HALF YEARLY EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY(CHENNAI, CHENGALPAT)


சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு 

(சென்னை, செங்கல்பட்டு ஒரே வினாத்தாள்)

வினாத்தாளைப் பதிவிறக்க👇

 

அரையாண்டுப்பொதுத்தேர்வு-2023, சென்னை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

.  மணி வகை

1

2.     

அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

1

3.     

இ. வலிமையை நிலை நாட்டல்

1

4.     

ஆ. கோவை

1

5.     

அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

1

6.     

ஈ. நெறியோடு நின்று காவல் காப்பவர்

1

7.     

ஆ. இல்லாததைதைக் கற்பனை செய்தல்

1

8.     

. அதியன், பெருஞ்சாத்தன்

1

9.     

இ. சிரித்துச் சிரித்துப் பேசினார்

1

10.    

ஈ. புதுமை

1

11.    

இ. உயிரினும் ஓம்பப்படும்

1

12.   

ஆ. தூசும், மாசு அறு

1

13.   

ஈ. சிலப்பதிகாரம்

1

14.   

இ. பவளம்

1

15.   

அ. இளங்கோவடிகள்

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு , நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு

2

17

   இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான்.

2

18

  இயந்திரமனிதன்,செயற்கைக்கோள் போன்றன

2

19

தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

2

20

அ. ஒரு செயலைச் செய்வதற்கான வழிகளை எதன்வழியாக அறிந்திருக்க வேண்டும்?

ஆ.எவற்றை அறிந்து செயல்பட வேண்டும்?

2

21

செயற்கை  அறிந்தக்  கடைத்தும்  உலகத்

தியற்கை  அறிந்து  செயல்.

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

நேர்+நேர்+நேர்    நேர்+நேர்    நிரை

தேமாங்காய்       தேமா          மலர்

2

23

வரும் + தாமரைவரும் தாமரை மலர்

வருந்தா + மரைதுன்புறாத மான்

வருந்து + + மரைதுன்புறும் பசுவும் மானும்

2

24

பெயர் , வினை , வினா

2

25

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி,  சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி,  நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினை வூட்டி,  விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்,  - ம.பொ.சி.

2

26

அ. தன்னம்பிக்கை  ஆ. தத்துவவியலாளர்

2

27

# குறவர் மலையில் தேன் எடுத்தனர்.

 # நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

 

2

28

மயங்கிய மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு பகுதி இ(ன்) இறந்தகால இடைநிலையுட‘ன்புணர்ந்து கெட்டது. ய் உடம்படுமெய் அ - பெயரெச்ச விகுதி

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

@ கதாசிரியர் ஊர் திரும்புவதற்கு பன்னிரண்டணா போக மீதியைச் செலவு செய்தார்.        

   இரண்டணாவை பிச்சைக்காரனுக்குத் தருமம் செய்தார்.
  @ பயணச்சீட்டு விலை ஏறி இருந்ததை அறியாத கதாசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.
  @ பிச்சைக்காரன் தட்டில் இருந்து தான் போட்ட இரண்டனாவை எடுத்துக்கொண்டு

     ஓரணாவைத் திருப்பி போட்டார்.
  @ பிச்சைக்காரன் பேசிய வார்த்தைகள் அவரது மனதை மாற்றியது. திரும்பவும் தான்        எடுத்த சில்லறையை அந்த தட்டிலேயே போட்டுவிட்டார்.

3

30

சோலைக்காற்று :         இயற்கையில் பிறக்கிறேன்

மின்விசிறிக்காற்று :     செயற்கையில் பிறக்கிறேன்

சோலைக்காற்று :         காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள்

மின்விசிறிக்காற்று :     இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது

                                    இருப்பிடங்கள்

(மாதிரி உரையாடல்)

3

31

. வீரமற்றோர் , புறமுதுகிட்டோர்

. வீரமற்றோர் , புறமுதுகிட்டோர்  ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமை

. மற்றவர் மகிழ்ச்சியை நாடுவது

3

 

                                                                 

 

 

பிரிவு-2                                                                       2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்

ü  இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது).

3

33

விடைக்கேற்ற வினாவைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

3

34

 

.  

   நவமணி வடக்கயில்போல்

          நல்லறப்படலைப்பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

    தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

    துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

           ஒலித்து அழுவ போன்றே.

.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

   வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

   எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

    போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன் பான்

     ஒழுக்கமும் வழிபடும் பண்பே

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

    கூவிளம்  தேமா  புளிமாங்காய்  கூவிளம்

    கூவிளம்  தேமா  மலர்

3

36

 நிரல்நிரையணி  - சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

3

37

மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பூங்கொடி- பண்புத்தொகை 

ஆடுமாடு -உம்மைத்தொகை

 

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

      )

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது.

5

39

அ)

ü  அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

(அல்லது)

ஆ)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42 .

வினாவுக்கேற்ற விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக

) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. 

5

 

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) வினாவுக்கேற்ற விடை எழுதியிருப்பின் முழுமதிப்பெண் வழங்குக

) தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

8

44

, வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

ஆ)

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

8

45

, . முன்னுரை, பொருளுரை(உட்தலைப்புகள்) , முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

  விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை