10 TH STD TAMIL MODEL REVISION PLAN -JANUARY 3 RD WEEK

10.ஆம் வகுப்பு - தமிழ்

ஜனவரி மூன்றாம் வாரம்- திருப்புதல் திட்டம்


தேர்வு நோக்கிலான திட்டமிடல்:

படிநிலை:1 (வகைப்படுத்துதல்)

    நடந்து முடிந்த   அரையாண்டுத் தேர்வு மற்றும் முதல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மூன்று நிலைகளாகப் பிரித்தல்.

நிலை 1:      மீத்திற மாணவர்கள் (75 மதிப்பெண்களுக்கு மேல்)

நிலை 2:     சராசரி திறனுடையோர்  (41-75 மதிப்பெண்)

நிலை 3:     திறன் குறைபாடு உடையோர்  (11-40 மதிப்பெண்)

(குறிப்பு: ஒருமாதம் கழித்து இந்நிலைகள் மேலும் பல நிலைகளாக அதிகரிக்கப்படும்)

படிநிலை:2 (பயிற்சி வினாக்கள்)

நிலை-1 மாணவர்கள்:

  •     எட்டு மதிப்பெண் (நெடு) வினாக்கள்  , ஐந்து  மதிப்பெண் வினாக்கள்  

1. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க .

2. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

3.  ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் 'செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

4. "அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்" என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.

5. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

6. தொகாநிலைத்தொடர் வகைகளைச் சான்றுடன் விளக்குக.

7. வழு , வழா நிலை வகைகளைச் சான்றுடன் விவரித்து எழுதுக

8. பா நயம் பாராட்டல்

           நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

              நேர்ப்பட வைத்தாங்கே

        குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

              கோல வெறிபடைத்தோம்;

        உலாவும் மனச்சிறு புள்ளினை எங்க ணும்

               ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

         பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                  பாடுவதும் வியப்போ?                                                                      பாரதியார்

9. தற்குறிப்பேற்ற அணி , தீவக அணியைச் சான்றுடன் விளக்குக.

நிலை-2 மாணவர்கள்:

  •      ஐந்து மதிப்பெண் வினாக்கள்‌

1. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

2. மொழிபெயர்க்க.

      Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.

3. பழமொழிகளை நிறைவு செய்க.

      1. உப்பில்லாப் _________    2. ஒரு பானை __________   3. உப்பிட்டவரை _________

      4. விருந்தும் ________    5. அளவுக்கு _________

4. நயம் பாராட்டுக.

       நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

              நேர்ப்பட வைத்தாங்கே

        குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

              கோல வெறிபடைத்தோம்;

        உலாவும் மனச்சிறு புள்ளினை எங்க ணும்

               ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

         பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                  பாடுவதும் வியப்போ?                                                                      பாரதியார்

5. தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி; திறன்பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும்  தங்கை;

   காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்;

   எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி

இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவை க்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.

6. தற்குறிப்பேற்ற அணி , தீவக அணியைச் சான்றுடன் விளக்குக.

நிலை-3 மாணவர்கள்:

  •   ஒரு மதிப்பெண் வினாக்கள்

1) "சிலம்பு அடைந்திருந்த பாக்க ம் எய்தி" என்னும் அடியில் பாக்க ம் என்பது---------                          

2) அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது---

3) காசிக்கா ண்டம் என்பது--------

4) 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்ட தால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தா ன் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-------

5) 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?

6) பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

7) குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா ' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற் றுள்ள வழுவமைதி முறையே---------

8) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

9) ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் பெயரெச்சங்கள் ----------

10) மலைபடுகடாம் ----- எனவும் அழைக்கப்படுகிறது.

11) முல்லைப்பாட்டு------- நூல்களுள் ஒன்று

  • இரு மதிப்பெண்(குறு) வினாக்கள்.

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

2. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' எ ன அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

3 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

4. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொ டர்களில் எழுவாயுடன் தொ டரும் பயனிலைகள் யாவை?

5. 'நச்சப் படாதவன்' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

6. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக. எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

7. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

8. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

9. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

10. கலைச்சொல் தருக : ) Ancient literature  ) Cosmic rays

11. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

      1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் .........

      2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ……

       3. கல் சிலை ஆகுமெனில், நெல் .......... ஆகும்.

       4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து.......

(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)

12. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

      அ) இயற்கை - செயற்கை   ஆ) கொடு - கோடு    இ) கொள் – கோள்   ஈ) சிறு - சீறு

11. விருந்தினனாக.... எனத்தொடங்கும் வாழ்த்துப்பாடல்.

12. “முயற்சி----எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

13. ” ------கண்என முடியும் குறளை அடிமாறாமல் எழுதுக.

PDF வடிவில் பதிவிறக்க👇👇

திருப்புதல் திட்டம் வடிவமைப்பு:

முனைவர் திரு.க.பொன்னம்பலவாணன்,

தமிழாசிரியர்,

அரசினர் உயர்நிலைப்பள்ளி,

தணிகைப்போளூர்,

இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

அலைபேசி எண்: 9445700145

 

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை