முதல் திருப்புதல் தேர்வு - ஜனவரி 2024
10.ஆம் வகுப்பு - தமிழ்
வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
முதல் திருப்புதல் தேர்வு-2024 ஜனவரி, புதுக்கோட்டை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
இ. ஐந்தாம் திருமொழி |
1 |
2. |
ஈ . ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடை அளிப்பது |
1 |
3. |
அ. சடையப்ப வள்ளல் |
1 |
4. |
ஆ. கம்பர் |
1 |
5. |
ஈ. வறுமை (பாடநூல் ,பக்கம்: 156) |
1 |
6. |
ஆ. மாலை |
1 |
7. |
ஈ.
உற்றது உரைத்தல் |
1 |
8. |
இ.
8 |
1 |
9. |
ஈ. திணை வழுவமைதி |
1 |
10. |
ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
11. |
கம்பராமாயணம் |
1 |
12. |
வெய்யோன்+ஒளி |
1 |
13. |
மேகம் |
1 |
14. |
வினைத்தொகை |
1 |
15. |
சீதை |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
#
மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார் # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார் # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியப்பங்கு
வகிக்கிறது. |
2 |
18 |
அருளைப்பெருக்க கல்வி கற்போம், அறிவைத்திருத்த
கல்வி கற்போம் |
2 |
19 |
ü பொய்யான வாழ்வு முடியப்போகிறது. ü காலனின் தூதர் கையில் உறங்குவாய் என்கிறார்கள் |
2 |
20 |
இகழ்ந்து ஏளனம் செய்யாமல்
பொருள் கொடுப்பவரைக்கண்டால், இரப்பவரின்
உள்ளத்தின் உள்ளேமகிழ்ச்சி பொங்கும். |
2 |
21 |
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை
பொருள். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
அ. மாலையில் மலை
ஏறினான் ஆ. பள்ளி விட்டதும் வீட்டிற்குச்
சென்றான் |
2 |
23 |
பொறி+த்+த்+அ பொறி – பகுதி , த் –சந்தி, த் –இறந்தகால இடைநிலை
, அ – பெயரெச்ச விகுதி |
2 |
24 |
குறள்வெண்பாஎன்பது
வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். |
2 |
25 |
#
மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா வினா # மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? - ஐய வினா |
2 |
26 |
2 |
|
27 |
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக்
காது கேட்குமா? எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடியிருக்கும்.
மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது.காகத்திற்குக் காது உண்டு.
காது கேட்கும். |
2 |
28 |
அ. அமைச்சரவை ஆ. பக்தி இலக்கியம் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
அ. புறநானூறு காலத்திலிருந்து ஆ. பூக்களை நாடிச்சென்று தேன்பருகும் வண்டுகள் இ. சங்க இலக்கியம். |
3 |
30 |
# மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.
# செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
# மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.
# வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவியுள்ளது |
3 |
31 |
முல்லை நிலம்-வரகு,சாமை,முதிரை மருத நிலம் -செந்நெல்,வெண்ணெல் |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
வாழ்வைத்
தொலைக்காமல் தற்காத்து வாழ்வதற்காக |
3 |
|
33 |
ü
கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü
கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü
கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü
கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
குட்டி- மரபு
வழுவமைதி இலட்சுமி கூப்பிடுகிறாள்-திணை வழுவமைதி இதோ சென்றுவிட்டேன் – கால வழுவமைதி அவனை
– பால் வழுவமைதி |
3 |
||||||||||||||||||||||||
36 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில்
அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது கோவலன் கண்ணகியை,”மதுரை நகருக்குள் வரவேண்டாம்”எனக் கூறி, கையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை
ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
ü அ.
குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் தன்
தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் (அல்லது) ஆ)
கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:
”பூமித் தாயே என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக”
எனக் கருணையன் வேண்டினான். குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல் மலர்களையும் தன்
கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன் தாயை இழந்து வாடுதல்: என் தாய் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில்
ஒரு மணிமாலைபோல் அசைந்து அழகுற வாழ்ந்தேன்.இளம் பயிர்
வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி
இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று
கருணையன் வருந்தினான். கருணையனின் தவிப்பு: ”எனது மனம் பரந்த மரக்கிளையில் இருந்து
பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது. தீயையும்,நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின்
வலியால் வருந்துவது போன்றது எனது துயரம்.துணையைப்
பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். தனித்து விடப்பட்ட கருணையன்: “எனக்கு உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது
உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான் உணர்கிறேன்.உடலுக்கு
வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளை என்னால் அறிய
முடியவில்லை. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.
எனது தாய் தன் கையால் காட்டிய முறைகளை
மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு
விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே” என்று
அழுது புலம்பினான் பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: நவமணிகள் பதித்த மணி மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை
மாலையாக அணிந்த கருணையன் இவ்வாறெல்லாம் அழுது
புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை
இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே கூச்சலிட்டன. |
5 |
39 |
அ)
மற்றும் ஆ) ஆகிய இரு வினாக்களுக்கும் ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ)
1. குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2. உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3. விளையாட்டு களத்திற்குச் சென்று
விளையாடுதல். 4. நூல்களைப் படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல்,
அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்.. ஆ) கலைஞர்களால் தெருவில் இசை நாடகம்
போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம்
போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள்
மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து
இருபது கலைஞர்கள் ஒரு குழுவாக “ கூத்து
குழு “ ஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள்
குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான
உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக
முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை. |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ. ü “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்
கம்பர். ü சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார். ü பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள
சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது. ü குளத்தில் பூத்திருந்த மலர்களைப்பற்றிக் கூறும்போது சந்த
சொற்களைச் சிறப்பாகக் கையாள்கிறார். ü இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில்
வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம் (அல்லது) ஆ) கேட்கப்பட்ட
வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு, பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு
மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
அ. ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால.
கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல்
எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து
இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று
கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். ஆ. கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. |
8 |
45 |
அ, முன்னுரை: இந்தியாவில்
பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை
நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி
இக்கட்டுரையில் காண்போம். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா
சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய
பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில்
விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. நமது கடமை: விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு
செய்யக்கூடாது. முடிவுரை: “வானை அளப்போம்,
கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப்
படைக்க வேண்டும். ஆ. முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும்
இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும்
இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு
30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும்
பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும்
நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன்
விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும்
நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற
அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். |
8 |