிப்பினைக் கலை நிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெ றுதல்

க   @காப்பியம்,மெய்க்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?

      Ø  இரட்டைக் காப்பியங்கள் யாவை?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   Ø  இரண்டாம் இராசராச சோழனைப்பற்றியது நமது பாடப்பகுதி(மெய்க்கீர்த்தி)

    Ø  ஒன்றன் இன்மையால் மற்றொன்றன் சிறப்பு விளக்கப்படுகிறது

     Ø  சிலப்பதிகாரம் -புகார்க்காண்டம்-இந்திரவிழா ஊரெடுத்த காதை

      Ø  மரூவூர்ப்பாக்க வணிக வீதிகளின் நிலை

      Ø  எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரசுவதி,இராஜம் கிருஷ்ணன்,கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்,மதுரை சின்னப்பிள்ளை

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.

     Ø செய்யுட்பகுதியை இசையுடன் படித்தல்

     Ø  பகுபத உறுப்பிலக்கணம் கூறுதல்

     Ø  இலக்கணக்குறிப்பை விளக்குதல்

     Ø  செய்யுட்கருத்தை உரிய சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

மெய்க்கீர்த்தி

சிலப்பதிகாரம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே

7.மாணவர் செயல்பாடு:

    Ø தமிழரின் வாழ்வியலின் அங்கமான புறப்பொருளை அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. கரிப்பு மணிகள் என்ற நாவலை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. பாடாண் திணையை விளக்குக
2.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  3 பெண்கல்வி ஏன் அவசியம்? விளக்குக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

@ 1038- நாட்டின் பன்மொழி வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை